Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேரானந்தம் | pēr-āṉantam n. <>id.+. Supreme bliss; பரமானந்தம். பற்றிய பேரானந்தம் பாடுதுங் காணம்மானாய் (திருவாச. 8, 20). |
| பேரி 1 | pēri n. <>bhērī 1. Kettle-drum; முரசு. சங்குபேரி முழங்கிய தானையே (கம்பரா. எழுச் 28). 2. Drum; |
| பேரி 2 | pēri n. <>E. pear. A variety of pear, Pyrus communis; மரவகை. |
| பேரிகை | pērikai n. <>bhērikā. See பேரி 1. (சிலப். 3, 27, உரை.) . |
| பேரிசு | pēricu n. <>U. bēriz. See பேரீஜ். . |
| பேரிசெட்டி | pēri-ceṭṭi n. A sub-division of Chetty caste; செட்டிகளுள் ஒரு பிரிவினர். (E. T. i, 211.) |
| பேரிசை | pēr-icai n. <>பெரு-மை+. 1. Great renown; பெரும்புகழ். பேரிசை நன்னன் (மதுரைக். 618). 2. A treatise on music, of the last Saṅgam, not now extant; |
| பேரிடாப்பு | pēriṭāppu n. See பேர்டாப்பு. (W.) . |
| பேரிடு - தல் | pēr-iṭu- v. intr. <>பேர் 3+. See பெயரிடு-. மானிட சாதியின் பேரிடுமாதர்காள் (திவ். பெரியாழ். 4, 6,2). . |
| பேரியம் | pēriyam n. See பேரி 1. பேரியங்கண் முருடாகுளி (கம்பரா. இராவ. தானை. 12). . |
| பேரியல் | pēr-iyal n. <>பெரு-மை+. Noble character; பெருந்தன்மை. தில்லைப் பேரியலூரர் (திருக்கோ.311). |
| பேரியற்காஞ்சி | pēr-iyaṟ-kāci n. <>id.+இயல்+.(Puṟap.) Theme in which a poet describes the nature of evil; கேட்டினியல்புகளைப் புலவர் எடுத்துக்கூறுந் துறைவகை. (திவா.) |
| பேரியாழ் | pēr-i-yāḻ n. <>id.+. A lute of 21 strings, one of four yāḻ, q.v.; நால்வகை யாழ்களுள் இருபத்தொரு நரம்புள்ளது. (சிலப், 3, 26, உரை.) |
| பேரியாறு | pēr-i-yāṟu n. See பேராறு, i, 2. கங்கைப் பேரியாற்று (சிலப். 28, 121). பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை (சிலப். 25, 22). |
| பேரிரவல் | pēr-iraval n. <>பேர் 3+. Benami transaction. See பினாமி. Loc, . |
| பேரிருக்கை | pēr-irukkai n. <>பெரு-மை+. Town surrounded by a moat. See தோணாமுகம். (W.) . |
| பேரிரைப்பை | pēr-iraippai n. <>id.+. First stomach of ruminants, rumen; அசை போடும் விலங்குகளின் மேல்வயிறு. (கால். வி.) |
| பேரிரையான் | pēr-iraiyāṉ n. <>id.+. இரை 4. Glutton; மிகுதியாக உண்போன். நிற்குங் கழிபேரிரையான்க ணோய் (குறள், 946). |
| பேரில் | pēril prep. <>பேர் 3. 1. On, about; மீது. அவன்பேரில் குற்றமில்லை. 2. After; |
| பேரிலக்கம் | pēr-ilakkam n. <>பெரு-மை+. (Arith.) Integer, whole number; பின்னமல்லாத முழூவெண். |
| பேரிழவு | pēr-iḻavu n. <>id.+. 1. Greacalamity; பெருநஷ்டம் 2. Worry, bother, |
| பேரிளம்பெண் | pēr-iḷam-peṇ n. <>பேரிளமை+. 1. Woman between the ages of 32 and 40; ஏழுவகைப் பருவமகளிருள் முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுவரையுள்ள பெண். (பிங்.) 2. Woman between the ages of 30 and 55; |
| பேரிளமை | pēr-iḷamai n. <>பெரு-மை+. 1. Early period of youthfulness; இளமைத்தொடக்கம். அணைந்த பேரிளமையாலே தனைநனி மதித்து (திருவாலவா. 13, 15). 2. Middle age; |
| பேரின்பம் | pēr-iṉpam n. <>id.+. 1. See பேரானந்தம். (பிங்.) அளவில் பேரின்பத் தடிய ரோடிருந்தமை (திவ். திருவாய். 10, 3, 11). 2. Heavenly bliss, salvation; |
| பேரின்பவாழ்வு | pēr-iṉpa-vāḻvu n. <>பேரின்பம்+. Blissful life; மோட்சவாழ்வு. நம்முடனாம் பேரின்பவாழ்வு சேர்வார் (காஞ்சிப்பு. தழுவ. 65). |
| பேரிஜ் | pērij n. See பேரீஜ் . |
| பேரிஸ்து | pēristu n. <>U. fehrist. List, catalogue, inventory, index; சாபிதா. (C. G.) |
| பேரீகம் | pērīkam n. 1. Indian pereira; வட்டத்திருப்பி. (மலை.) 2. Square-stalked vine. See பிரண்டை. (சங். அக.) |
| பேரீச்சு | pēr-īccu n. See பேரீந்து. (பதார்த்த. 525.) . |
| பேரீஞ்சு | pēr-īcu n. <>பெரு-மை+. See பேரீந்து. . |
