Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொருளாள் | poruḷ-āḷ n. <>id.+. Wife, as one's property; மனைவி. பிறன் பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள், 141). |
| பொருளானந்தம் | poruḷ-āṉantam n. <>id.+. A defect in composition which consists of inauspicious treatment of iṟaicci, eulogy. simile, etc.; இறைச்சியினும், புகழ்ச்சியினும், உவமையினும், பிறவற்றினும் ஊறுபயப்பப்பாடும் ஆனந்தக்குற்றம். (யாப். வி. பக். 519.) |
| பொருளிசையந்தாதி | poruḷ-icai-y-antāti n. <>id.+. Variety of antāti-t-toṭai in which the repetition of the ending is confined to mere sense and has no reference to word or sound, opp. to iyal-icai-y-antāti; ஓசையாலன்றிப் பொருளால் வரும் அந்தாதித்தொடை. (ஈடு, 1, 6, 2, ஜீ.) |
| பொருளியல் | poruḷ-iyal n. <>id.+. An anthology of poems on akapporuḷ; அகப்பொருள் பற்றிய செய்யுளடங்கிய ஒரு நூல் (களவியற்.) |
| பொருளிலக்கணம் | poruḷ-ilakkaṇam n. <>id.+. Grammar dealing with akam, puṟam, etc.; அகம் புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கண நூல். (W.) |
| பொருளின்செல்வி | poruḷiṉ-celvi n. <>id.+. lakṣmī, as Goddess of wealth; திருமகள். (பிங்.) |
| பொருளின்பம் | poruḷ-iṉpam n. <>id.+. See பொருட்சுவை. (இலக். வி. 63, உரை.) . |
| பொருளுபதை | poruḷ-upatai n. <>id.+. Testing a minister's or officer's loyalty by throwing him into circumstances in which he is tempted by tales of prospective prosperity under another sovereign, one of four upatai, q.v.; அமைச்சர் முதலியோரை அரசன் தெரிந்தெடுத்தற்குரிய உபதை நான்கனுள் வேற்றரசனிடம் அதிகப்பொருள் பெறலாமென்று கூறுவித்துச் சோதிக்கும் முறை. (குறள், 1, உரை.) |
| பொருளுரை | poruḷ-urai n. <>id.+. 1.Truthful or unfailing word; மெய்யுரை. பொய்யுரையே யன்று பொருளுரையே (சிலப். 9, 18). 2. Useful word or speech; 3. Reputation; 4. Mantra; |
| பொருளுரையாளர் | poruḷ-urai-y-āḷar n. <>பொருளுரை+. Wise men, sages; சான்றோர். பொருளுரையாளர் நச்சுக்கொன்றேற்கு (சிலப்.16, 65). |
| பொருளுவமை | poruḷ-uvamai n. <>பொருள்+. (Rhet.) A kind of simile in which the qualities of two things are compared; பொருளின் தன்மையை உவமித்துக் கூறும் அணிவகை. (யாழ். அக.) |
| பொருனை | poruṉai n. See பொருநை. அலைநீர்ப் பொருனை நதிமுகத்தும் (திருவாலவா. திருநாட்டுச். 9). . |
| பொரேரெனல் | porēr-eṉal n. Onom. expr. signifying suddenness; சடிதிக்குறிப்பு. வண்டு பொரேரெனவெழ (பரிபா. பக். 166, 30). |
| பொல் | pol n. [K. pol.] See பொல்லு2. . |
| பொல்லது | pollatu n. <>பொல்லா-மை. [K. polladu.] See பொல்லாது. நல்லது பெரல்லது. (W.) . |
| பொல்லம் | pollam n. <>பொல்லு-. 1. Stitching; தைக்கை. (திவா.) 2. Joining, as in tailoring or in carpentry; 3. Piece, division, strip, used in patch work; |
| பொல்லம்பொத்து - தல் | pollam-pottu- v. tr. <>பொல்லம்+. To sew together, as two pieces of cloth; கிழிந்த துணியின் இரண்டு தலையையுங் கூட்டித் தைத்தல். பொல்லம்பொத்திய பொதியுறு போர்வை (பொருந. 8). |
| பொல்லர் | pollar n. <>பொல்லு-. 1. Tailors, as sewers; தையற்காரர். (பிங்.) 2. Leather-workers, shoe-makers; |
| பொல்லா | pollā adj <>பொல்லா-மை. [K. polla M. pollā.] 1. Bad, vicious, evil, wicked; தீமையான. பொல்லாக் கனாக்கண்டார் (சீவக. 2173). 2. Severe, intense; |
| பொல்லாக்காட்சி | pollā-k-kāṭci n. <>பொல்லா+. Confused knowledge, bewilderment; மயக்கவறிவு. வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி யென்று (மணி. 30, 71). |
| பொல்லாக்காலம் | pollā-k-kālam n. <>id.+. Evil or unpropitious time; கெட்டகாலம். |
| பொல்லாங்கு | pollāṅku n. <>பொல்லா-மை. 1, Evil, vice, vileness, wickedness; தீது. பொல்லாங்கென்பவை யெல்லாந் தவிர் (கொன்றைவே.). 2. Defect, fault; 3. Deficiency; degradation; 4. Ruin, injury, destruction; 5. Forgetfulness; |
| பொல்லாச்சாம்பற்றரை | pollā-a-cāmpaṟṟarai n. <>பொல்லா+. A kind of soil unfit for building purposes; கட்டடத்திற்குத் தகுதியில்லாத தரைவகை. உவர்த்தரை ஈளைத்தரை பொல்லாச் சாம்பற்றரை (சிலப். 3, 94, உரை, பக்.114). |
