Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருங்கார் | peru-ṅ-kār n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பெருங்காராமணி | peru-ṅ-kārāmaṇi n. <>id.+. A kind of gram; காராமணிவகை. (W.) |
| பெருங்காரை | peru-ṅ-kārai n. <>id.+. 1. Grey emetic nut, s. tr., Randia uliginosa; ஒரு வகைச் சிறுமரம். 2. A large species of kārai fish; |
| பெருங்கால் 1 | peru-ṅ-kāl n. <>id.+ கால்1. 1. Elephantiasis; யானைகால். 2. Major channel; |
| பெருங்கால் 2 | peru-ṅ-kāl n. <>id.+ கால்3. See பெருங்காற்று. பெருங்காலெறிய (திருக்கருவை. பதிற்றுப்.). (W.) . |
| பெருங்காற்பிடி - த்தல் | peru-ṅ-kār-piṭi- v. tr. <>பெருங்கால்1+. To have one's feet benumbed; கால் திமிர்ப்பட்டுப் போதல். Nā. |
| பெருங்காற்றரிசு | peru-ṅ-kāṟṟaricu n. <>பெரு-மை + கால்4+. Land left waste for more than fifteen years ; பதினைந்து வருடங்கட்கு மேலாகப் பயிரிடப்படாடத நிலம். (W. G.) |
| பெருங்காற்று | peru-ṅ-kāṟṟu n. <>id.+. Storm, gale; புயற்காற்று. |
| பெருங்கிடை 1 | peru-ṅ-kiṭai n. <>id.+ கிடை3. A large species of sola pith; நெட்டிவகை. |
| பெருங்கிடை 2 | peru-ṅ-kiṭai n. <>id.+கிட-. Continued illness ; நோயால் நெடுங்காலம் படுக்கையிற் திடக்கை. |
| பெருங்கிரந்தி | peru-ṅ-kiranti n. <>id.+. 1.Affection of the mesenteric gland, Mesenteritis; வயிற்றுநோய்வகை. (W.) 2. See பெருங்கிருமி. Loc. |
| பெருங்கிராமம் | peru-ṅ-kirāmam n. <>id.+. Major village, having 500 families; 500 குடியுள்ள ஊர். (சூடா.) |
| பெருங்கிருமி | peru-ṅ-kirumi n. <>id.+. A parastic mematoid worm, Ascaris lumbricoides; வயிற்றுக் கிருமிவகை. (M. L.) |
| பெருங்கிழங்கு | peru-ṅ-kiḻaṅku n. <>id.+. [M.perkkilau.] Indian birthwort . See பெருமருந்து. (மலை.) . |
| பெருங்கிழமை | peru-ṅ-kiḻamai n. <>id.+. 1. Entire or sole right, absolute title; முழுவுரிமை. (அக. நி.) 2. Close friendship or intimacy ; |
| பெருங்கிளிச்சல் | peru-ṅ-kiḻiccal n. <>id.+. A sea-fish, bluish, Caesio chrysozona; நீலநிறமுள்ள கடல்மீன்வகை . |
| பெருங்கிளுவை | peru-ṅ-kiḷuvai n. <>id.+. Hill balsam tree; See கிளுவை. (W.) . |
| பெருங்கிளை | peru-ṅ-kiḷai n. <>id.+. Wide circle of relations ; பரந்த சுற்றத்தாரையுடைய குடும்பம். |
| பெருங்கீரை | peru-ṅ-kirai n. <>id.+. A species of greens ; ¢கீரைவகை. (W.) |
| பெருங்கீழ்வட்டம் | peru-ṅ-kīḻ-vaṭṭam n. <>id.+. A hell, one of eḻu-narakam , q.v.; எழுநரகத்தொன்று. (பிங்.) |
| பெருங்குடல் | peru-ṅ-kuṭal n. <>id.+. Large intestine, colon ; குடற்பிரிவு. (M. L.) |
| பெருங்குடி | peru-ṅ-kuṭi n. <>id.+. 1. Noble family ; உயர்குடி. 2. See பெருங்குடிவாணிகர். இசைவிளக்கு பெருங்குடி மாசாத்துவாணிகன்(சிலப். 20, 57-8). |
| பெருங்குடியர் | peru-ṅ-kuṭiyar n. <>பெருங்குடி. See பெருங்குடிவாணிகர்.(சீவக. 1756 ,உரை.) . |
| பெருங்குடியாட்டம் | peru-ṅ-kuṭi-y-āṭṭam n. <>id.+. Village headship ; நாட்டாண்மை. நடுவில் பெருங்குடியாட்டமும் என்னென்பதுதான் (ஈடு, 3, 5, 6). |
| பெருங்குடிவாணிகர் | peru-ṅ-kuṭi-vāṅikar n. <>id.+. An ancient caste of merchants ; வணிகருள் ஒரு பிரிவினர் . பெருங்குடிவாணிகன் பெருமட மகளே (சிலப். 2, 76) . |
| பெருங்குமிழ் | peru-ṅ-kumiḻ n. <>பெரு-மை. Coomb teak, l.tr., Gmelina arborea; மரவகை. (பதார்த்த. 215.) |
| பெருங்குயம் | peru-ṅ-kuyam n. <>id.+. An ancient title, conferred on potters; குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர். குலாலற் கேற்பப் பெருங்குய மருளி (பெருங். வத்தவ. 9, 48). |
| பெருங்குருகு | peru-ṅ-kuruku n. <>id.+. 1. A fabulous bird; யானையுண்குருகு. (பிங்.) 2. A treatise on music of the first ṣaṅgam , not now extant; |
| பெருங்குருந்து | peru-ṅ-kuruntu n. <>id.+. Indian wild-lime. See காட்டெலுமிச்சை. (L.) . |
| பெருங்குரும்பை | peru-ṅ-kurumpai n. <>id.+. Bowstring hemp, stemless plant, Sanseviera zeylanica; சிறுசெடிவகை. |
