Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொதின்பொதினெனல் | potiṉ-potiṉ-eṉaol n. Onom. expr. of a recurring sound; ஈரடுக்கொலிக்குறிப்பு. (யாழ். அக.) |
| பொதீர்பொதீரெனல் | potīr-potīr-eṉal n. Onom. expr. of the recurring sound of falling, as fruits, blows, etc.; விழுதல் அடித்தல் முதலியவற்றின் ஈரடுக்கொலிக்குறிப்பு. (W.) |
| பொது - தல் | potu- perh. 4 v. intr. To be perforated; துளைபடுதல். மரம்பொதச் சரந்துரந்து (திவ். திருச்சந். 73). |
| பொது - த்தல் | potu- 11 v. tr. Caus of பொது 1-. 1. To bore; துளைத்தல், புட்கள் பொதுத்த புலால் வெண்டலை (பதினொ. மூத்த. 3). 2. To pierce, pick; |
| பொது | potu n. [T. pottu M. podu.] 1. That which is common or shared by many; generality, opp. to ciṟappu; பொதுமையானது. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் (குறள், 528). 2. Lack of distinction; 3. That which is ordinary or general; 4. That which is usual or natural; 5. Neutrality; 6. Likeness, equality; 7. Vagueness; 8. That which is public; 9. Public place, assembly; 10. The hall in the temple at Chidambaram; |
| பொதுக்கட்டு - தல் | potu-k-kaṭṭu- v. tr. <>பொது+. To deposit by mutual consent, as with a mediator or Pacāyat; மத்தியஸ்தரிடம் விவாதப்பொருளை ஒப்படைத்தல். Colloq. |
| பொதுக்காரியம் | potu-k-kāriyam n. <>id.+. Matter concerning a community or the general public; சமூகநலத்துக்குற்ற செயல். Colloq. |
| பொதுக்கு 1 - தல் | potukku- 5 v. tr. <>பதுக்கு-. 1. To omit, leave out; விலக்குதல். 2. To conceal; 3. To embezzle; |
| பொதுக்கு 2 - தல் | potukku- 5 v. tr. <>பொதுக்கு1-. To ripen fruits by fumigation; புகையிற் பழுக்கவைத்தல். வாழைக்காய்களைக் கனியாகுமாறு இலை முதலியன விட்டுப் பொதுக்குகிறார்கள். Loc. |
| பொதுக்கு | potukku n. <>பொதுக்கு-. 1. Omission; விலக்கு. பொதுக்கற வுரைக்குமது (இரகு. மீட்சி. 18). 2. Secluded place; 3. Concealment; |
| பொதுக்குணம் | potu-k-kuṇam n. <>பொது+. See பொதுத்தன்மை. (W.) . |
| பொதுக்கெனல் | potukkeṉal n. Onom. expr. of (a) sudden noise; ஒர் ஒலிக்குறிப்பு. (b) yielding to pressure; |
| பொதுக்கை | potu-k-kai n. <>பொது+. (Nāṭya.) A gesture of hand common to differrent kinds of dances; பல கூத்துக்கும் பொதுவான அபிநயக்கைவகை. (சிலப், 3, 18, உரை.) |
| பொதுக்கோ | potukkō int. Hurriedly or suddenly; சடக்கென புள்ளிதுவென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட (திவ். பெரியாழ். 2, 5, 4). |
| பொதுங்கு - தல் | potuṅku- 5 v. intr. cf. பொசுங்கு1-. To suffer; வருந்துதல். பொதுங்கிய வைவரை (திருமந். 2914). |
| பொதுச்சீர் | potu-c-cīr n. <>பொது+. (Pros.) Feet of four syllables peculiar to vaṉci verse, of which there are 16, the formulas being formed by adding to tēmā, puḷimā, karuviḷam, kūviḷam each of the terms taṇṇiḻal, taṇpū, naṟumpū, naṟuniḻal; நாலசையாலாகிய வஞ்சிப் பாவில் வரக்கூடியனவும், தேமா, புலிமா, கருவிளம், கூவிளம் என்பவற்றோடு தண்ணிழல், தண்பூ, நறும் பூ, நறுநிழல் என்பவற்றைத் தனித்தனிச் சேர்ப்பதனால் தோன்றுவனவுமான பதினாறு சீர்கள். (காரிகை, உறுப். 5.) |
| பொதுச்சூத்திரம் | potu-c-cūttiram n. <>id.+. (Gram.) Aphorism stating a general rule; பொதுவான இலக்கணங் கூறும் சூத்திரம். |
| பொதுச்செலவு | potu-c-celavu n. <>id.+. 1. General charges in kind met by land-owners on the threshing-floor; காவல் முதலியவற்றிற்குச் சுவான்தார் களத்திற் செலவிடும் தானியம். (R. T.) 2. Expenses met from a common fund, as of a village; |
| பொதுச்சொம் | potu-c-com n. <>id.+. Common property; பொதுச்சொத்து. (யாழ். அக.) |
