Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொய்ச்சாட்சி | poy-c-cāṭci n. <> பொய்+. 1. False testimony; உண்மைக்கு மாறான சான்று. பொய்ச்சாட்சி சொல்லும்பதர் (குமரே. சத. 28). 2. False witness; |
| பொய்ச்சாட்சியம் | poy-c-cāṭciyam n. <>id.+. See பொய்ச்சாட்சி, 1. . |
| பொய்ச்சான்று | poy-c-cāṉṟu n. <>id.+. See பொய்ச்சாட்சி, 1. . |
| பொய்ச்சான்றேறு - தல் | poy- c-cāṉṟēṟu- v. tr. <>பொய்ச்சான்று+. To give false evidence; பொய்ச்சாட்சி சொல்லுதல். வஞ்சித்துப் பொய்ச்சான்றேறுவாரும் (சிலப். 5, 128, உரை). |
| பொய்ச்சீத்தை | poy-c-cīttai n. <>பொய்+. Low-born liar; பொய்யே பேசுங் கீழ்மகன். (தொல். சொல். 57, உரை.) |
| பொய்ச்சீப்பு | poy-c-cīppu n. <>id.+. The last row of blossoms that forms on the bunch of a plantain and perishes; வாழைக்குலையிற் றோன்றியழியும் நுனிச்சீப்பு. (W.) |
| பொய்ச்சு | poyccu n. perh. id. Flaw, defect, as in a fruit; பழத்தின் குற்றம். (W.) |
| பொய்ச்சுற்றம் | poy-cuṟṟam n. <>id.+. Kinship without natural love; அன்பற்ற சுற்றம். |
| பொய்ச்சுற்றம்பேசு - தல் | poy-c-cuṟṟampēcu- v. intr. <> பொய்ச்சுற்றம்+. To claim kinship without real love; மனப்பூர்வமாகவன்றி உறவுமுறை கொண்டாடுதல். குருபாண்டவர்க் காயங்கொர் பொய்ச்சுற்றம் பேசி (திவ். பெரியாழ். 5, 3, 4). |
| பொய்ச்சூள் | poy-c-cūḷ. n. <> பொய்+. False oath; பொய்யாணை. பொய்ச்சூளா ளென்பதறியேன் யான் (பரிபா. 12, 63). |
| பொய்ச்சொல்லி | poy-colli n. <>id.+. Liar; பொய்சொல்லுபவன். (W.) |
| பொய்த்தலை | poy-t-talai. n. <>id.+. Mask or false head on a pole, pushed by thieves through a hole made in the wall of a house to ascertain whether the inmates vigilant or not; கன்னமிடுவோர் கன்னத்துளைவழியாய் உட்செலுத்தும் போலிச்சிரம். (W.) |
| பொய்த்தூக்கம் | poy-t-tūkkam n. <>id.+. 1. Unsound sleep; குறையுறக்கம். (W.) 2. See பொய்யுறக்கம், 1. |
| பொய்த்தேர் | poy-t-tēr. n. <>id.+. 1. Mirage; பேய்த்தேர். (நாமதீப. 414.) 2. Dummy bier carried in a funeral procession; |
| பொய்தல் | poytal n. prob. பொய்3-. 1. Woman's game; மகளிர் விளையாட்டு. பொய்த லாய மொடு (சிலப். 6, 151). 2. House of sand made by children in play; 3. Company of women; |
| பொய்ந்நாட்டு | poy-n-nāṭṭu n. <>பொய்+. That which is made falsely; பொய்யாக நாட்டிக் கொள்ளப்பட்டது. பொய்ந்நாட்டேனும் (சீவக. 1637). |
| பொய்ந்நீர் | poy-n-nīr n. <>id.+. See பொய்த்தேர், 1. (யாழ். அக.) . |
| பொய்ந்நெறி | poy-n-neṟi n. <>id.+. False path; evil way; தீயவழி. பொய்ந்நெறி நீக்கிய வதிசயம் (திருவாச. 26, 10). |
| பொய்ப்பத்திரம் | poy-p-pattiram n. <>id.+. False document; சிருஷ்டனைப்பத்திரம். (W.) |
| பொய்ப்பாடு | poy-p-pāṭu n. <>id.+. 1. Failure, futility; தவறுகை. 2. Proving false; |
| பொய்ப்பார் | poy-p-pār n. <>id.+. Unstable stratum, as found in digging wells; இளகலான நிலப்பகுதி. (W.) |
| பொய்ப்பிஞ்சு | poy-p-picu n. <>id.+. Tender fruit that appears early in a plant and drops down without ripening; காயாகாமல் வெம்பி யுதிரும் இளங்காய். (J.) |
| பொய்ப்பு | poyppu n. <> பொய்3-. Falsification; deception; உண்மை யற்றது. பொய்ப்பறயாரும் போற்ற (திருவாலவா, 56, 4). |
| பொய்ப்பூ | poy-p-pū n. <>பொய்+. The first flower of a plant which drops down without developing; காய்பிடிக்காது உதிரும் முதற் பூ (சங். அக.) |
| பொய்ப்பொருள் | poy-p-poruḷ n. <>id.+. Thing which is non-existent; எக்காலத்து மில்லாத பொருள். |
| பொய்படு - தல் | poy-paṭu-. v. intr. <>id.+. 1. To prove false; பொய்யாதல். 2. To fail of purpose; |
| பொய்ம்மணல் | poy-m-maṇal n. <>id.+. Quicksand; புதைமணல். Colloq. |
| பொய்ம்மான் | poy-m-māṉ n. <>id.+. Demon Mārīca, uncle of Rāvaṇa, who assumed the form of a deer; பொய்யாக மான்வேடங் கொண்ட மாரீசன். |
| பொய்ம்மூக்கு | poy-m-mūkku n. <>id.+. 1. Bottom of the nose; மூக்கின் கீழுள்ள உறுப்பு. (W.) 2. Top of the nostril; 3. Artificial nose; |
