Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெரியார் | periyār n. <>பெரு-மை. [K. piriyar.] 1. The aged; மூத்தோர். 2. The great; 3. Saints, sages; 4. Kings; |
| பெரியாழ்வார் | periyāḻvār n. <>பெரிய+ஆழ்வார். A Vaiṣṇava saint and hymnist, one of ten āḻvār, q. v.; ஆழ்வார் பதின்மருள் ஒருவர். பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வா ரென்னும் பெயர் (உபதேசரத்.18). |
| பெரியோர் | periyōr n. See பெரியார். பெரியோர் கண்டு கைவிட்ட மயல் (நாலடி, 43). (திவா.) . |
| பெரியோர்பெருமான் | periyōr-perumāṉ n. <>பெரியோர்+. Brahmā, as Lord of Sages; பிரமன் மேலைப் பெரியோர்பெருமான் படைத்தான் (சீவக. 2066). |
| பெரியோன் | periyōṉ n. <>பெரு-மை. 1. Great man; உயர்ந்தோன். கருணையினாற் பெரியோ னொருவன் (திருவாச. 44, 2). 2. God, as the Great; |
| பெரு - த்தல் | peru- 11 v. intr. cf. brh. [T. perugu M. peruguga.] 1. To grow thick, large, stout; பருத்தல். 2. To become numerous; |
| பெருக்க | perukka adv. <>பெருகு-. Greatly, intensely; மிகுதியாய். ஏன் நீ பேராசைகொண்டு பெருக்கத் தவிக்கிறாய்? Loc. |
| பெருக்கம் | perukkam n. <>id. 1. Increase, augmentation; வளர்ச்சி. 2. Multiplicity, plentifulness, abundance; 3. Prosperity, opulence, wealth; 4. Flood, deluge; 5. Fulness, perfection; 6. Long continuance, as of the tāli worn by a married woman; |
| பெருக்கம்பண்ணு - தல் | perukkam-paṇṇu- v. tr. <>பெருக்கம்+. To glean grains scattered on the threshing-floor; களத்துப் பரவிய நெல்லைக் கையாற் கூட்டுதல். (J.) |
| பெருக்கமரம் | perukkal n. <>id.+. Baobab. See பப்பரப்புளி. (L.) . |
| பெருக்கல் | perukkal n. <>பெருக்கு-. 1. Sweeping; குப்பை கூட்டுகை. 2. (Arith.) Multiplication; 3. Improving, making prosperous; |
| பெருக்கல்வாய்பாடு | perukkal-vāypāṭu n. <>பெருக்கல்+. (Arith.) Multiplication table; எண்களைப் பெருக்குவதாலுண்டாம் தொகையைக் காட்டும் வாய்பாடு. |
| பெருக்கலங்காரம் | perukkalaṅkāram n. <>பெருக்கு-+. (Rhet.) Hyperbole; அதிசயவணி. (வீரசோ. அலங். 25, உரை.) |
| பெருக்கற்கணக்கு | perukkaṟ-kaṇakku n. <>பெருக்கல்+. (Arith.) See பெருக்கல், 2. . |
| பெருக்கன் | perukkaṉ n. <>பெருக்கு. That which is coarse; பரும்படியானது. (W.) |
| பெருக்காச்சவட்டு | perukkāccavaṭṭu n. (யாழ். அக.) 1. Indifference; கவனமின்மை. 2. Disgust; |
| பெருக்காளர் | perukkāḷar n. <>பெருக்கு+ஆள்-. 1. Grandees, noblemen; சிறப்புடையோர். (W.) 2. Men of the šūdra caste; |
| பெருக்காறு | perukkāṟu n. <>id.+ஆறு. River in floods; பெருகியோடும் நதி. செல்வமோ பெருக்காறு போலாம் (குமரே. சத. 67). |
| பெருக்கி | perukki n. perh. பெருக்கு-. Seme virile; சுக்கிலம். (சங். அக.) |
| பெருக்கிவிடு - தல் | perukki-viṭu- v. intr. prob. பெருகு-+. To run away; ஒடிவிடுதல். Loc. |
| பெருக்கு - தல் | perukku- 5 v. tr. Caus. of பெருகு-. [T. perugu K. percisu M. perukkuga.] 1. To cause to increase or abound; to make greater; விரியச் செய்தல். வாரி பெருக்கி (குறள், 512). 2. To fill; to cause to swell and overflow; 3. To dilute with water, as buttermilk; 4. To sweep; 5. (Arith.) To multiply; |
| பெருக்கு | perukku n. <>பெருகு-. 1. Flood, inundation; வெள்ளம். ஆற்றுப் பெருக்கற்று (நல்வழி, 9). (பிங்.) 2. Ebb of the tide; 3. Height of the circulation of the blood which is supposed to ebb and flow daily like the tide; 4. Influx, as of wealth; 5. See பெருக்கற்கணக்கு. (யாழ். அக.) 6. See பெருக்குத் தொகை. 7. Baobab. See பப்பரப்புளி. (மலை.) |
