Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொலிக்கட்டை | poli-k-kaṭṭai n. <>பொலி+. Stock to which the leading ox in threshing is tied; பொலியெருதுகளைக் கட்டும் மரக்கட்டை. (யாழ். அக.) |
| பொலிக்கந்து | poli-k-kantu n. <>id.+. Chaff containing some grain, left on the threshing-floor after winnowing; தூற்றியபின் களத்திற் கிடக்கும் நெற்கலந்த பதர். (W.) |
| பொலிக்குறிப்பு | poli-k-kuṟippu n. <>id.+. Memorandum of the heaps of corn on a threshing-floor; கதிரடித்துக் குவித்த நெற்பட்டடைக் கணக்கு. (R. T.) |
| பொலிக்கெடி | poli-k-keṭi n. prob. id.+கொடி. Straw; வைக்கோல். (யாழ். அக.) |
| பொலிகடா | poli-kaṭā n. <>பொலி-+. 1. See பொலியெருது. . 2. Ram or he-goat kept for covering; 3. Rake, reckless person who leads a loose life; |
| பொலிகாளை | poli-kāḷai n. <>id.+. See பொலியெருது, 1. . |
| பொலிகூறு - தல் | poli-kūṟu- v. intr. <>பொலி+. To shout poli-y-ō-poli in joy and as a blessing to a landlord when the year's harvest is over; அறுவடைமுடிவிற் களத்தே மகிழ்ச்சிக்குறியாகவும் பண்ணையாருக்கு வாழ்த்தாகவும் பாடிப் பொலியோபொலி என்று கூவுதல். (W.) |
| பொலிகை | polikai n. <>பொலி-. See பொலிசை. (S. I. I. iii, 55, 8.) . |
| பொலிச்சல் | policcal n. <>id. Covering, especially among animals; புணர்ச்சி. Loc. |
| பொலிச்சற்காளை | policcaṟ-kāḷai n. <>பொலிச்சல்+. See பொலியெருது, 1. . |
| பொலிசை | policai n. <>பொலி-. [M. polisa.] 1. Gain, profit; இலாபம். பொன் பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார் (சீவக. 2546). 2. Interest, especially in kind; |
| பொலிசையூட்டு - தல் | policai-y-ūṭṭu- v. intr. <>பொலிசை+. To pay interest; வட்டி செலுத்துதல். |
| பொலிசையூட்டு | policai-y-ūṭṭu n. <>id.+. Earning interest; வட்டி பெறுகை. பொலிசை யூட்டுக்கு ... வைத்த காசு (S. I. I. ii, 121). |
| பொலித்ள்ளி | poli-taḷḷi n. <>பொலி+. Village servant who assists in measuring paddy, especially by shoving it within easy reach of the marakkāl; களத்திலே நெல்லை அளக்கும்போது அதனைக் குவித்துத் தரும் கிராமத்து ஆள். Loc. |
| பொலிதூற்று - தல் | poli-tūṟṟu- v. tr. <>id.+. To separate grains from chaff by winnowing; களத்தில் நெல்லைப் பதர்போகக் காற்றில் தூற்றுதல். |
| பொலிநடையன் | poli-naṭaiyaṉ n. <>id.+. See பொலியெருது, 2. (யாழ். அக.) . |
| பொலிப்பாட்டு | poli-p-pāṭṭu n. <>id.+. 1. Song sung by farmers in the threshing-floor in praise of the landlord at the end of a harvest; அறுவடைமுடிவிற் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு. Loc. 2. Strong invective; |
| பொலிப்பாடு | polippāṭu n. <>பொலிப்பு+ஆடு. See பொலிகடா, 2. பொலிப்பாட்டைப்போலே புறப்பட்டாள் (விறலிவிடு. 785). . |
| பொலிப்பாய் | polippāy adv. perh. பொலி-+ஆ-. Gently; மெதுவாய். Loc. |
| பொலிப்பு | polippu n. <>id. Act of covering, especially by a bull; புணர்ச்சி. |
| பொலிப்புக்கடா | polippu-k-kaṭā n. <>பொலிப்பு+. See பொலிகடா, 1. பொலிப்புக்கடாவின் கொழுப்பு (விறலிவிடு. 632). . |
| பொலிபாடுதல் | poli-pāṭutal n. <>பொலி+. 1. Singing by farmers in the threshing-floor when cattle are being led to tread the sheaves; களத்தில் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப்பாடுகை. (சிலப். 10, 137, உரை.) (W.) 2. Singing of poli-p-pāṭṭu; |
| பொலிபொலியெனல் | poli-poli-y-eṉal n. Redupl. of பொலி+. Expression shouted to urge bullocks in treading out grain; சூட்டடியிற் பிணையல்மாடுகளை ஓட்டும்போது உழவரிடும் ஒலிக்குறிப்பு. (W.) |
| பொலியளவு | poli-y-aḷavu n. <>பொலி+. Over-measure, liberal measuring of grain, on a threshing-floor; களத்திற் சூடடித்தவுடன் தாராளமாக அளக்கும் நெல்லளவு. |
