Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருக்குக்கணக்கு | perukku-k-kaṇakku n. <>பெருக்கு+. See பெருக்கற்கணக்கு. (யாழ். அக.) . |
| பெருக்குத்தொகை | perukku-t-tokai n. <>id.+. (Arith.) Product; இரண்டு எண்களைப் பெருக்கியதாற் கூடிய தொகை. |
| பெருக்குமெண் | perukkum-eṇ n. <>பெருக்கு-+. (Arith.) Multiplier; மற்றொன்றைப் பெருக்குதற்கு உரிய எண். Mod. |
| பெருக்குரல் | peru-k-kural n. <>பெரு-மை+. (Mus.) Cracked voice; பாடுகையில் தோன்றும் வெடித்த குரல். (திருவாலவா. 57, 26.) |
| பெருக்குவேளை | perukku-vēḷai n. <>பெருக்கு+. 1. Time of the flow of tide; கடலின் நீரேற்றக்காலம். (W.) 2. Time of the day when the circulation of the blood is at its height; 3. Midday; |
| பெருக்கெடு - த்தல் | perukkeṭu- v. intr. <>id.+. To flood, as a river; to ebb, as a tide; வெள்ளம் அதிகமாதல். |
| பெருக | peruka adv. <>பெருகு-. Fully, abundantly; prosperously; நிரம்ப. பெருக வாழ். |
| பெருகல் | perukal n. <>id. Abundance; மிகுதி. (பிங்.) |
| பெருகளர்வா | peru-kaḷarvā n. <>பெரு-மை+. Large tooth brush tree, s. tr., Salvadora oleoides; மரவகை. (M. M. 913.) |
| பெருகளற்றுவட்டம் | perukaḷaṟṟu-vaṭṭanm n. <>பெருகு-+அளறு+. See பெருங்களிற்று வட்டம். (பிங் ms.) . |
| பெருகியல் | perukiyal n. <>id.+. (Mus.) A class of primary melody-types, one of four cāti-p-perum-paṇ, q. v.; சாதிப்பெரும்பண் நான்கனுள் ஒன்று. (கந்தபு. சூரனர. 23.) |
| பெருகியன்மருதம் | perukiyaṉ-marutam n. <>பெருகியல்+. (Mus.) A primary melody-type; பண்வகை. (சிலப். 8, 39.) |
| பெருகு 1 - தல் | peruku- 5 v. intr. [K. percu.] 1. To increase in numbers, multiply, spread; to abound; அளவுமிகுதல். 2. To become full; to be perfected; 3. To rise, swell; to overflow, as water; 4. to be increased, augmented or enlarged; to grow great, prosper; 5. To come to maturity, as embryo; 6. To grow; 7. To bring prosperity; 8. To snap, as the thread of the marriage badge, used euphemistically; 9. To be injured, ruined, used euphemistically; 10. To be put out or extinguished, used euphemistically; |
| பெருகு 2 | peruku n.prob.பெருகு-. [T.perugu.] Curdled milk ; தயிர்.(பிங்.) |
| பெருகு 3 | peruku n. An ornament ; அணிகலவகை.(அக. நி.) |
| பெருகுசாதி | peruku-cāti n. <>பெருகு-+. (Mus) A sub-variety of paṇṇiyaṟṟiṟam; பண்ணியற்றிறவகைகளுள் ஒன்று. (சிலப்.13, 110-12, உரை.) |
| பெருங்கட்டி | peru-ṅ-kaṭṭi n. <>பெரு-மை+. Abscess ; பிளவை. |
| பெருங்கட்டுக்கொடி | peru-ṅ-kaṭṭu-k-koṭi n. <>id.+. A milky creeper ; பாலுள்ள கொடிவகை. (பதார்த்த. 325). |
| பெருங்கடப்பு | peru-ṅ-kaṭappu n. <>id.+. A kind of paddy; கடப்பநெல்வகை. (A.) |
| பெருங்கடி | peru-ṅ-kaṭi n. <>id.+. Ringworm ; படைநோய்வகை. (யாழ்.அக.) |
| பெருங்கடை | peru-ṅ-kaṭai n. <>id.+. Big bazaar street ; பெரிய கடைவீதி . Nā. |
| பெருங்கண்ணாடிவிரியன் | peru-ṅ-kaṇṇāṭi-viriyaṉ n. <>id.+. Large glass viper; விரியன்பாம்புவகை.(M. M.) |
| பெருங்கணக்கு | peru-ṅ-kaṇakku n. <>id.+. 1. Large amount; பெருந்தொகை. 2. That which is on a large scale; 3. Arrogance ; |
| பெருங்கணி | peru-ṅ-kaṇi n. <>id.+. Chief astrologer; தலைமை நிமித்திகன்.ஆசான் பெருங்கணி யறக்களத் தந்தணர் (சிலப், 22, 8). |
| பெருங்கதை | peru-ṅ-katai n. <>id.+. 1. Very long story; நீண்ட கதை. 2. General report, thing well known ; 3. Last reading of piḷḷaiyār-katai in a temple ; 4. A Tamil poem by koṅku-vēḷ containing the story of Utayaṇaṉ, being an adoption of Bṟhātkatā; |
