Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொரிபொரியெனல் | pori-pori-y-eṉal n. Onom. expr. of (a) scolding; வசைபொழிதற்குறிப்பு. பொரிபொரியென்று பொரிந்தான். (W.): (b) rapid speaking; |
| பொரிபோடுதல் | pori-pōṭutal n. <>பொரி+. Throwing parched grain into the sacrificial fire, as in a marriage; கல்யாணகாலத்தில் அக்கினியில் நெற்பொரியை யிடுகை. |
| பொரிமலர் | pori-malar n. <>id.+. Indian beech; See புன்கு,1. (மலை.) |
| பொரிமா | pori-mā n. <>id.+. Flour of parched rice; வறுத்த அரிசியின் மா. பொரிமாவை மெச்சின பொக்கைவாயன். |
| பொரிமாச்சிந்தி | pori-mā-c-cinti n. <>பொரிமா+. See பொரிமாத்தட்டி. (யாழ். அக.) . |
| பொரிமாத்தட்டி | pori-mā-t-taṭṭi n. <>id.+. One who builds castles in the air; விண்ணெண்ணமுள்ளவன். (யாழ். அக.) |
| பொரிமாத்திரளை | pori-mā-t-tiraḷai n. <>id.+. See பொரிவிளாங்காய். (யாழ். அக.) . |
| பொரிமாதூவு - தல் | pori-mā-tūvu- v. intr. <>id.+. To season by sprinkling flour of parched rice on certain curries; பொரிமாவைக் கறியில் தூவிப் பக்குவஞ்செய்தல். (W.) |
| பொரியரிசி | pori-y-arici n. <>பொரி-2+. Parched rice; வறுத்த அரிசி. (W.) |
| பொரியரிசியேப்பம் | pori-y-arici-y-ēppam n. <>பொரியரிசி+. Belching on account of indigestion; புளிச்சேப்பம். Loc. |
| பொரியரை | pori-y-arai n. <>பொரி1-+. Rough, cracked surface of the trunk of trees; மரத்தின் பொரிந்த அடிப்பகுதி. பொரியரை ஞாழல் (சிவக. 515). |
| பொரியல் | poriyal n. <>id. 1. Frying; பொரிகை. 2. Fried food, fry; |
| பொரியல்கரியல் | poriyal-kariyal n. <>பொரியல்+. Different kinds of fried food; பல்வகையான பொரித்தவுணவு. (W.) |
| பொரியுண்டை | pori-y-uṇṭai n. <>பொரி+. See பொரியுருண்டை. (W.) . |
| பொரியுருண்டை | pori-y-uruṇṭai n. <>id.+. A ball of sweetmeat made of fried rice and molasses; நெற்பொரியைப் பாகிட்டுத் திரட்டிய உருண்டை. (பதார்த்த. 1423.) |
| பொரிவாணம் | pori-vāṇam n. <>பொரி1-+. Rocket which explodes and throws out star-like sparks; ஒருவகை ஆகாயவாணம். Loc. |
| பொரிவிளங்காய் | pori-viḷaṅkāy n. <>பொரி+. See பொரிவிளாங்காய். (W.) . |
| பொரிவிளாங்காய் | pori-viḷāṅkāy n. <>id.+. A ball of sweetmeat made of green-gram flour and sugar; சிறு பயற்றுமாவோடு சர்க்கரை சேர்த்துச் செய்த பணிகாரம். (W.) |
| பொரிவு | porivu n. <>பொரி1-. 1. A flaw in rubies; மாணிக்கக்குற்றவகை. இறுகுதல் கருகுதல் பொரிவே (திருவாலவா. 25, 14). 2. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam; |
| பொரு 1 - தல் | poru- 1 v. intr. [K. pōr.] 1. To fight, contend in warfare, engage in battle; போர்செய்தல். ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2). 2. To play games of chance; 3. To compete, vie with, strive against; 4. To blow, as the wind; 1. To play, as a lute; 2. To churn; 3. To resemble; 4. to come in collision with, dash against, as waves; 5. To reach, extend; 6. To join, unite, combine; 7. (Math.) To multiply; |
| பொரு 2 | poru n. <>பொரு-. 1. Simile; உவமை. (பிங்.) 2. Equality; 3. Obstacle; |
| பொருக்க | porukka adv. <>பொருகெனல். Quickly, speedily; விரைவாக. பொருக்க நும்வினை போயறும் (தேவா, 360, 11). |
| பொருக்கற்றுப்போ - தல் | porukkaṟṟu-p-pō- v. intr. <>பொருக்கு + அறு-+போ-. To be quite extinguished; நன்றாயவிந்து போதல். (W.) |
| பொருக்காங்கட்டி | porukkāṅ-kaṭṭi n. <>id.+. 1.Dried clod of earth; மண்ணாங்கட்டி. 2. Clot; |
