Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொற்றாமரை | poṟṟāmarai n. <>id.+ தாமரை. 1. Golden lotus, as of Svarga; பொன்மயமான கமலம். பொற்றாமரை யடியே போற்றும் பொருள்கேளாய் (திவ். திருப்பா. 29). 2. Sacred tank, as in the temple at Madura; 3. See பொற்பூ, 2. பைம் பொற்றாமரை பாணர்ச் சூட்டி (பதிற்றுப்.48). |
| பொற்றாரை | poṟṟārai n. <>id.+ தாரை. See பொற்றோரை. (சீவக. 2132, பி-ம்.) . |
| பொற்றாலம் | poṟṟālam n. <>id.+ தாலம். See பொற்படி. பொற்றாலத்தமரர் (சேதுபு. திருநாட்.14). |
| பொற்றாலி | poṟṟāli n. <>id.+ தாலி. Marriage badge of gold; மாங்கலியம். |
| பொற்றாவல்லி | poṟṟāvalli n. cf. பொன்றாவல்லி. Gulancha. See சீந்தில். (சங். அக.) |
| பொற்றி | poṟṟi n. A species of the plant ruellia. See எருமைப்பாற்சொற்றி. (மூ. அ.) |
| பொற்றேகராசன் | poṟṟēla-rācaṉ n. <>பொன்+தேகம்+. See பொற்றலைக்கையாந்தகரை. (தைலவ. தைல.) . |
| பொற்றேரை | poṟṟērai n. See பொற்றேரை. (சீவக. 2132, பி-ம்.) . |
| பொற்றை | poṟṟai n. cf. பொறை. 1. Hillock, mound; சிறுமலை. (பிங்.) பொற்றைமால் வரைகளோ வென் புயநெடும் பொருப்புமம்மா (கம்பரா. இலங்கைகான். 22). 2. Rock; 3. Mountain; 4. Bush, low jungle; 5. Forest; 6. Burnt jungle; |
| பொற்றொட்டி | poṟṟoṭṭi n. <>பொன்+தொட்டி. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (W.) |
| பொற்றொடி | poṟṟoṭi n. <>id.+தொடி. 1. Golden bracelet; பொன்னாலாகிய தோள்வளை. பொற்றொடித்தோட் பையரவல்குன் மடந்தை நல்ல¦ர் (திருவாச. 9, 12). 2. Woman, as wearing golden bracelets; |
| பொற்றோரை | poṟṟōrai n. <>id.+ தோரை. Thread-like waist ornament, made of gold; இடையில் அணியும் பொன்வடம். அல்குற் பொற்றோரை மின்ன (சீவக.2132). |
| பொறாமை | poṟāmai n. <>பொறு-+ஆ neg. [M. porāyma.] 1. Envy, grudge, jealousy; பிறர் ஆக்கஞ் சகியாமை. இப் பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின் (குறள், 17-ம் அதி. முன்னுரை). 2. Impatience; |
| பொறி 1 - தல் | poṟi- 4 v. intr. 1. To snap, spring, as a trap, gunlock, etc. பறிதல். (J.) 2. To throw out sparks; 3. To slip, slide, as the loot; 4. To be sloping or aslant; 5. To be ready to fall on one, as an accusation; 6. To fail; |
| பொறி 2 - த்தல் | poṟi- 11 v. tr. 1. To impress, stamp, inscribe; இலாஞ்சனையிடுதல். கெண்டையொடு பொறித்த குடுமியவாக (புறநா. 58.) 2. To write, delineate; 3. To sketch, paint; 4. To bespatter; 5. To frustrate; 1. See பொறி1-, 1. (J.) 2. See பொறி1-,2. நெருப்பிடையிடை பொறித்தெழ (கம்பரா. வருண. 32). 3. To be impressed or imprinted; |
| பொறி 3 | poṟi n. <>பொறி2-. 1. Stripe, as of a tiger; வரி. பொறி யுழுவை (கலித். 46). 2. Line on the palm; 3. Spot, as on an elephant's forehead; dot, point, speck; 4. Mark, impression; 5. Sign, token; 6. Letter, character, writing; 7. Seal, signet; 8. Insignia, badge; 9. Auspicious mark on one's body; 10. Bee, beetle; 11. Peacock's tail, as spotted; 12. Beauty-spot on the body of a person; 13. Form, image; 14. Fate, destiny; 15. Temple of the head; 16. Joint; jointure; 17. Organs of sense, of which there are five, viz., mey, vāy, mūkku, cevi; 18. Male organ; 19. Mind; 20. Knowledge, wisdom; 21. Spark, scintillation; 22. Brightness; 23. Machine, mechanism, trap; 24. Figure or engine on walls, as part of a fortification; 25. Dhoney; 26. Stratagem, device; 27. Diadem; 28. Lakṣmi; 29. Riches, wealth; 30. Splendour; 31. Good karma; 32. Roundness, rotundity; |
