Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொ 1 | po . The compound of ப்+ஒ. . |
| பொ 2 - த்தல் | po- 11 v. t. prob. பொய்1-. 1. To perforate, puncture, make a hole or opening; துளைத்தல். பொத்தநூற் கல்லும் (நாலடி, 376). --intr. 2. To be blistered; |
| பொக்கசம் | pokkacam n. See பொக்கிஷம். . |
| பொக்கசவைப்பு | pokkaca-vaippu n. <>பொக்கசம்+. Treasure trove; hidden treasure புதைந்துகிடக்கும் திரவியம். (யாழ். அக.) |
| பொக்கணந்தூக்கி | pokkaṇa-n-tūkki n. perh. பொக்கணம்+. 1. A kind of curai plant; சுரைக்கொடிவகை. (சங். அக.) 2. Balloon-vine. See முடக்கொற்றான். (மாட்டுவா. 142.) |
| பொக்கணப்பிச்சி | pokkaṇa-p-picci n. perh. id.+. Balloon-vine. See முடக்கொற்றான். (மலை.) . |
| பொக்கணம் | pokkaṇam n. 1. [T.bokkaṇamu, K. bokkaṇa, M. pokkaṇam.] Beggar's bag. wallet., cloth, used as a sack; சோழியப்பை. சுத்திய பொக்கணத்து...கோலத்தினீர் (திருக் கோ. 242). 2. Indian birthwort. See பெருமருந்து. (மலை.) |
| பொக்கணி | pokkaṇi n. 1. Rice mortar; தானியம் முதலியன குத்தும் உரல். (J.) 2. Large, open navel; 3. A kind of drinking vessel; |
| பொக்கணை | pokkaṇai n. <>பொக்கணி. (J.) 1. Hole in a tree, stone or ground; cleft in a rock; மரம் கல் முதலியவற்றிலுள்ள பொந்து. 2. See பொக்கணி, 1. |
| பொக்கம் 1 | pokkam n. perh. பொய்2-. [T. bokka M. pokkam.] 1. Lie, falsehood; பொய். (பிங்.) பொக்கம் பலபேசி (தேவா. 326, 7). 2. Deceit; 3. Fault; |
| பொக்கம் 2 | pokkam n. <>பொங்கு-. 1. Abundance; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 2. Eminence, height; 3. Bloom, splendour; 4. Awe; |
| பொக்கரணி | pokkaraṇi n. <>Pkt. pokkhariṇī <>puṣkariṇī. [K. bokkaraṇi.] Sacred tank, as in a temple. See புட்கரிணி, 2. பூம்பொக்கரணியை (பெருங். உஞ்சைக். 53, 79). . |
| பொக்கல் | pokkal n. <>பொய்1-. See பொக்கை. . |
| பொக்கல்வாய் | pokkal-vāy n. <>பொக்கல்+. See பொக்கைவாய். (J.) . |
| பொக்களம் | pokkaḷam n. See பொக்குளம். Loc. . |
| பொக்கன் | pokkaṉ n. <>பொக்கம்2. Man of fine appearance, handsome man தோற்றப்பொலிவுள்ளவன். துடியிடையாள் துணை முலைக்குச் சேர்வதாகும் பொக்கன்காண் (தேவா.619, 2). |
| பொக்கிப்பயல் | pokki-p-payal n. perh. பொறுக்கி+. Vagabond; தறிதலை. Loc. |
| பொக்கிப்போ - தல் | pokki-p-pō- v. intr. <>பொக்கு+. [T. pokkipōvu.] 1. To be blistered, scalded; கொப்புள முண்டாதல். 2. To break out with boils; |
| பொக்கிலவணம் | pokki-lavaṇam n. A kind of salt; உப்புவகை (யாழ்.அக.) |
| பொக்கினதுப்பி | pokkinatuppi n. Indian birthwort. See பெருமருந்து. (சங். அக.) . |
| பொக்கிஷக்காரன் | pokkiṣa-k-kāraṉ n. <>பொக்கிஷம்+. 1. Treasurer; கசானாவின் பொறுப்பு வகிப்பவன். (W.) 2. Rich man; |
| பொக்கிஷசாலை | pokkiṣa-cālai n. <>id.+. Treasury; திரவியச் சேமவிடம். |
| பொக்கிஷதார் | pokkiṣa-tār n. <>id.+. See பொக்கிஷக்காரன். Mod. . |
| பொக்கிஷப்பெட்டி | pokkiṣa-p-peṭṭi n. <>id.+. Coffer; chest for money and other valuables; பணம் முதலியன வைக்கும் பேழை. (W.) |
| பொக்கிஷம் | pokkiṣam n. [T. bokkasamu K. bokkasa.] 1. Treasure; stores; திரவியம். 2. See பொக்கிஷசாலை. Loc. |
| பொக்கிஷவீடு | pokkiṣa-vīṭu n. <>பொக்கிஷம்+. See பொக்கிஷசாலை. (W.) . |
| பொக்கு 1 - தல் | pokku- 5 v. intr. To be blistered; கொப்புளங் கொள்ளுதல். உடம்பெல்லாம் பொக்கிவிட்டது. |
| பொக்கு 2 | pokku n. <>பொ-. 1. [T. pokku.] Hollow in a tree; மரப்பொந்து. (பிங்.) 2. [T. pokki.] Defect, fault, blemish; 3. Imperfectly matured grain; 4. Grit; |
