Word |
English & Tamil Meaning |
|---|---|
| பைமாஷ் | paimāṣ n. <>U. paimāyaṣ. Land measurement made early in the nineteenth century by the British in India; 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத் துரைத்தனத்தாரால் இந்தியாவிற் செய்யப்பட்ட நிலவளவு |
| பைமாஷ்தார் | paimāṣ-tār n. <>id.+. Surveyor; நிலவளவு செய்யும் உத்தியோகஸ்தன். (R. T.) |
| பைமை 1 | paimai n. See பைம்மை1. (W.) . |
| பைமை 2 | paimai n. See பைம்மை2. (W.) . |
| பைய | paiya adv. By degrees, slowly; softly, gently'; மெல்ல பைய நகும் (குறள், 1098). |
| பையம் | paiyam n. (அக. நி.) 1. cf. பை4. 1. Basket; கூடை 2. Sedge; See கோரை. |
| பையர | pai-y-ara n. <>பை4+. See பையரவு. பையர விழுங்கப்பட்ட...மதியம் (சீவக. 1540). . |
| பையரவு | pai-y-aravu n. <>id.+. Hooded cobra; நாகம். பையர வலகுலார்த் முள்ளமும் பளிங்கும்போல (கம்பரா. மிதிலை. 16). |
| பையல் | paiyal n. <>பைதல். 1. Boy, little fellow; சிறுவன். அளிய னம்பைய லென்னார் (திவ். திருமாலை, 37). 2. Unworthy, mean fellow; |
| பையன் | paiyaṉ n. <>id. 1. See பையல், 1. . 2. Son; |
| பையா - த்தல் | paiyā- 11 v. intr. 1. To be distressed; to suffer pain; வருந்துதல். அரவம் வைகிக்கேட்டுப் பையாந்திசினே (நற். 114). 2. To show signs of fear; |
| பையாப்பு | paiyāppu n. <>பையா-. Distress, suffering; துன்பம். அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை (புறநா. 221, உரை). பையாப்போடு பசிகாட்டி (கலிங். 557). |
| பைபுள் | paiyuḷ n. of. Pkt. payyāula. 1. Disease; நோய் (தொல். சொல். 341.) 2. Distress, suffering; 3. Poverty, adversity, straitened circumstances; 4. Confusion; |
| பையெனல் | pai-y-eṉal n. Onom. expr. of (a) being slow or gentle; மெதுவாதற்குறிப்பு. கையிற் கட்டிப் பையென வெண்ணி (புறநா. 257). (சூடா.): (b) being dim, dull; (c) being distressed; |
| பையோடதி | pai-y-ōṭati n. <>பை2+. Green ceeper; பச்சைக்கொடி. (தைலவ. தைல.) |
| பையோலை | pai-y-ōlai n. <>id.+. Green ola; பச்சோலை. பனைப்பையோலை (திருவாலவா. 27, 68). |
| பைரவம் | pairavam n. <>bhairava. 1. Terribleness; பயங்கரம். (W.) 2, Dread, awe, fear; 3. A subdivision of šaiva religion; 4. (Mus) An ancient seconday melody-type pf cevvaḻi class; |
| பைரவமாத்திரை | pairava-māttirai n. <>id.+. A medicinal pill; ஒருவகை மருந்துக்குளிகை (பதார்த்த.1290.) |
| பைரவர் | pairavar n. <>id. Durgā's hosts; துர்க்கையின் படையினரான கணங்கள். இறைவி பைரவர்களே (தக்கயாகப்.429). |
| பைரவரசம் | pairava-racam n. <>id.+. A medicine prepared with mercury; இரசங்கூட்டிச் செய்யும் மருந்துவகை (பைஷஜ.154.) |
| பைரவன் | pairavaṉ n. <>bhairava 1. A manifeston of šaiva; சிவமுர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள். (பிங்.) 2. Man born of a Niṣāda and a šūdra woman; |
| பைரவி | pairavi n. <>Bhairavī. 1. Durgā; துர்க்கை. பைரவி யகம்படியரே (தக்கயாகப். 431). 2. (Mus.) A specific melody-type; |
| பைராகி | pairāki n. <>U. bairāgī. Ascetic pilgrim from North India; வடதேசத்துத் துறவி. |
| பைரி | pairi n. <>U. bhairij. Peregrine falcon, Falco peregrinus; இராசாளிவகை. |
| பைல்வான் | pailvāṉ n. <>U. pahlwān. Athlete, wrestler, pugilist; மற்போர் செய்வோன். |
