Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொலியூட்டு | poli-y-ūṭṭu n. <>id.+. See பொலிசையூட்டு. (S. I. I. iii, 84, 88.) . |
| பொலியெருது | poli-y-erutu n. <>பொலி-+. 1. Bull kept for covering; பசுக்களைச் சினையாக்குதற் பொருட்டு வளர்க்கப்படும் காளை. (பிங்.) கொடிய பொலியெருதை யிருமூக்கிலும் கயிறொன்று கோத்து (அறப். சத. 42). 2. The leading ox in treading out grain on a threshing-floor; |
| பொலிவீசு - தல் | poli-vīcu- v. tr. <>பொலி+. To winnow the heap of grain on a threshing-floor; களத்தில் நெல்லைப் பதர்போக விசுதல். Loc. |
| பொலிவீடு | polivīṭu n. prob. id.+விடு-. [T. boli.] Village given as an endowment for temple expenses; கோயிற்செலவுகட்டு விடப்படுங் கிராமம். பொலிவீடாகப் ... புத்தூர் என்கிற கிராமத்தை ஸமர்ப்பித்தான் (கோயிலொ. 125). |
| பொலிவு | polivu n. <>பொலி-. [T.polpu.] 1. Brightness or bloom of countenance; முகமலர்ச்சி. 2. Grandness of appearance, as from dress; 3. Beauty, splendour, lustre; 4. Prosperity; 5. Largeness; 6. Fullness, abundance, copiousness; 7. Height; loftiness; 8. Gold; 9. Speciousness, plausibility; 10. Covering, among animals; |
| பொலிவுமங்கலம் | polivu-maṅkalam n. <>பொலிவு+. (Puṟap.) Theme describing the public celebrations on the birth of a prince; மன்னவன் மகிழப் பிறந்த பாலனைப் பலருங் கொண்டாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 23.) |
| பொலிவேடு | polivēṭu n. See பொலிவீடு. கொடியாலத்தைப் பொலிவேட்டுக் கிராமமாகச் சமர்ப்பித்தான் (கோயிலொ. 125). . |
| பொல¦சு | polīcu n. <>E. police. (J.) 1. Police; போல¦ஸ் இலாகா. 2. Constable; |
| பொலுகு - தல் | poluku- 5 v. intr. <>பல்கு-. [T. polazu.] 1. To increase, enlarge, as a sore; to spread, as an eruption; அதிகப்படுதல். 2. To flow, drip, as water; |
| பொலுபொலெனல் | polu-poleṉal n. Onom. expr. signifying (a) falling loosely or quickly; உதிர்தற் குறிப்பு: (b) curmbling, as of earth; |
| பொழி 1 - தல் | poḻi- 4 v. tr. 1. To pour forth, shower, as rain; பெய்தல். கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் (புறநா. 203). 2. To discharge in abundance; 3. To give liberally; 4. To pour forth a torrent of eloquence; 1. To flow, overflow; 2. To abound, as wealth; 3. To settle rest, as a cloud on a mountain; |
| பொழி 2 | poḻi n. [T. M. poli.] 1. Ridge; வயல்வரம்பு. Loc. 2. Boundary, limit; 3. A small strip of land between sea and lagoon; 4. Joint; 5. That which is peeled off, as fibre or rind; |
| பொழிப்பு | poḻippu n. prob. பொழி-. 1. See பொழிப்புரை. பொழிப்பகல நுட்பநூலெச்சம் (நாலடி, 319). . 2. Argument of a poem or treatise; 3. Clue, hint, short direction; 4. Inference from appearances or circumstances; 5. See பொழிப்புத்தொடை. பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபும் (தொல். பொ. 402). |
| பொழிப்புத்திரட்டு - தல் | poḻippu-t-tiraṭṭu- v. intr. <>பொழிப்பு+. To give the substance, as of a passage; பிண்டப்பொருள் கூறுதல். கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டி யகலங்கூறல் (இறை. கள. 1, 13). |
| பொழிப்புத்தொடை | poḻippu-t-toṭai n. <>id.+. (Pros.) Versification in which there is mōṉai, etc., in the first and third feet of a four-feet line; அளவடியுள் முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது. (இலக். வி. 723.) |
