Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெறாப்பேறு | peṟā-p-pēṟu n. <>பெறு-+ஆ neg.+. Rare luck or fortune கிடைத்தற்கரிய பக்கியம். பெறாப்பேறு பெற்றுவைத்து (பெரியபு. குங்கிலி.11). |
| பெறால் | peṟāl n. Spots on the back of a fish; மின்முதுகிற் புள்ளி. Loc. |
| பெறு - தல் | peṟu- 6 v. tr. [K. peṟu.] 1. To get, obtain, secure, possess; அடைதல். கையுறப் பெற்றக்கால் (நாலடி , 5). 2. To bring forth, bear, as children; 3. To be get, generate; 4 To know; 5. To be worth; to be worthy of; to fetch a price; |
| பெறுக்கல் | peṟukkal n. prob. பெறுக்கு Rice; அரிசி. முறியாப் பெறுக்கன் முப்பழம் (பதினொ. திருவிடை. வை. 16). |
| பெறுக்கு - தல் | peṟukku- 5 v. tr. <>பொறுக்கு-. To gather, pick up, as stones; பொறுக்குதல் பெறுக்கினர் சிலைகளைப் பெருஞ்சினத்தராய் (பிரபுலிங்.சித்தரா.21). |
| பெறுத்து - தல் | peṟuttu- 5 v. tr. Caus. of பெறு-. 1. To cause to obtain; அடைவித்தல். நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா. பாயி. 1). 2. To eat |
| பெறுதி | peṟuti n. <>பெறு-. 1. Gain, profit; இலாபம். பெறுதி விரும்பினை யாகுவை (மணி. 25, 115). 2. That which is sought to be got or reached; goal; 3. See பெறுமதி. |
| பெறுமதி | peṟumati n. <>id. (J.) 1. Worth, value; தகுதி. 2. Ability; 3. Validity, security; 4. Prize, reward; |
| பெறுமானம் | peṟu-māṉam n. <>id.+. 1. Value; மதிப்பு. அந்த வயிரம் ஆயிரம் பொன் பெறுமானமுள்ளது. 2. Solvency; |
| பெறுவதுகொள்வார் | peṟuvatu-koḷvār. n. <>id.+. Prostitutes; வேசையர்.பெறுவது கொள்வாருங் கள்வரு நேர் (குறள், 813). |
| பென்னம்பெரிய | peṉṉam-peiya adj. Redupl. of பெரு-மை. Very large; மிகப்பெரிய. |
| பென்னம்பெருத்த | peṉṉam-perutta adj. Redupl. of பெரு-. See பென்னம்பெரிய . |
| பென்னாங்கொட்டை | peṉṉāṅ-koṭṭai n. <>பேன்+. Cocculus indicus. See பேன் கொட்டை . |
| பென்னை | peṉṉai n. Elephant; யானை. (சங். அக.) |
| பெனாதை | peṉātai n. of. பினாதி. Insignificant person; அற்பன். Loc. |
| பெஸ்தி | pesti n. Sign of age of horses shown by the falling of teeth; குதிரையின் வயதளவைக் காட்டும் பல் விழுங்குறி (அசுவசாபே. 7.) |
| பே 1 | pē . The compound of ப் and ஏ. . |
| பே 2 | pē n. Fear; அச்சம் பேஎமுதிர் கடவுள் (குறுந். 87). |
| பே 3 | pē n. <>phēna. 1. Foam, scum, froth; நுரை. (பிங்.) பேஎநாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை (இறை. 7, உரை). 2. Cloud; |
| பே 4 | pē Part.. <>U. bē. A prefix meaning 'no' ; இல்லை என்னும் பொருள்தருஞ் சொல். (W.) |
| பேஎம் | pēem n. See பே. (திவா.) . |
| பேக்கலாண்டி | pēkkal-āṇṭi n. of. U. bevakif+. Simpleton, foolish fellow; மூடன். Loc. |
| பேகணி - த்தல் | pēkaṇi- 11 v. intr. <>பேழ்கணி-. 1. To be distressed; கிலேசித்தல். இழக்கப்புகா நின்றா யென்று பேகணியா நின்றேன் (ஈடு, 9, 4, 3). 2. To change colour; to became pallid; |
| பேகணிப்பு | pēkaṇippu n. <>பேகணி-. 1. Sorrow, distress; துக்கம் (ஈடு, 9, 6, 6.) 2. Becoming pallid; |
| பேகம் 1 | pēkam n. <>bhēka. 1. Frog; தவளை. (பிங்.) 2. Cloud; |
| பேகம் 2 | pēkam n. <>Persn. bīgam. See பீகம். (W.) . |
| பேகன் 1 | pēkaṉ n. <>bhēka. Male of the frog; ஆண் தவளை. (யாழ். அக.) |
| பேகன் 2 | pēkaṉ n. A liberal chief, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பெருங்கன் னாடன் பேகனும் (சிறுபாண். 87.) |
