Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொற்சூட்டு | poṟ-cūṭṭu n. <>id.+. A golden plate worn on the forehead; நெற்றிப்பட்டம். செம்பொற் சூட்டொடுகண்ணி ... அருளி (சீவக. 2569). |
| பொற்ப | poṟpa <>பொற்பு. adv. 1. Beautifully, elegantly; பொலிவுபெற. திருமணி ... சென்னிப் பொற்ப (திருமுரு. 85).-Part 2. A term of comparison; |
| பொற்படி | poṟ-paṭi n. <>பொன்+. Svarga, as the golden world; பொன்னுலகம். நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் (சிலப். 30, 136). |
| பொற்படை | poṟ-paṭai n. <>id.+. Golden trappings, as of a horse or elephant; குதிரை யானை முதலியவற்றின் மேல¦டு. வேழமிரு நூறும் ... புனைசெம் பொற்படையே யணிந்து (சீவக. 2174). |
| பொற்பண்டாரம் | poṟ-paṇṭāram n. <>id.+. Treasury of jewels and gold; பொன்னும் பொற்கலங்களும் வைக்கும் பொக்கிஷம். (பிங்.) |
| பொற்பணிதி | poṟ-paṇiti n. <>id.+. Jewel of gold; பொன்னணி. (W.) |
| பொற்பாதம் | poṟ-pātam n. <>id.+. Gold-like foot of a great person, a term used in reverence; திருவடி. தரணி நிவந்தளிப்ப நீட்டிய பொற்பாதம் (திவ். இயற். 2, 78). |
| பொற்பாவை | poṟ-pāvai n. <>id.+. 1. Golden puppet; பொன்னாலான பிரதிமை. 2. Beautiful woman; |
| பொற்பாளம் | poṟ-pāḷam n. <>id.+. Bar of gold, bullion; பெரிய பொற்கட்டி. (W.) |
| பொற்பி - த்தல் | poṟpi- 11 v. tr. <>பொற்பு. To beautify, adorn; அலங்கரித்தல். சுருளோதி ... சிகழிகையாகப் பொற்பித்தார். (பிரமோத்.9, 19) |
| பொற்பிதிர் | poṟ-pitir n. <> பொன்+. Beautyspots on a woman's person; பசலை. பொற்பிதிரணிந்து வீங்கும் புணர்முலை (கூர்மபு. அநுக். 6). |
| பொற்பிரகாசம் | poṟ-pirakācam n. <>id.+. See பொன்மயம். (யாழ். அக.) . |
| பொற்பு | poṟpu n. <>id. 1. Beauty, gracefulness, elegance. அழகு. (பிங்.); பொற்புடையரக்கி (கம்பரா. சூர்ப்ப. 68) 2. Decoration, embellishment; 3. Magnificence, excellence; 4. Abundance, plenty; 5. Nature, quality; |
| பொற்புவி | poṟ-puvi n. <>id.+. See பொற்படி. சரபங்க னினிதேறப் பொற்புவி கொடுத் புகழ் போற்றிடுதும் (சேதுபு. இராமனருச்.63). . |
| பொற்புறுத்து - தல் | poṟpuṟuttu- v. tr. <>பொற்பு+உறுத்து-. To adorn; அலங்கரித்தல். (பிங்.) |
| பொற்பூ | poṟ-pū n. <>பொன்+. 1. Golden flower. See சுவர்ணபூஷ்பம்1,2. 2. Ornamental lotus flower, made of gold and presented to a bard by a king; |
| பொற்பூச்சு | poṟ-pūccu n. <>id.+. 1. Gilding; பொன்முலாம் பூசுகை. (W.) 2. Gold foil; |
| பொற்பூணூல் | poṟ-pūṇūl n. <>id.+. Sacred thread of gold, used as an ornament; பொன்னாலான உபவீதம். Loc. |
| பொற்பொது | poṟ-potu n. <>id.+. See பொற்சபை. பொருவிடைப் பாகர் மன்னும் பொற்பொதுவதனுட் புக்கார் (பெரியபு.இயற்பகை. 34). . |
| பொற்ற | poṟṟa, adj. <>id. 1. Golden; பொன்னாலாகிய. பொற்ற மாளிகை (விநாயகபு. 75, 126). 2. Good, excellent, fine; |
| பொற்றகடு | poṟṟakaṭu n. <>id.+ தகடு. 1. See பொற்சின்னம். பொற்றகடு தம்வாயுளிட்டு (சீவக. 778, உரை). . 2. Gold foil; |
| பொற்றட்டான் | poṟṟaṭṭāṉ n. <>id.+ தட்டான். Goldsmith; பொன்செய்கொல்லன். (W.) |
| பொற்றலை | poṟṟalai n. <>id.+ தலை. See பொற்றலைக்கையாந்தகரை. (பதார்த்த.) . |
| பொற்றலைக்கரிப்பான் | poṟṟalai-k-karippāṉ n. <>பொற்றலை+. See பொற்றலைக்கையாந்தகரை. (சங். அக.) . |
| பொற்றலைக்கையாந்தகரை | poṟṟalai-k-kaiyāntakarai n. <>id.+. Ceylon verbesina, m.cl., Wedelia calendulacea; மருந்துப்பூடுவகை. (பதார்த்த.361.) |
| பொற்றாது | poṟṟātu n. <>பொன்+தாது. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.) . |
| பொற்றாப்பு | poṟṟāppu n. <>id.+ Prob. தாம்பு. A festival in the šiva shrine at Mylapore; மயிலாப்பூர்த் திருவிழாக்களுள் ஒன்று. கபால¦ச்சர மமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ (தேவா. 1119, 8). |
