Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெரும்பொருள்விளக்கம் | perumporuḷ-viḷakkam n. <>பெரும்பொருள்+. A poem on morals; ஒரு நீதிநூல். (புறத்திரட்டு.) |
| பெரும்பொழுது | peru-m-poḻutu n. <>பெரு-மை+. Seasons of the year, of which there are six, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutu-vēṉil, dist. fr. ciru-poḻutu; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள். (நம்பியகப். 11.) |
| பெரும்பொன்படு - தல் | peru-m-poṉ-paṭu- v. intr. <>id.+. To be charming in appearance; தோற்றப்பொலிவுண்டாதல். தொய்யிலெழுதி யிறுத்த பெரும்பொன் படுகம் (கலித். 64). |
| பெரும்போக்கு | peru-m-pōkku n. <>id.+. 1. Broad-mindedness, liberality; பெருந்தன்மை. 2. Death; |
| பெரும்போகம் | peru-m-pōkam n. <>id.+. 1. Bumper crop; மிகுந்த விளைவு. Colloq. 2. Supreme bliss; |
| பெருமக்கள் | peru-makkal n. <>id.+. 1. The great ; பெரியோர். பெருமக்களுள்ளவர்தம் பெருமானை (திவ். திருவாய், 3, 7, 5). 2. Members of a village assembly, as great men ; |
| பெருமகன் | peru-makaṉ n.<>id.+. 1. Great man ; பெரியோன். (பிங்.) 2. Chief ; 3. King ; 4. Arhat ; |
| பெருமகிழ்ச்சிமாலை | peru-makiḻcci-mālai n. <>id.+ A panegyric in which the greatness of chaste women is described, one of 96 pirapantam , q.v.; 96 பிரபந்தங்களுள் கற்புடைப்பெண்டிர் பெருமையைக்கூறும் நூல்வகை. (சது.) |
| பெருமங்கலம் | peru-maṇkalam n. <>id.+ 1. Auspicious festival ; சுபவிசேடம். 2. Benedictory song ; 3. Theme of a king robed in white on his birthday and bestowing favours on his subjects ; 4. Poem describing the celebration of a king's birth-day, one of 96 pirapantam , q.v.; |
| பெருமஞ்சாடி | peru-macāti n. <>id.+. A climber ; See ஆனைத்தெல்லு. Nā. . |
| பெருமஞ்சிகன் | peru-macikaṉ n. <>id.+. Barber ; நாவிதன். (திவா.) பெருமஞ்சிகனுக்கு...கூந்தற்கருமம் (சீகாளத். பு. விடசங்க. 66). |
| பெருமடை | peru-maṭai n. <>id.+ Food offering to a deity ; தெய்வங்களுக்கிடும் சோற்றுப் பலி. வளமிகு சிறப்பிற் றெய்வப் பெருமடை கொடுத்து (பெரியபு. கண்ணப். 19). |
| பெருமணம் | peru-maṇam n. <>id.+. Marriage ; கலியாணம். பெருமணம் பண்ணி யறத்தினிற்கொண்ட (கலித். 96, 36). |
| பெருமணல்வட்டம் | peru-maṇal-vaṭṭam n. <>id.+. A hell of sand, one of eḻu-narakam, q.v.; எழுநரகதொன்று. (பிங்.) |
| பெருமதிப்பன் | peru-matippaṉ n. <>id.+. Precious or valuable object ; அதிக விலைபெற்ற பொருள் (ஈடு.) |
| பெருமந்தாரை | peru-maṇtārai n. <>id.+ Purple variegated mountain ebony ; See செம்மந்தாரை. . |
| பெருமரம் | peru-maram n. <>id.+ [M. perumaram.] 1.Toothed-leaved tree of heaven, l.tr., Ailanthus excels; மரவகை. (L.) 2. Fetid tree ; See பீநாறி. (மலை.) 3. White fragipani. See பெருங்கள்ளி. (மலை.) |
| பெருமருந்து | peru-maruntu n. <>id.+ [M. perumarundu.] Indian birthwort, m.cl. Aristolochia indica; கொடிவகை. (பதார்த்த.269.) |
| பெருமல்லிகை | peru-mallikai n. <>id.+. Single-flowered Arabian jasmine, m.cl., Jasminum sambac-heyneana; கொடிவகை. (மூ.அ.) |
| பெருமலம் | peru-malam n. <>id.+. See புன்கு,1. (சங். அக.) . |
| பெருமலரி | peru-malari n. Perh. id.+ மலர். White frangipani ; See பெருங்கள்ளி . . |
| பெருமலை | peru-malai n. <>id.+. Mt. Mēru ; மகாமேரு. (பிங்.) |
| பெருமலைகலக்கி | peru-malai-kalakki n. <>id.+ Peacock-tailed adiantum, Adiantum caudatum; பூடுவகை . (W.) |
| பெருமழை | peru-maḻai n. <>id.+ Heavy rain ; கனத்த மழை. |
