Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொய்ம்மை | poymmai n. <>id. 1. Falsehood, lie; 1. பொய். பொய்ம்மையும் வாய்மை யிடத்த (குறாள், 292). 2. Unreality, illusion; 3. That which is counterfeit or artificial; |
| பொய்ம்மையாளர் | poymmai-y-āḷar n. <>பொய்ம்மை+. Liars, persons given to falsehood or duplicity; பொய்யர். பொய்ம்மையாளரைப் பாடாதே (தேவா, 647, 1). |
| பொய்ம்மையுத்தரம் | poymmai-y-uttaram n. <>id.+. Statement by the defendant contesting the plaintiff's statement; வாதியின் பூருவபக்கத்தைப் பிரதிவாதி மறுத்துரைக்கை. (சுக்கிரநீதி, 270.) |
| பொய்யடி | poy-y-aṭi n. <>பொய்+. (W.) 1. Playful stroke proving light or harmless; போலியடி. 2. Deceiving by false words; 3. Terrifying; |
| பொய்யடிமை | poy-y-aṭimai n. <>id.+. Insincere devotion to God; போலிப்பக்தி. பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன் (தேவா. 737, 7). |
| பொய்யடிமையில்லாதபுலவர் | poy-y-aṭimai-y-illāta-pulavar n. <>பொய்யடிமை+. Poets of the last sangam, who consecrated their lives to the worship of šiva, one of tokai-y-aṭiyār, q.v.; சிவபெருமானை வழிபடும் சங்கப்புலவர் காளான் தொகையடியார் (பதினொ திருத்தொண்டர் திருவந். 49.) |
| பொய்யம்பு | poy-y-ampu n. <>பொய்+. Sham arrow, discharged in play or mock-fight; விளையாட்டம்பு. வேடுவனாய்ப் பொய்யம் பெய்து (தேவா. 1040, 3). |
| பொய்யவியல்செய் - தல் | poy-y-aviyalcey- v. tr. <>id.+அவியல்+. To parboil; புழுக்குதல். |
| பொய்யறுகல் | poy-y-aṟu-kal n. <>id.+. Brick partially burnt; பாதிவெந்த செங்கல். (C. G.) |
| பொய்யறை | poy-y-aṟai n. <>id.+. 1. Secret compartment in a box or safe; பெட்டகத்தின் மறைவறை. Loc. 2. See பொய்க்குழி, 1. பொய்யறைப் படுத்து (சிலப். 10, 70). |
| பொய்யன் | poyyaṉ n. <>id. [K. pusiga.] Liar; பொய் பேசுபவன்.பொய்யர் கண்டிர் வாழ்க்கையாளர் (தேவ, 188, 6). |
| பொய்யாடல் | poy-y-āṭal n. <>id.+. Innocent sport, as of children; வினயமில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு. பொய்யாட லாடும் புணர்ப்பின் (பரிபா. 11, 89). |
| பொய்யாணை | poy-y-āṇai n. <>id.+. False oath, perjury; பொய்யாகச் செய்யும் பிரமாணம். (யாழ். அக.) |
| பொய்யாப்புள் | poyyā-p-puḷ n. perh. பொய3¢-+ ஆ neg.+. Rail, water-fowl; பறவை வகை (சூடா.) |
| பொய்யாமை | poyyāmai n. <>id+id. 1. Being truthful; பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 2. Impartiality; |
| பொய்யாமொழி | poy-y-ā-moḷi n. <>id.+id.+. 1. Never-failing word, true word; 1. சத்திய வசனம். 2. Sacred Scriptures of the Hindus, as the Vēdas and the āgamas; 3. The Kuṟal; 4. A poet, author of Tacai-vāṇaṉ-kōvai, |
| பொய்யாறு | poy-y-āṟu n. <>id.+. See பொய்ந்நெறி. பொய்யாற் றொழுக்கங் கொண்டு (மணி. 23, 22). |
| பொய்யிகந்தோர் | poy-y-ikantōr n. <>id.+. Sages; முனிவர். (உரி. நி.) |
| பொய்யிடை | poy-y-iṭai n. <>id.+. Slender waist; நுண்ணிய இடை. வார்மூலை பொறாத பொய்யிடை நைய (கம்பரா. ஊர்தே. 104). |
| பொய்யில்புலவன் | poy-y-il-pulavaṉ n. <>id.+ இல் neg.+. 1. Man of true wisdom; மெய்ஞ்ஞானி. பொய்யில்புலவர் புரிந்துறையு மேலுலகம் (பு. வெ. 10, 4). 2. Tiruvaḷḷuvar; |
| பொய்யுகம் | poy-yukam n. <>id.+. Kail yuga; கலியுகம். நாலாம் பொய்யுகம் (திருவிளை. இரசவாத. 30). |
| பொய்யுரம் | poy-y-uram n. <>id.+. Illusory knowledge; மித்தியாஞானம் பொய்யுரமுறு நிருவிகற்பவுரு (வேதா. சூ. 67). |
| பொய்யுறக்கம் | poy-y-uṟakkam n. <>id.+. Pretended sleep; கள்ளத்தூக்கம். மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் . . . உறங்கி (திவ். இயற். சிறிய. ம. 31). 1. See பொய்த்தூக்கம், 1. (W.) |
| பொய்யுறக்கு | poy-y-uṟakku n. <>id.+. See பொய்யுறக்கம். அமளி மேலாப் பொய்யுறக்குறங்கு வானை (கம்பரா. ஊர்தே. 213). |
| பொய்யுறங்கு - தல் | poy-y-uṟaṅku- v. intr. <>id.+. To pretend to sleep; உறங்குவதுபோல் நடித்தல். புனையிழை யொருமயில் பொய்யுறங்குவாள் (கம்பரா. உண்டா. 64). |
