Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொருட்பிறிதின்கிழமை | poruṭ-piṟitiṉ-kiḻamai n. <>id.+. (Gram.) Separable relation of two different objects; ஒரு பொருளுக்குத் தன்னினும் பேறானதனோடு உள்ள உரிமை. (சங். அக.) |
| பொருட்பின்வருநிலை | poruṭ-piṉ-varunilai n. <>id.+. (Rhet.) Repeating the same idea in different forms of expression; முன்வந்த பொருளே பின்னும் பல விடங்களில் வரும் அணி. (தண்டி, 41, உரை.) |
| பொருட்பெண்டிர் | poruṭ-peṇṭir n. <>id.+. Harlots; வேசியர். பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள், 913). |
| பொருட்பெயர் | poruṭ-peyar n. <>id.+. 1. Noun derived from the name of a concrete object; பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் (நன். 132.) 2. Name of a thing; |
| பொருண்மயக்கம் | poruṇ-mayakkam n. <>id.+. (Gram.) Use of a particular caseending appropriate to the sense intended, though different from the proper grammatical case-ending; தன்பொருளிற்றீராது பிறிதொன்றன் பொருளின்கண்ணும் உருபு வருகை. (பி. வி. 15, உரை.) |
| பொருண்மன்னன் | poruṇ-maṉṉaṉ n. <>id.+. Kubēra, as king of wealth; குபேரன்.பொருண் மன்னனைப் பற்றிப் புட்பகங்ககொண்ட மருண் மன்னனையெற்றி (தேவா. 748, 11). |
| பொருண்முடிவு | poruṇ-muṭivu n. <>id.+. 1. Termination of a topic; விஷயமுடிவு. 2. Substance of a discourse; 3. (Gram.) Predicate, as completing the sense; 4. Complete sentence; |
| பொருண்முரணணி | poruṇ-muraṇ-aṇi n. <>id.+. (Rhet.) Antithesis; பொருள் முரண்படத் தொடுக்கும் அணிவகை. (யாழ். அக.) |
| பொருண்மை | poruṇmai n. <>id. 1. Meaning, purport or subject-matter of a work; கருத்துப்பொருள். போத யோகின் பொருண்மையைக் காட்டுழி (கந்தபு. மேருப். 66). 2. See பொருணிலை, 1. (தொல். சொல். 236, சேனா.) |
| பொருண்மொழி | poruṇ-moḻi n. <>id.+. 1. Truthful utterance; மெய்வார்த்தை. பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் (சிலப். 30, 192). 2. Mantra, incantation; |
| பொருண்மொழிக்காஞ்சி | poruṇ-moḻi-k-kāci n. <>பொருண்மொழி+. 1. (Purap.) Theme describing the principles of conduct that ensure happiness in this life and the life to come; உயிர்க்கு இம்மை மறுமைகளில் உறுதி தருமூ பொருளை ஒருவனுக்குக் கூறுதல் பற்றிய புறத்துறை. (புறநா. 24, துறைவிளக்கம்.) 2. (Purap.) Theme of sages describing the basic truths of their experience; |
| பொருணயம் | poruṇayam n. <>பொருள் + நயம். (Rhet.) Excellence of ideas in a work, opp. to coṉṉayam; நூலின் கருத்துநயம். (W.) |
| பொருணான்கு | poruṇāṉku n. <>id.+ நான்கு. See புருஷார்த்தம். உகநான்கும் பொருணான்கும் . . . படைத்துடைய முதல்வனை (கலிங். 5, புதுப்.). . |
| பொருணி | poruṇi n. Toddy, fermented liquor; கள் (W.) |
| பொருணிலை | poruṇilai n. <>பொருள் + நிலை. 1. Quality, nature; பொருளின்றம்மை. எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல். சொல். 107). 2. (Gram.) See பொருண்முடிவு, 3. (யாழ். அக.) |
| பொருணூல் | poruṇūl n. <>id.+ நூல். 1. Treatise on the characteristics of love poetry; அகப்பொருளைப்பற்றிய நூல். ஒங்கிய பொருணூ லன்பினைந்திணையென் றெடுத்த (திருவாலவா, 15, 12). 2. Political science; economics; |
| பொருத்தக்கடுதாசி | porutta-k-kaṭutāci n. <>பொருத்தம்+. Written contract, as in a marriage; கலியாணம் முதலிய விஷயங்களைக் குறித்த உடன்படிக்கைப் பத்திரம். (W.) |
| பொருத்தச்சக்கரம் | porutta-c-cakkaram n. <>id.+. (Astrol.) Diagram to ascertain the agreement between the nakṣatras of the bride and bridegroom; மணமக்களின் நட்சத்திரப் பொருத்தம் பார்க்கும் சக்கரம். (W.) |
| பொருத்தச்சீட்டு | porutta-c-cīṭṭu n. <>id.+. See பொருத்தக்கடுதாசி. (யாழ். அக.) . |
| பொருத்தம் | poruttam n. <>பொருந்து-. 1. Joining, fitting, agreeing, adaptation; பொருந்துகை. 2. propriety; 3. Concord, harmony; 4. Agreement, bargain, contract, treaty, covenant; 5. (Astrol.) Favourableness or agreement of horoscopes of the two parties to be married; 6. Satisfaction, approbation; 7. Verifying; 8. Innoculation; |
