Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொய்க்க | poykka adv. <> பொய்3-. 1. Falsely, not in earnest; பொய்பட அங்கையாகிய அழகிய தலத்தால் பொய்க்கத் தட்டின வளவிலே (சீவக. 1834, உரை). 2. Slowly; |
| பொய்க்கடி | poy-k-kaṭi n. <> பொய்+. (W.) 1. Browsing; கால்நடைகள் நுனிப்புல் மேய்கை. 2. Harmless, playful bite, as of a dog; |
| பொய்க்கண் | poy-k-kaṇ n. <>id.+. 1. Artificial eye; போலிக்கண். Mod. 2. Part near the eye; 3. Bones forming the eye-socket; |
| பொய்க்கண்ணி | poy-k-kaṇṇi n. <>id.+. See பொய்ப்பூ. (யாழ். அக.) . |
| பொய்க்கதை | poy-k-katai n. <>id.+. 1. Fib; கட்டிவிடப்படட் செய்தி. 2. Fiction; |
| பொய்க்கரி | poy-k-kari n. <>id.+. See பொய்ச்சாட்சி. பொய்க்கரி போகன்மின் (சிலப். 30, 192). . |
| பொய்க்கரிமாக்கள் | poy-k-kari-mākkaḷ n. <> பொய்க்கரி+. False witnesses; பொய்ச்சாட்சி கூறுபவர். பொய்க்கரிமாக்கள் புறங்கூற் றாளர் (சிலப் 5, 131, பி-ம்.). |
| பொய்க்கரியாளர் | poy-k-kari-y-āḷar n. <>id.+. See பொய்க்கரிமாக்கள். பொய்க்கரியாளர் புறங்கூற் றாளர் (சிலப். 5, 131). . |
| பொய்க்கால் | poy-k-kāl n. <> பொய்+. (W.) 1. Stilt; விளையாட்டில் கால்களால் ஏறிச்செலுத்தும் கழி. அந்தரமாய் பொய்க்காலிலாடும் வித்தை (நெல் விடு. 358). 2. Wooden leg; |
| பொய்க்காற்குதிரை | poy-k-kār-kutirai n. <>பொய்க்கால்+. Wooden rider and horse, played by a man hiding inside ; சவாரி செய்வது போல் உள்ளிருந்து மனிதன் ஆட்டும் மரக்குதிரை. |
| பொய்க்கிணறு | poy-k-kiṇaṟu n. <>பொய்+. False well or pit, as a trap for elephants; யானை முதலியவற்றை அகப்படுத்துங் குழி. |
| பொய்க்கிளை | poy-k-kiḷai n. <>id.+. False sprout, as in jack-trees; பலாமரத்தில் உண்டாம் பிஞ்சுபிடியா முளை. (யாழ். அக.) |
| பொய்க்குரல் | poy-k-kural n. <>id.+. Feigned or counterfeit voice; போலிச்சத்தம். (W.) |
| பொய்க்குழி | poy-k-kuḻi n. <>id.+. 1. Covered pit giving a false notion of safety; பார்வைக்கு மூடியது போன்றிருந்து கால்வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி. (சிலப். 10, 70, உரை.) 2. A pit set apart without using, in playing marbles; 3. Prepared pit where seedlings are grown before ransplantation; |
| பொய்க்கூடு | pov-k-kūtu n. <>id.+. Body ; உடல். (யாழ். அக.) |
| பொய்க்கை | poy-k-kai n. <>id.+. A kind of fish; மீன்வகை . (W.) |
| பொய்க்கொட்டை | poy-k-koṭṭai n. <>id.+. See பொய்ப்பிஞ்சு. (யாழ். அக.) . |
| பொய்க்கொண்டை | poy-k-koṇṭai n. <>id.+. A kind of pithwork forming a frame for hair-dressing; நெட்டியாற் செய்யப்பட்ட கொண்டைவகை. (சிலப், 5, 34, உரை.) |
| பொய்க்கோலம் | poy-k-kōlam n. <>id.+. 1. False or assumed appearance; disguise; இயற்கையுருவை மறைக்கும் வேஷம். பொய்க்கோலஞ்செய்ய வொழியுமே (நாலடி, 43). 2. Hypocrisy; |
| பொய்கை 1 | poykai n. perh. பொய்1-. 1. Natural spring or pond; இயற்கையிலுண்டான நீர் நிலை. வாவியும் பொய்கையுங் கண்டீர் (சீவக. 337). 2. Tank; 3. See பொய்கையார், 1. களவழிப்பா முன் செய்த பொய்கை (தொல். பொ. 91, உரை). 4. See பொய்கையாழ்வார். பொய்கைபூதம் பேய் (பிரபோத. 11, 9). |
| பொய்கை 2 | poykai n. A kind of owl; கோட்டான். (யாழ். அக.) |
| பொய்கையார் | poykaiyār n. <>பொய்கை1. 1. An ancient poet, author of Kaḷavaḻi-nāṟpatu; களவழிநாற்பது இயற்றிய ஆசிரியர். (புறநா. 48). 2. See பொய்கையாழ்வார். பொய்கையார் பூதத்தார் பேயார் (உபதேசரத். 4). |
| பொய்கையாழ்வார் | poykai-y-āḻvār n. <>id.+. A Vaiṣṇava saint, born at a tank in Conjeevaram, one of the ten āḻvār, q. v.; காஞ்சீபுரத்தில் ஒரு பொய்கையில் அவதரித்தவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான திருமாலடியார். |
| பொய்ச்சத்தம் | poy-c-cattam n. <> பொய்+. See பொய்க்குரல். (W.) . |
| பொய்ச்சத்தியம் | poy-c-cattiyam n. <>id.+. See பொய்யாணை. (W.) . |
| பொய்ச்சா - த்தல் | poyccā- 11 v. tr. <> பொச்சா-. To forget ; மறத்தல். (W.) |
