Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொன்வாணிகர் | poṉ-vāṇikar n. <> id.+. Dealers in gold; தங்கவியாபாரிகள். பொற்பேதத்தைப் பகுத்தறியும் பொன்வாணிகர் (சிலப். 14, 204, உரை). |
| பொன்வாய்ப்புள் | poṉ-vāy-p-puḷ n. <> id.+ வாய்+. King-fisher; சிச்சிலிக்குருவி. (பிங்.) |
| பொன்வானம் | poṉ-vāṉam n. Prob. id. Hill of brass; பித்தளை மலை. (யாழ். அக.) |
| பொன்வித்து | poṉ-vittu n. <> id.+. Sand containing lead; நாகமணல். (சங். அக.) |
| பொன்வில்லி | poṉ-villi n. <> id.+. šiva, as having mēru as bow; [மேருவை வில்லாக உடையவன்] சிவபிரான். ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்கவல்லி (குமர. பிர. மீனாட். பிள்.63). |
| பொன்விலை | poṉ-vilai n. <> id.+. Very high price, as of gold; ஏற்றமான விலை. (W.) |
| பொன்விலைப்பாவையர் | poṉ-vikai-p-pā-vaiyar n. <> id.+ விலை+. See பொன்விலைமகளிர். பொன்விலைப் பாவையர் மனமும் போன்றதே (கம்பரா. தாடகை. 15). . |
| பொன்விலைமகளிர் | poṉ-vilai-makaḷir n. <> id.+ id.+. Prostitutes; வேசையர். (W.) |
| பொன்விழா | poṉ-vilā n. <> id.+. Golden jubilee; ஜம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டம். Mod. |
| பொன்விளைவிடம் | poṉ-viḷaiviṭam n. <> id.+. Gold mine; பொன் உண்டாகு மிடம். (W.) |
| பொன்வினைசெய்வோர் | poṉ-viṉai-cey-vōr n. <> id.+ விளை+. See பொன்வினைமாக்கள். (பிங்.) . |
| பொன்வினைமாக்கள் | poṉ-viṉai-mākkaḷ n. <> id.+ id. Goldsmiths; தட்டார். (சூடா). |
| பொன்வெட்டு | poṉ-veṭṭu n. <> id.+. See பொன்வெட்டுவாய். Loc. . |
| பொன்வெட்டுவாய் | poṉ-veṭṭu-vāy n. <> id.+ வெட்டு-+. Exactness, as in correctness of speech etc., as cut-gold; பேச்சு முதலியவற்றில் நேர்மை. Loc. |
| பொன்றக்கெடு - தல் | poṉṟa-k-keṭu- v. intr. <> பொன்று-+. To be absolutely ruined; முற்றவும் அழிதல். பொன்றக்கெடாப் பொருள். (மணி. 30, 223) . |
| பொன்றாவல்லி | poṉṟā-valli n. Prob. id.+ ஆ neg.+. Gulaneha. See சீந்தில். (தைலவ. தைல.) . |
| பொன்று - தல் | poṉṟu- 5 v. intr. [K. pondu]. 1. To perish, to be ruined; அழிதல். புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில் (குறள், 233). 2. To die; 3. To fail; 4. To be reduced; to become wearied or dim, as the eyes by great exertion; |
| பொன்றொடு - தல் | poṉṟotu- v. tr. <> பொன் + தொடு-. To adjure, take oath, touching a piece of gold; பொன்னைத் தொட்டுச் சூளுறுதல். பொன்றொட்டேம் யாமுநும்மைப் போகொட்டோம் (சீவக. 2045). |
| பொன்னகர் | poṉṉakar n. <> id.+ நகர். 1. Amarāvati, as the golden city; அமராவதி. பொன்னகர் வறிதாப் போதுவர் (மணி. 1, 41). 2. šiva's Heaven; |
| பொன்னகர்க்கிறைவன் | poṉṉakar-kk-iṟaivaṉ n. <> பொன்னகர்+. Indra, as Lord of poṉṉakar; இந்திரன் (பிங்.) |
| பொன்னகர்ச்செல்வன் | poṉṉakar-c-celvaṉ n. <> id.+. See பொன்னகர்க்கிறைவன். (பிங்.) . |
| பொன்னகரம் | poṉṉakaram n. <> பொன் + நகரம். See பொன்னகர், 1. பொன்னகரம் புக்கு (திவ். இயற். பெரிய. ம. 20). . |
| பொன்னச்சேரான் | poṉṉaccērāṉ n. Glabrous marking-nut. See தேன்சேரான். (L.) . |
| பொன்னசலம் | poṉ-ṉ-acalam n. <> பொன்+. See பொன்மலை, 1, 2, 3. . |
| பொன்னஞ்சிலம்பு | poṉ-ṉ-a-cilampu n. <> id.+. See பொன்மலை, 1, 2, 3. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு கதிரோன் மறைதலும் (இறை. 18, பக்.142, மேற்கோள்). . |
| பொன்னடர் | poṉ-ṉ-aṭar n. <> id.+. Fine gold leaf; தகட்டுப்பொன். பசும் பென்னட ராறு கோடி (சீவக.1973). |
| பொன்னணி - தல் | poṉ-ṉ-aṇi- v. tr. <> id.+. See பொன்புனை-. கன்னியன்னா டன்னைப் பொன்னணிவான் (இறை. 23, பக்.164, மேற்கொள்) . . |
| பொன்னத்துப்பெட்டி | poṉṉattu-p-peṭṭi n. <> id.+. Basket in which the tāli and wedding saree are carried in a marriage; மணத்தில் தாலிகூறைகள் எடுத்துச்செல்லும் பெட்டி. (J.) |
| பொன்னப்பிரகம் | poṉ-ṉ-appirakam n. <> id.+. A kind of mica; அப்பிரகவகை. (சங். அக.) |
