Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருஞ்சோற்றுவஞ்சி | peru--cōṟṟu-vaci n. <> id.+. See பெருஞ்சோற்றுநிலை. பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் (சிலப். 25, 144). . |
| பெருஞ்சோறு | peru--cōṟu n. <>பெரு-மை+. 1. Sumptuous feast given by a king to the generals of his army; அரசன் தன் படைத்தலைவர்க்கு அளிக்கும் பேருணவு. உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை (அகநா. 233). 2. The second nakṣatra; |
| பெருந்தக்காளி | peru-n-takkāḷi n. <>id.+. Indian winter-cherry, Physalis peruviana; தக்காளிவகை. (L.) |
| பெருந்தகரை | peru-n-takarai n. <>id.+. West Indian bead tree, s. tr., Leucaena glanca; ஒருவகைச் சிறுமரம். (L.) |
| பெருந்தகளி | peru-n-takaḷi n. <>id.+. Multifaced oil-lamp; பலமுகங்களை யுடையவிளக்கு. |
| பெருந்தகை | peru-n-takai n. <>id.+. 1. Noble minded person; பெருமையுள்ளவ-ன்-ள். பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை (நெடுநல். 106). 2. See பெருந்தன்மை. 3. Great beauty; |
| பெருந்தடிமல் | peru-n-taṭimal n. <>id.+. Influenza; ஒருவகைச் சுரநோய். (M. L.) |
| பெருந்தரம் | peru-n-taram n. <>id.+. 1. A high office; உத்தியோகவகை. ஸ்ரீ ராஜராஜ தேவர் பெருந்தரம் ... சேனாபதி மும்மடி சோழப்ரம்ம மாராயன் (S. I. I. ii, 161, 3). 2. Liberal mindedness; |
| பெருந்தரா | peru-n-tarā n. See பெருந்தரம், 2. Loc. Colloq. . |
| பெருந்தலை | peru-n-talai n. <>பெரு-மை+. Headman; தலைமைக்காரன். Loc. |
| பெருந்தலைக்கறையான் | peru-n-talai-k-kaṟaiyāṉ n. <>பெருந்தலை+. Large-headed white ant; கறையான்வகை. (W.) |
| பெருந்தலைத்திமிங்கிலம் | peru-n-talai-t-timiṅkilam n. <>id.+. Sperm whale, Euphysetes macrocephalus, as having a huge head; திமிங்கிலவகை. (M. M.) |
| பெருந்தன்மை | peru-n-taṉmai n. <>பெரு-மை+. 1. High dignity, noble character; மேம்பாடு. 2. Self-conceit; |
| பெருந்தனம் | peru-n-taṉam n. <>id.+. 1. An office of the state under Cōḻa Government; சோழரது அரசாங்க உத்தியோகங்களிலொன்று. ஸ்ரீ ராஜராஜதேவர் பெருந்தனம் மும்மடி சோழ போசன் (S. I. I. ii, 222). 2. A class of dancing-girls; |
| பெருந்தாதை | peru-n-tātai n. <>id.+. See பெரியப்பன். பெருந்தாதை சொல்லால் ... அவனிகாப்ப (பாகவத. 1, தன்மபுத்திர. 41). . |
| பெருந்தாய் | peru-n-tāy n. <>id.+. See பெரியதாயார். பெருந்தா யுழைப் புகுந்தான் (உபதேசகா. சிவவிரத. 259). . |
| பெருந்தாரா | peru-n-tārā n. <>id.+. Goose, Auser Auser; வாத்துவகை. (W.) |
| பெருந்தாழை | peru-n-tāḻai n. <>id.+. Giant Mexican lily. See சீமைக்கற்றாழை. (L.) . |
| பெருந்தாளி 1 | peru-n-tāḷi n. <>id.+ தகளி. See பெருந்தகளி. Loc. . |
| பெருந்தாளி 2 | peru-n-tāḷi n. <>id.+. A large climber, s. sh., Convolvulus maximus; தாளிச்செடிவகை. (W.) |
| பெருந்தானம் | peru-n-tāṉam n. <>id.+. sthāna. Parts of the body, from which speech proceeds, eight in number, viz., necu, miṭaṟu, nākku, mūkku, aṇṇākku, utaṭu, pal. talai; நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலையாகிய ஒலியெழும் எட்டு உறுப்புக்கள். (சிலப். 3, 26, உரை.) |
| பெருந்திகிரி | peru-n-tikiri n. <>id.+. A mythical range of mountains beyond the mountain cakkaravāḷam; எல்லைச் சக்கரவாளத்துக்கும் அப்பாலுள்ள சக்கரவாளகிரி. பெருந்திகிரி வெற்புடையவே (தக்கயாகப். 403). |
| பெருந்திசை | peru-n-ticai n. <>id.+. 1. Any of the four cardinal points; வடக்குமுதலிய முக்கிய திசை. 2. A direction in which the land-area is extensive; |
| பெருந்திணை | perun-n-tiṇai n. <>id.+. (Akap.) Improper love, as when it is in violation of customary rules or when the woman is older than the man or is of a different caste or does not consent, one of seven aka-t-tiṇai, q.v.; அகத்திணை யேழனுள் ஒன்றானதும், ஒத்த சாதியல்லாதவளுடனாவது, விதிக்கு மாறாகவாவது, தன்னைவிட வயதில் முதிர்ந்தவளோடாவது, மனம் ஒவ்வாதவளோடாவது கூடும் காதல். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். பொ. 1). |
