Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொறைநிலை | poṟai-nilai n.<> பொறை+. (Yoga.) Concentrated attention ; See தாரணை, 4. (சிலப். 14, 11, உரை.) . |
| பொறைமை | poṟaimai n.<> id.+. See பொறை, 6. நின்னெஞ்சங் கொண்ட பொறைமை காணிய (பெருங். உஞ்சைக். 36, 84) . . |
| பொறையன் | poṟaiyaṉ n. <> id. 1. Sustainer, bearer; சுமப்பவன். புன்னிலைப் பவத்துக்கெல்லாந் தானொரு பொறையனகி (உபதேசகா. சிவபுண்.344). 2. Cēra king, as lord of the mountainous region in the Tamil country; 3. Dharmaputra, the eldest of the pāṇdavas, as embodiment of patience; |
| பொறையாட்டி | poṟai-y-āṭṭi n. <> id.+. 1. Patient woman; பொறுமையுள்ளவள். சுருங்கும் மருங்குற் பெரும்பொறை யாட்டியை (திருக்கோ. 353). 2. Priestess who offers pali; |
| பொறையாளன் | poṟai-y-āḷaṉ n. <> id.+. See பொறையன், 3. (பிங்) . . |
| பொறையாற்று - தல் | poṟai-y-āṟṟu- v. tr. <> id.+. To bear with patience ; பொறுத்தல். (கம்பரா. உருக். 11.) |
| பொறையிலான் | poṟai-y-ilāṉ n. <> id.+. 1. Impatient person; பொறுமையில்லாதவன். 2. Savage; forester, hunter; |
| பொறையுயிர் - த்தல் | poṟai-y-uyir- v. tr. <> id.+. 1. To disburden and rest; இளைப்பாறும்படி சுமை யிறக்குதல். துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுதி (பொருந. 239). 2. To be delivered of a child; |
| பொன் | poṉ n. [T. poṉṉu K. M. poṉ]. 1. Gold, of which there are four kinds, viz., cātarūpam, kiḷicciṟai, āṭakam, cāmpūṉatam; சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூனதம் என நான்கு வகைப்பட்ட தங்கம். பொன்னுந் துகிரு முத்தும் (புறநா. 218). 2. Metal; 3. Iron; 4. Wealth; 5. Ornament; 6. Marriage badge; 7. A gold coin = 10 paṇam = Rs. 1 1/4; 8. See பொன்மலை, 1. ஆணிப்பொன்வில்லி (குமர. பிர. மீனாட். பிள். 63). 9. Grandeur, magnificence; 10. Sallowness of complexion from love sickness; 11. Lustre, splendour, brilliance; 12. Beauty, elegance, comeliness; 13. Preciousness, excellence; rarity; 14. Lakṣmī, the Goddess of Fortune; 15. Jupiter; 16. Sun; 17. Pudendem muliebre; |
| பொன்கோலம் | poṉ-kōlam n. [M. ponkōlam]. Child's amulet tree. See புத்திரசீவி . (L.) . |
| பொன்செய் - தல் | poṉ-cey- v. intr. <> பொன்+. To do a good deed; நற்காரியம் புரிதல். கேட்டீமின் பொன்செய்தேன் (கலித்.143) . |
| பொன்செய்கொல்லன் | poṉ-cey-kollaṉ n. <> id.+ செய்-+. Goldsmith; தட்டான். பொன் செய் கொல்லனி னினிய தெளிர்ப்ப (நற். 394). |
| பொன்செய்புலவன் | poṉ-cey-pulavaṉ n. <> id+. (சிலப். 5 31 அரும்.) 1. See பொன்செய்சொல்லன். . 2. Gatherer of gold, as from mines; |
| பொன்ஞெகிழி | poṉ-ekiḻi n. <> id.+. Gold anklet with beads inside for tinkling; அரிபெய் சிலம்பு. (திவா) . |
| பொன்படு - தல் | poṉ-paṭu- v. intr. <> id.+. To appear bright; தோற்றப்பொலிவுறுதல். தொய்யிலெழுதியிருத்த பெரும்பொன் படுகம் (கலித். 64) . |
| பொன்பத்தன் | poṉ-pattaṉ n. <> id.+. See பொன்செய்கொல்லன். Colloq. . |
| பொன்பாதிரி | poṉ-pātiri n. <> id.+. Fragrant trumpet-flower, l. tr., Sterospermum chelonoides; மரவகை. (L.) |
| பொன்பாவை | poṉ-pāvai n. <> id.+. See பொன், 14. பொன்பாவை. கேள்வர் (திவ். இயற். 4, 59). . |
| பொன்புனை - தல் | poṉ-puṉai- v. tr. <> id.+. To marry, as tying the tāli ; திருமங்கலியம் பூட்டி மணத்தல். நுங்கெண்முன்னர் நீ பொன்புனைந்ததுவே (தஞ்சைவா. 359). |
