Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொருக்கு | porukku n. 1. Grain of boiled rice; பருக்கை. காக்கைக்குச் சோற்றிலோர் பொருகுங் கொடுக்க நேர்ந்திடா (அருட்பா, vi, ஆற்றாமை. 3, 1). 2. Flake, skin, thin layer that peels off, scale; 3. Bark; 4. See பொருக்குமண். (யாழ். அக.) |
| பொருக்குமண் | porukku-maṇ n. <>பொருக்கு+. Flake which rises on parched ground; செதிளாய்ப் பேர்ந்த மண். (W.) |
| பொருக்கெனல் | porukkeṉal n. Onom. expr. signifying swiftness or quickness; விரைவுக்குறிப்பு. பொருகென வீடணா புகறியாலென்றான் (கம்பரா. கும்பகர்ண. 112). |
| பொருகளம் | poruk-kaḷam n. <>பொரு-+. Field of battle; போர்க்களம். (சூடா.) பொருகளம் புகுந்தார் (கம்பரா. படைத். 67). |
| பொருகு | poruku n. cf. பொருக்கு. Boiled rice; சோறு. (திவா.) |
| பொருட்குற்றம் | poruṭ-kuṟṟam n. <>பொருள்+. (Rhet.) Impropriety or blemish in the meaning of a verse; கவியின் பொருளில் உண்டாம் பிழை. சொற்குற்றமின்று வேறுபொருட்குற்ற மென்றான் (திருவிளை. தருமி. 103). |
| பொருட்குன்று | poruṭ-kuṉṟu n. <>id.+. Mt. Mēru, as of gold; மேரு. அரும்பலியனைத்து மீயி னதுபொருட்குன்று கண்டீர் (சிவக. 2926). |
| பொருட்கை | poruṭ-kai n. <>id.+. (Nāṭya.) Gesture revealing the meaning of a verse; கவிப்பொருள் பொருந்தக் கடும் அபிநயக் கை. (சிலப். 3, 18, உரை.) |
| பொருட்சம்பந்தம் | poruṭ-campantam n. <>id.+. Fitness in regard to meaning or subject-matter; பொருளினியைபு. (W.) |
| பொருட்சார்பு | poruṭ-cārpu n. <>id.+. Attachment to wordly things; பொருளிடத்துற்றஅவா. உயிர்ச்சார்பு பொருட்சார்பிற் பற்றடங்கலும் விடுமாகில் (திருக்களிற்றுப், 39, உரை). |
| பொருட்சிதைவு | poruṭ-citaivu n. <>id.+. 1. Injury, loss of property; சொத்து நஷ்டம். 2. Change in the meaning of a word in course of time; 3. See பொருட்குற்றம். |
| பொருட்சிறப்பணி | poruṭ-ciṟappaṇi n. <>id.+ சிறப்பு+. (Rhet.) A class of figure of speech relating to sense; See அர்த்தாலங்காரம். (யாழ். அக.) |
| பொருட்சுவை | poruṭ-cuvai n. <>id.+. Beauty of ideas, as in a verse; கவியின் அர்த்தரசம். (யாழ். அக.) |
| பொருட்செல்வம் | poruṭ-celvam n. <>id.+. Material wealth; திரவிய சம்பத்து. பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள (குறள். 241). |
| பொருட்செல்வி | poruṭ-celvi n. <>id.+. See பொருளின் செல்வி. (W.) . |
| பொருட்சேதம் | poruṭ-cētam n. <>id.+. See பொருட்சிதைவு, 1. (யாழ். அக.) . |
| பொருட்டன்மை | poruṭṭaṉmai n. <>id.+ தன்மை. (Rhet.) Description of the form of any person or thing; பொருளின்கணுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு அலங்கரித்துக் கூறும் அணிவகை. (தண்டி. 28.) |
| பொருட்டால் | poruṭṭāl adv. <>பொருட்டு. See பொருட்டு. வென்றிப் பொருட்டால் . . . கன்றிக் கறுத்தெழுந்து (நாலடி, 315). . |
| பொருட்டிரிபு | poruṭṭiripu n. <>பொருள் + திரிபு. Change in the meaning of words and expressions according to the manner in which they are read; ஒரு சொல்லில் அல்ல்து சொற்றொடரிலுள்ள பொருள்மாறுபாடு. (W.) |
| பொருட்டு | poruṭṭu prob. id. n. 1. Cause; காரணம். (பிங்.) 2. Matter of importance, thing of weight; 3. To, for the sake of, in order to, to the end that, on account of, with, by, through; |
| பொருட்டொடர்நிலைச்செய்யுள் | poruṭṭoṭar-nilai-c-ceyyuḷ n. <>id.+ தொடர்நிலை+. (Rhet.) Narrative or epic poem; காவியம். (சிலப். உரைப்பாயிரம்.) |
| பொருட்படு - தல் | poruṭ-paṭu- v. intr. <>id.+. To be useful; பயன்படுதல் (யாழ். அக.) |
| பொருட்படுத்து - தல் | poruṭ-paṭuttu- v. tr. <>id.+. To esteem, make important; மதித்தல். நாய்மேற் றவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த(திருவாச, 10, 20). |
| பொருட்பால் | poruṭ-pāl n. <>id.+. Wealth, as a topic treated in works, like Kuṟaḷ, Nālaṭi,etc.; முப்பால்களுள் பொருளைப்பற்றிக் கூறும் நூற்பகுதி. (குறள்.) |
| பொருட்பிரபஞ்சம் | poruṭ-pirapacam n. <>id.+. (šaiva.) Material world of Reals from pirutivi to nātam; பிருதிவிழுதல். நாதமீறாகவுள்ள தத்துவங்கள்.(சி. போ. வதி. 92.) |
