Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேன் | pēṉ n. [T. pēnu K. M. pēn.] Louse, pediculi; தலைமயிரிலுண்டாகுஞ் சிறுசெந்து. ஈரும் பேனு மிருந்திறை கூடி (பொருந. 79). |
| பேன்குத்து - தல் | pēṉ-kuttu- v. intr. <>பேன்+. To crack or crush lice; பேனை நசுக்குதல். (W.) |
| பேன்கொட்டை | pēn-koṭṭai n. prob. id.+. Cocculus-indicus. See காக்காய்கொல்லி. . |
| பேனம் | pēṉam n. <>phēna. Froth, foam; நுரை. பேன வெண்குடையவாய (கம்பரா. பிரமாத் 145). |
| பேனவாகி | pēṉavāki n. <>phēna-vāhin. Thunder; இடி. (யாழ். அக.) |
| பேனன் | pēṉaṉ n. <>bhēna. (யாழ். அக.) 1. Sun சூரியன் 2. Moon; |
| பேனா | pēṉā n. <>E. Pen, quill; மை தோய்த்து எழுதுங் கருவி. Mod. |
| பேனாக்கத்தி | pēṉā-k-katti n. <>பேனா+. Penknife; பேனாச்சீவுங் கத்தி. Mod. |
| பேனாசனி | pēṉācaṉi n. <>phēnāšani. Indra; இந்திரன். (யாழ். அக.) |
| பேஜரா | pējarā n. <>U. bē-ciradh. Uninhabited village; குடியற்ற கிராமம். |
| பேஜா | pējā n. <>U. bējā. Low quality; மட்டம். Madr. |
| பேஜார் | pējār n. <>U. bēzār 1. Fatigue, weariness; சோர்வு. 2. Annoyance; disgust; displeasure; |
| பேஜாவியாச்சியம் | pējā-viyācciyam n. <>பேஜா+. Groundless or vexatious suit; நியாயமற்ற வழக்கு. (C. G.) |
| பேஜாறு - தல் | pējāṟu- 5 v. intr. <>பேஜார். To become wearied; இளைப்புறுதல். Loc. |
| பேஷ் 1 | pēṣ int. <>U. bēṣ Exclamation meaning `very good, excellent'; `மிக நன்று' என்னும் பொருள் குறிக்குஞ் சொல். (C. G.) |
| பேஷ் 2 | pēṣ n. <>U.pēṣ. Foremost, front; முதல். (C. G.) |
| பேஷ்கஸ் | pēṣkas n. <>U. pēṣ-kaṣ. See பேஷ்கிஸ்தி . |
| பேஷ்கார் | pēṣkār n. <>U. pēṣ-kār. (C. G.) 1. Deputy, agent, manager; காரியஸ்தன். 2. A revenue officer placed in charge of a division of a taluk and invested with the same authority as a Tahsildar; |
| பேஷ்கிஸ்தி | pēṣkisti n. <>U. pēṣ-kist. (C. G.) 1. Tax; tribute; வரி. 2. Rent payable to government by the owners of permanently settled estates; |
| பேஷக் | pēṣak adv. <>U. bē-ṣak. Undoubtedly, certainly, assuredly; சந்தேகமின்றி. (C. G.) |
| பேஷா | pēṣā adv. See பேஷக். . |
| பேஸ் | pēs n. <>E. base. Basement; கட்டடத்தில் தரைமட்டம். Loc. |
| பேஸ்து 1 | pēstu n. See பேஸ். Loc. . |
| பேஸ்து 2 | pēstu n. Losing a game in a particular mode of card-play; சீட்டாட்டத்தில் நேருந் தோல்வி. |
| பேஸன்லாடு | pēsaṉ-lāṭu n. <>Mhr. pēsan+. 1. A kind of confection-ball of green pulse. See பிசிறுலாடு. Loc. . 2. A kind of confection-ball of Bengal-gram; |
| பை 1 | pai . The compound of ப் and ஐ . |
| பை 2 | pai n. <>பசு-மை. [M. pai.] 1. Greenness, freshness; பசுமை. (பிங்.) 2. Colour; 3. Youth; 4. Beauty; 5. Strength, vigour; |
| பை - த்தல் | pai- 11 v. intr. <>பை 2. 1. To become green or greenish; பசுமையாதல். (சூடா.) 2. cf. bhā To look bright; |
| பை | pai n. perh. பெய்-. 1. Bag, sack, purse, satchel; துணி தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம். தோற்பையுணின்று...கூத்தன் புறப்பட்டக்கால் (நாலடி, 26). 2. Hood of a cobra; 3. Bladder; duct; pouch, as in animal bodies; 4. Five hundred or thousand rupees, as the amount usually kept in a treasury bag; |
| பை - த்தல் | pai- 11 v. intr. <>பை 4. 1. To spread the hood, as a cobra; படம் விரித்தல். பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப (பொருந. 69). 2. To be angry; 3. To be tumultuous, as the sea; 4. To be excessive; |
