Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொற்கணக்கு | poṟ-kaṇakku n. <>id.+. Table of weights for precious metals; troy weight; பொன்னிறையளவு. (W.) |
| பொற்கம்பி | poṟ-kampi n. <>id.+. Gold wire; தங்கக்கம்பி. பொற்கம்பியினை யொத்த ... நரம்பினது (சிறுபாண். 34, உரை). |
| பொற்கலசம் | poṟ-kalacam n. <>id.+. 1. Pot-shaped finial of gold, as an ornament on a tower; கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் பொன்னாலாகிய கும்பம். 2. Golden vial, golden vessel; |
| பொற்கலம் | poṟ-kalam n. <>id.+. 1. Golden vessel; பொற்பாத்திரம். பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் (நாலடி, 206). 2. Golden ornament; |
| பொற்கலன் | poṟ-kalaṉ n. <>id.+. See பொற்கலம். பொன்னிற் பிறிதாகிய பொற்கலனே (கம்பரா. இரணிய. 112). . |
| பொற்கலனிருக்கை | poṟ-kalaṉ-irukkai n. <>பொற்கலன்+. See பொற்பண்டாரம். (பிங்.) . |
| பொற்கலியாணம் | poṟ-kaliyāṇam n. <>பொன்+. Golden jubilee of a wedding; மணத்தேதி தொடங்கி ஐம்பதாண்டு முடிந்தவன்று கணவனும் மனைவியும் கொண்டாடும் சடங்கு. Chr. |
| பொற்காசு | poṟ-kācu n. <>id.+. 1. Gold coin; பொன்னாணயம். (திவா.) 2. Horse-gram; |
| பொற்காரை | poṟ-kārai n. <>id.+. A gold necklet; பொன்னாலியன்ற கழுத்தணிவகை. (சங். அக.) |
| பொற்கிழி | poṟ-kiḻi n. <>id.+. Gold or gold coins tied up in a piece of cloth; சீலையின் முடிந்த நிதிப்பொதி. கையுறைவேலா னீந்த பொற்கிழி (திருவிளை. தருமிக். 81). |
| பொற்கூடம் | poṟ-kūṭam n. <>id.+. A mountain to the north of the Himalayas; See ஏமகூடம். பொற்கூடஞ் சென்றுறுதி (கம்பரா. மருத்து. 24). |
| பொற்கெண்டை | poṟ-keṇṭai n. <>id.+. See பொற்சரிகை. (யாழ். அக.) . |
| பொற்கெனல் | poṟkeṉal n. <>id. Expr. of being or becoming golden in colour; பொன்னிறமுடையதாதற் குறிப்பு. பன்மலர் பொற்கெனும் பரிசு (தணிகைப்பு. நகர. 37). |
| பொற்கைப்பாண்டியன் | poṟ-kai-p-pāṇṭiyaṉ n. <>id.+. A Pāṇṭiyaṉ who is said to have punished himself for knocking at the door of a Brahmin woman's house during his nightly rounds, by cutting off his hand and obtained a golden hand instead; இரவில், பார்ப்பனி யொருத்தியின் வீட்டுக் கதவைத் தட்டிப்போந்த குற்றத்திற்காகத் தன் கை குறைத்து, அக்கைக்குப் பிரதியாகப் பொற்கை பூண்ட பாண்டியவேந்தன். (தொல். பொ. 89, இளம்பூ.) |
| பொற்கொல்லன் | poṟ-kollaṉ n. <>id.+. See பொன்செய்கொல்லன். பொற்கொல்லராயிர வரைக்கொன்று (சிலப். பதி. உரைபெறுகட்டுரை, 1). . |
| பொற்கோள் | poṟ-kōḷ n. <>id.+. The planet Jupiter; வியாழன். எரிபசும் பொற்கோள் வந்து (திருவிளை. உக்கிரதிருவவ. 11). |
| பொற்சபை | poṟ-capai n. <>id.+. The Golden Hall at Chidambaram; சிதம்பரத்திலுள்ள கனகசபை. (சங். அக.) |
| பொற்சரக்கு | poṟ-carakku n. <>id.+. Goods of the highest quality, valuable as gold; உயர்ந்த பண்டம். (W.) |
| பொற்சரடு | poṟ-caraṭu n. <>id.+. Necklace made by plaiting gold threads; பொற்கம்பியாற் பின்னிய கழுத்தணிவகை. Loc. |
| பொற்சரிகை | poṟ-carikai n. <>id.+. Gold thread, gold fringe; ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன்னாலமைந்த இழை. |
| பொற்சிலை | poṟ-cilai n. <>id.+. 1. Golden image; பொன்னாலான பிரதிமை. 2. Mt. Mēru, as golden; |
| பொற்சின்னம் | poṟ-ciṉṉam n. <>id.+. Small piece of gold put by warriors in their mouths when going to war; போர்க்குச் செல்லும் வீரர் வாயிலிட்டுக்கொள்ளும் பொற்றுண்டு. (சீவக. 2303, உரை.) |
| பொற்சீந்தில் | poṟ-cīntil n. <>id.+. 1. A superior kind of gulancha. See நற்சீந்தில். (M. M.) 2. Woolly heart-leaved moon-seed, m. cl., Tinospora malabarica; |
| பொற்சுண்ணம் | poṟ-cuṇṇam n. <>id.+. 1. Perfumed power strewn upon persons on great occasions; விழாக்களில் மக்கள் உடலின்மீது தூவப்படும் பரிமளச்சுண்ணம். (திருவாச. 9, 1.) 2. Gold dust used in smearing the body for adornment; |
| பொற்சுண்ணமிடித்தல் | poṟ-cuṇṇamiṭittal n. <>id.+. The ceremony of pounding turmeric with perfumes; வாசனைப்பண்டங்கலந்து மஞ்சளிடிக்கையாகிய ஒரு சடங்கு. உமையாள் கொழுநற் கேய்ந்த பொற்சுண்ணமிடித்து நாமே (திருவாச. 9, 3). |
