Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருந்திரட்டு | peru-n-tiraṭṭu n. <>id.+. The larger religious anthology compiled by Tattuvarāyar, dist. fr. kuṟu-n-tiraṭṭu; தத்துவராயர் தொகுத்த வேதாந்த நூல். |
| பெருந்திராய் | peru-n-tirāy n. <>id.+. Indian chickweed, s. sh., Mollugo spergula; பூடுவகை. (M. M.) |
| பெருந்திருக்கை | peru-n-tirukkai n. <>id.+. Sting-ray, reddish brown, attaining 6 ft. across and 3 ft. in length, Pteroplatea micrura; திருக்கைமீன்வகை. |
| பெருந்திருப்பாவாடை | peru-n-tiru-p-pāvāṭai n. <>id.+. See பெருந்திருவமிர்து. (ஈடு.) . |
| பெருந்திருவமிர்து | peru-n-tiru-v-amirtu n. <>id.+. Food offerred to God in a large scale; கடவுட்குப் படைக்கும் பெரியநிவேதனம். திருவிழா எழுந்தருளுகைக்கும் பெருந்திருவமிர்து செய்தருளுகைக்கும் (S. I. I. v, 365). |
| பெருந்திருவி | peru-n-tiruvi n. <>id.+. Wealthy lady; பெருஞ்செல்வமுள்ளவன். பெருந்திருவி யார்மகள்கொல் (சீவக. 1969). |
| பெருந்தில்லை | peru-n-tillai n. <>id.+. A kind of tillai tree; தில்லைமரவகை. (யாழ். அக.) |
| பெருந்திவசம் | peru-n-tivacam n. <>id.+. First annual ceremony of a deceased person; தலைத்திவசம். Loc. |
| பெருந்தீவு | peru-n-tīvu n. <>id.+. The seven continents. See எழுதீவு. (பிங்.) . |
| பெருந்தீனிக்காரன் | peru-n-tīṉi-k-kāraṉ n. <>id.+. Glutton; பேருண்டியாளன். |
| பெருந்துத்தி | peru-n-tutti n. <>id.+. 1. Common evening mallow, m. sh., Abutilon indicum; செடிவகை. 2. Wrinkled leaved evening mallow, m. sh., Abutilon asiaticum; |
| பெருந்தும்பை | peru-n-tumpai n. <>id.+. Large species of white dead-nettle, Leucas cephalotes; தும்பைவகை. |
| பெருந்துருத்தி | peru-n-turutti n. <>id.+. A kind of syringe; நீர்வீசுங் கருவிவகை. (சூடா.) |
| பெருந்துளசி | peru-n-tuḷaci n. <>id.+. Large basil, l. sh., Ocimum gratissimum; துளசி வகை. |
| பெருந்துறை | peru-n-tuṟai n. <>id.+. 1. Large seaport; பெரிய துறைமுகம். பெருந்துறை மருங்கிற் பெயராது (சிலப். 13, 178). 2. āvuṭaiyār-kōyil. See திருப்பெருந்துறை. சீரார் பெருந்துறை நந்தேவன் (திருவாச. 1, 15). |
| பெருந்தூறு | peru-n-tūṟu n. <>id.+. Large bush, underwood; பெரும்புதர். (சூடா.) |
| பெருந்தெரு | peru-n-teru n. <>id.+. Main street; நகரின் தலைமை வீதி. நகரியிற் பெருந்தெருவிலே விலைக்கு விற்பாரை (சிலப். 3, 165-9, உரை). |
| பெருந்தேக்கு | peru-n-tēkku n. <>id.+. Teak wood. See தேக்கு. (சங். அக.) . |
| பெருந்தேட்கொடுக்கு | peru-n-tēṭ-koṭuk-ku n. <>id.+. A large species of Indian turnsole, Tiamdium; தேட்கொடுக்கிவகை. (பதார்த்த. 264.) |
| பெருந்தேவபாணி | peru-n-tēva-pāṇi n. <>id.+. 1. A kind of song in praise of gods, opp. to ciṟu-tēva-pāṇi; கடவுளரைத் துதிக்கும் இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.) 2. A poem in praise of šiva in patiṉorān-tirumuṟai by Nakkira-tēvar; |
| பெருந்தேவன் | peru-n-tēvaṉ n. <>id.+. The Supreme Deity; தலைமைத்தெய்வம். உலகேழும் விழுங்கி யுமிழ்ந்திட்ட பெருந்தேவன் (திவ். திருவாய். 4, 6, 4). |
| பெருந்தேவனார் | peru-n-tēvaṉār n. <>id.+. 1. A šangam poet, author of Tamil Bhāratam; பாரதம் பாடிய சங்கப்புலவர். (தொல். பொ. 72, உரை, பக். 231.) 2. The author of Pārata-veṇpā, 9th c.; 3. The author of the commentary on Vīra-cōḻiyam, 11th c.; |
| பெருந்தேவி | peru-n-tēvi n. <>id.+. Chief queen; பட்டமகிஷி. பாண்டியன் பெருந்தேவி வாழ்கென (சிலப். 20, 21). |
| பெருந்தேன் | peru-n-tēṉ n. <>id.+. 1. Honey secreted by bees; தேனீக்கள் கூட்டும் தேன். குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் (குறுந். 2). 2. See பெருந்தேனீ. பெருந்தேன் கண்படு வரையின் (குறுந். 273). |
| பெருந்தேனீ | peru-n-tēṉ-ī n. <>id.+. Large-sized honey bee; பெரிய தேனீவகை. (W.) |
