Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொருந்திவிடு - தல் | porunti-viṭu- v. intr. <>id.+. (W.) 1. To join, as broken bones; ஒடிந்த எலும்பு முதலியன கூடுதல். 2. To be stipulated; |
| பொருந்து - தல் | poruntu- 5 v. intr. [K. porudu.] 1. To agree, consent; மனம் இசைவாதல். கொணர்குவாயெனப் பொருந்தினன் (கம்பரா. மருத்து. 85). 2. To be suitable, proper agreeable, appropriate; 3. To abide; 4. To make a contract, an agreement; 5. To come into close contact; 6. To occur, happen; 7. To succeed; to come to a prosperous issue; 8. To be constituted, made; 1. to combine with; 2. To reach, approach; 3. to associate cordially; 4. To cohabit with; |
| பொருந்துமாறு | poruntum-āṟu n. <>பொருந்து-+. Ratiocination; யுக்தி. பொருந்துமாற்றானும் புலாலுண்டல் இழிந்ததென்பது (குறள். 257, உரை.) |
| பொருநராற்றுப்படை | porunar-āṟṟu-p-paṭai n. <>பொருநர்+. A poem on Cōḻaṉ Karikāṟ-peruvaḷattāṉ, in Pattu-p-pāṭṭu by Muṭa-t-tāma-k-kaṇṇiyār; சோழன் கறிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியதும் பத்துப்பாட்டினுள் ஒன்றுமான ஆற்றுப்படை நூல். |
| பொருநல் | porunal n. perh. பொருந்-. The river Tāmiraparṇi; தாமிரபர்ணி. பொருநல் வடகரை வண்டொலை வில்லி மங்கலம். (திவ். திருவாய். 6, 5, 8). |
| பொருநன் 1 | porunaṉ n. <>பொரு-. 1. Warrior, hero; வீரன். பாலறி மரபிற் பொருநர் கண்ணும் (தொல். பொ. 74). 2. Strong, robust, valiant man; 3. King; 4. Chief of a hilly tract; 5. Commander of an army, general; 6. One who is the standard of comparison; 7. Superior person, leader; 8. Foe, enemy; |
| பொருநன் 2 | porunaṉ n. prob. பொருந்-. 1. One who dances and sings on the battlefield and on the threshing-floor; ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனுஞ் சென்றுபாடுங் கூத்தன். (தொல். பொ. 91, உரை.) 2. Actor, dancer; |
| பொருநாறு | porunāṟu n. <>பொருநன்2+ ஆறு. See பொருநராற்றுப்படை. முருகு பொருநாறு பாணிரண்டு (பத்துப்பாட்டு, தனிப்பா.). . |
| பொருநை | porunai n. perh. பொருந்-. 1. The river Tāmiraparṇi; தாமிரபர்ணி. கமரி பொன்னி வகை பெருநை நன்னதிகள் (குமர. பிர. மீனா. பிள். 11). 2. A river in the Cēra country. |
| பொருநைத்துறைவன் | porunai-t-tuṟaivaṉ n. <>பொருநை+. 1. Cēra King, as lord of the āṉ porunai river; சேரன். (பிங்.) 2. Pandya king, as lord of the Tāmiraparṇi river; |
| பொருப்பரையன் | porupparaiyaṉ n. <>பொருப்பு + அரையன். The Himālayas, as king of hills; இமயமலை. பொருப்பரையன் மடப்பாவை (நந்திக். பாயி.). |
| பொருப்பன் | poruppaṉ n. <>id. 1. Chief of a hilly tract; குறிஞ்சிநிலத் தலைவன். (திவா.) 2. Hunter of the hills; 3. pandya king, as lord of Pothiyam; 4. Lord of a hill; 5. The Himalayas; |
| பொருப்பு | poruppu n. prob. பொரு-. 1. Mountain; மலை. வரைத்தா ழருவிப் பொருப்பின் (மதுரைக். 42). 2. Spur of a range of hills; |
| பொருப்பெறிந்தான் | poruppeṟintāṉ n. <>பொருப்பு+. Skanda, as one who pierced the Krauca hill with His spear; [கிரவுஞ்சகிரியை வேலாலெறிந்தவன்] முருகக்கடவுள். (உரி. நி.) |
| பொருபுவி | poru-puvi n. <>பொரு-+. (W.) 1. Battle-field; போர்க்களம். 2. Desert tract; |
| பொருபொரு - த்தல் | poru-poru- 11 v. intr. <>பொருபொரெனல். (W.) 1. To be liable to crumbling from too much frying; அறத்தீய்தல். 2. To mutter in dissatisfaction; |
