Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொதிகைநிகண்டு | potikai-nikaṇṭu n. <>பொதிகை+. A Tamil lexicon by Cuvāmi Kavirāyar of Kalliṭai-k-kuṟicci; கல்லிடைக்குறிச்சியிலிருந்த சுவாமிகவிராயரால் இயற்றப்பெற்ற தமிழ் நிகண்டு. |
| பொதிச்சோறு | poti-c-cōṟu n. <>பொதி2+. See பொதிசோறு. Loc. . |
| பொதிசோறு | poti-cōṟu n. <>id.+. See பொதி, 10. (திவா.) சால மிகப்பசித்தீ ரிப்பொதிசேறு தருகின்றேன் (பெரியபு. ஏயர்கோன். 159). . |
| பொதிந்துவை - த்தல் | potintu-vai- v. tr. <>பொதி-+. To keep always in memory; இடைவிடாது மனத்துட்கொள்ளுதல். (யாழ். அக.) |
| பொதிப்பருவம் | poti-p-paruvam n. <>பொதி+. Stage in the growth of paddy when the grain is in the milk; நெற்கதிரிற் பால் பிடிக்கும் பருவம். Tinn. |
| பொதிப்போதா | poti-p-pōtā n. prob. id.+. A large heron; பெருநாரை. (அக. நி.) |
| பொதிமாடு | poti-māṭu n. <>id.+. Packbull; மூட்டை சுமக்கும் எருது. (W.) |
| பொதிமுருங்குநோய் | poti-muruṅkunōy n. <>id.+. 1. A disease affecting cōḷam crop; சோளப்பயிர் நோய்வகை. 2. A cattle disease; |
| பொதியப்பொருப்பன் | potiya-p-poruppaṉ n. <>பொதியம்+. Pandya king, as lord of Mt. Potiyam; [பொதியமலைக்குரியவன்] பாண்டியன். (திவா.) |
| பொதியம் | potiyam n. <>பொதி3. A mountain in Pandya country, famed as the abode of Agastya ; பாண்டிய நாட்டிலுள்ளதும் அகஸ்திய முனிவர் இருப்பிடமாகக் கருதப்படுவதுமன மலை. பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே (புறநா. 2). |
| பொதியவிழ் - தல் | poti-y-aviḻ v. intr. <>பொதி2+. To blossom out, unfold; அரும்பு முறுக்கவிழ்தல். பொதியவிழ் மாலை வீழ்ந்து (சீவக.1447). |
| பொதியவிழ் - த்தல் | poti-y-aviḻ- v. tr. <>id.+. 1. Lit., to open one's bag. [பையை அவிழ்த்தல்] 2. To begin one's tale; |
| பொதியவெற்பன் | potiya-veṟpaṉ n. <>பொதியம்+. See பொதியப்பொருப்பன். (சூடா.) . |
| பொதியறு - த்தல் | poti-y-aṟu- v. intr. <>பொதி+. To extort money; பணத்தைக் கவர்தல் கணிகையரே போன்றிருந்து பொதியறுக்கும் புத்தன் (நீலகேசி. குண்டல. 74). |
| பொதியறை | poti-y-aṟai n.<>id.+. Underground room without air-holes; காற்றோட்டாமில்லாத கீழறை. பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி (மணி. 4, 105). |
| பொதியன் | potiyaṉ n. <>பொதியம். Sage Agastya; அகத்திய முனிவர். (யாழ். அக.) |
| பொதியன்கெளிறு | potiyaṉ-keḷiṟu n. A kind of fish; மீன்வகை பொதியன் கெளிறு வவ்வால் (பறளை. பள்ளு. 16). |
| பொதியனாபி | potiyaṉāpi n. Hair; மயிர். (சங். அக.) |
| பொதியில் | poti-y-il n. <>பொது+இல். 1. Public hall; அம்பலம். தமனியப் பொதியிலும் (மணி. 28, 66). 2. See பொதியம். ஆஅய் மழை தவழ் பொதியில் (குறுந். 84). |
| பொதியெருது | poty-erutu n. <>பொதி2+. See பொதிமாடு. (தனிபா. ii, 283, 487.) . |
| பொதிர் 1 - தல் | potir- 4 v. intr. [K. bedaru.] 1. To swell; வீங்குதல். புனைதார் பொர நொந்து பொதிர்ந்த வென (சீவக. 1380) 2. To increase, abound; 3. Go tremble; 4. To be afraid; |
| பொதிர் 2 - த்தல் | potir- 11 v. tr. 1. To pierce; குத்துதல். கழை பாதிர்ப்பத் தேன் சொரிந்து (சீவக. 2778). 2. To break, break off; 4. To swell, increase in size, become large; |
| பொதிர் 3 | potir n. <>பெதிர்1 -. See பொதிர்வு, 1. மெய்பொதி ரெறிந்துவிம்ம (சூளா. அரசி. 10). . |
| பொதிர்ப்பு | potirppu n. <>id. See பொதிர்வு. (திவா.) . |
| பொதிர்வு | potirvu n. <>id. 1. Trembling; நடுக்கம். எல்லாவுலகும் பொதிர்வுற (கம்பரா. வாலிவ. 30). 2. Fear, dread; |
| பொதிரெறி - தல் | potir-eṟi- intr. <>பொதிர்+. To tremble; நடுங்குதல். கண்ணோர் பொதிரெறிய வார்த்தான் (கம்பரா. அதிகா. 30). |
| பொதிவு | potivu n. <>பொதி-. 1. Hoking; பொதியாகக் கட்டுகை. (யாழ். அக.) 2. Union; |
| பொதிவை - த்தல் | poti-vai- v. intr. <>பொதி2+. 1. To keep a treasure under-ground; புதையல் வைத்தல். பூதலத்திதோன் பொதிவைத் திரப்பவர்போல் (கூளப்ப. காதன் 6). 2. To be big with grains, as standing crop; |
