Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொருள்கோள் | poruḷ-kōḷ n. <>பொருள்+. 1. Modes of construing verses, of which there are eight, viz., yāṟṟu-nīr, moḻi-māṟṟu, niraṉiṟai, viṟ-pūṭṭu, tāppicai, aḷai-maṟi-pāppu, koṇṭukūṭṭu, aṭimaṟi-māṟṟu; யாற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என எண்வகையாகச் செய்யுட்குப் பொருள்கொள்ளும் முறை. (நன். 410.) 2. A kind of marriage. 3. A kind of marriage. |
| பொருள்செய் - தல் | poruḷ-cey- v. <>id.+. tr. 1. To treat with regard, esteem highly; மதித்தல். நான் உன்னைப் பொருள் செய்யேன். 2. To comment on, explain; 3. To acquire wealth; |
| பொருள்செய்வோர் | poruḷ-ceyvōr n. <>id.+. Vaisyas, as merchants; வைசியர். (உரி.நி.) |
| பொருள்வகை | poruḷ-vakai n. <>id.+. See பொருள்கோள். (நம்பியகப். 211.) . |
| பொருள்வயிற்பிரிவு | poruḷ-vayiṟ-pirivu n. <>id.+வயின்+. (Akap.) Separation of a lover from his beloved, in pursuit of wealth; பொருள் தேடற் காரணம்பற்றித் தலைவியைத் தலைவன் பிரிகை. (திருக்கோ. 332, அவ.) |
| பொருள்விலையாட்டி | poruḷ-vilaiyāṭṭi n. <>id.+. Prostitute; விலைமாது. வருணக்காப்பிலள் பொருள்விலையாட்டியென்று (மணி. 5, 87). |
| பொருள்விளங்கவைத்தல் | poruḷ-vīḷaṅ-ka-vaittal n. <>id.+. (Rhet.) Perspicuity, clarity of expression; பொருள் எளிதில் விளங்குமாறு செய்யுள் முதலியவற்றை அமைக்கை. (W.) |
| பொருள்வீடு | poruḷ-vīṭu n. <>id.+விடு-. Non-attachment to worldly goods; பொருளிற்பற்றறுகை. (யாழ்.அக.) |
| பொருளகராதி | poruḷ-akarāti n. <>id.+. Dictionary of synonymous words, one of the four sections of Catur-akarāti; சதுரகராதியில் ஒருபொருட் பல்பெயர் கூறும் பகுதி. (W.) |
| பொருளட்டவணை | poruḷ-aṭṭavaṇai n. <>id.+. Table of contents; நூல் முதலியவற்றின் விஷயக்குறிப்பு. Mod. |
| பொருளடக்கம் | poruḷ-aṭakkam n. <>id.+. See பொருளட்டவணை. Mod. . |
| பொருளணி | poruḷ-aṇi n. <>id.+. (Rhet.) A class of figure of speech relating to sense, opp. to col-l-aṇi. See அர்த்தாலங்காரம். பொருளணியியல் (தண்டி.) |
| பொருளதிகாரம் | poruḷ-atikāram n. <>id.+. 1. Treatise on akapporuḷ; அகப்பொருளிலக்கண நூல். அரசன் பொருள திகார மின்மையிற் கவல்கின்றான் (இறை. 1, உரை). 2. The third division of Tolkāppiyam, treating of akam, puṟam, etc.; 3. That part of ethics which treats of poruṇāṉku, embracing all kinds of knowledge and practice; |
| பொருளந்தாதி | poruḷ-antāti n. <>id.+. See பொருளிசையந்தாதி (யாழ். அக.) . |
| பொருளறை | poruḷ-aṟai n. <>id.+. Treasury; பொக்கிஷசாலை. பெரும் பொருளறையுட்பட்ட ஆணிப்பொன் (திருவாலவா. 55,24). |
| பொருளன் | poruḷan n. <>id. God, as Ultimate Reality; பரம்பொருள். பொருளன் புனிதன் (சிலப், 10, 179). |
| பொருளாகுபெயர் | poruḷ-ākupeyar n. <>id.+. Metonymy, where the whole is put for its part; முதற்பொருளின் பெயர் அதன்சினைக்காகும் ஆகுபெயர். (நன்.290.) |
| பொருளாசை | poruḷ-ācai n. <>id.+. Covetousness, avarice; திரவியத்தில் உள்ள அவா. (W.) |
