Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொன்னாடை | poṉ-ṉ-āṭai n. <>id.+. Gold cloth; gold-bordered silk cloth. See பீதாம்பரம். பொன்னாடை புனைந்தானும் (கம்பராமாரிச. 4). |
| பொன்னாந்தகரை | poṉ-ṉ-ān-takarai n. <>id.+ See பொன்னாவிரை. (பைஷஜ.) . |
| பொன்னாந்தட்டான் | poṉ-ṉ-ān-taṭṭāṉ n. <>id.+. 1. Yellow-breasted thrush, Pitta bengulensis as gold-coloured நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகை குருவி. (பதார்த்த. 900.) 2. Dragon-fly ; |
| பொன்னாந்தலை | poṉ-ṉ-ān-talai n. <>id.+. Sea-bream, small sea-fish, whitish, Pagrus spinifer; வெண்ணிறமுள்ள கடல்மீன். |
| பொன்னாம்பழம் | poṉ-ṉ-ām-paḻam n. <>id.+. Soap-nut. See நெய்க்கொட்டான். (மலை.) . |
| பொன்னாம்பூ | poṉ-ṉ-ām-pū n. <>id.+. See பொன்னாவிரை. (மலை.) . |
| பொன்னாயகன் | poṉṉāyakan n. Prob. id.+. A kind of paddy; நெல்வகை கறுப்பன் சின்னட்டி பொன்னாயகன் (பாறளை. பள்ளு. 23). |
| பொன்னாவாரை | poṉ-ṉ-āvārai n. <>id.+. See பொன்னாவிரை. . |
| பொன்னாவிரை | poṉ-ṉ-āvirai n. <>id.+. 1. Fetid cassia, l.sh., Cassia sophera ; செடிவகை. (A.) 2. Negro coffee. See பேயாவிரை. (L.) 3. Siamese tree senna ; |
| பொன்னி | poṉṉi n. <>id. 1. The Kāvēri; காவிரி. (திவா.) பொன்னி வளம் பெருகும் (திவ். பெரியதி. 7, 8, 3). 2. Ancestor of the 8th generation; 3. See பொன்னாசி1. |
| பொன்னிக்குடமுடைதல் | poṉṉi-k-kuṭam-uṭaital n. <>பொன்னி+. See பொன்னாசியுடைகை. (M. L.) . |
| பொன்னிடம் | poṉ-ṉ-iṭam n. <>பொன்+. Fontanelle. See பிரமரந்திரம ¢ பொன்னிடந் தேறி (திருப்பு.586). |
| பொன்னித்துறைவன் | poṉṉi-t-tuṟaivan n. <>பொன்னி+. Chōla king, as lord of the Kaveri region; சோழன். பொன்னித் துறைவனை வாழ்த்தினவே (கலித். 581, புதுப்.). |
| பொன்னிநாடன் | poṉṉi-nāṭaṉ n. <>id. Chola king; சோழன். வண்டல்பாய் பொன்னிநாடானை (கலிங்.135). |
| பொன்னிநாடு | poṉṉi-nāṭu n. <>id.+. Chola country; சோழநாடு. தியாகமா விநோதன் தெய்வப் பொன்னிநாட்டு (கம்பரா. மருத்து. 58). |
| பொன்னிமிளை | poṉṉimiḷai n. <>பொன்+நிமிளை. Gold-coloured antimony; தாதுப்பொருள்வகை. |
| பொன்னியாயி | poṉṉi-y-āyi n. <>பொன்னி+. A village goddess; ஒரு கிராமதேவதை. (G. Tp. D. I, 89.) |
| பொன்னியுடைதல் | poṉṉi-y-uṭaital n. <> id.+. See பொன்னாசியுடைகை. Loc. . |
| பொன்னிரேக்கு | poṉ-ṉ-irēkku n. <> பொன்+. Gold-foil, gold-leaf; பொன்னிலைத்தகடு. Loc. |
| பொன்னிலக்கம் | poṉ-ṉ-ilakkam n. <> id.+. 1. Numeration table; எண்வாய்பாடு. 2. Table of gold weight; |
| பொன்னிலம் | poṉṉilam n. <> id.+நிலம். Svarga, as the golden land; தேவலோகம். பொன்னிலத் தெழுந்ததோர் . . . பூங்கொடி (சீவக. 1457). |
| பொன்னிலேபிறத்தல் | poṉṉil-ē-piṟattal n. <> id.+. Ceremony of passing through a golden cow. See இரணியகர்ப்பம். (சீவக. 911, விசேடக்குறிப்பு.) . |
| பொன்னிற்பொதி - தல் | poṉṉir-poti- v. tr. <> id.+. To take great care of; to treasure; பொன்போலப் பேணிக்கொள்ளுதல். பொன்னிற் பொதிந்தேன் (சிலப். 16, 13). |
| பொன்னிறமாட்சி | poṉṉira-māṭci n. <> id.+நிறம்+மாட்சி. See பொன்னிமிளை. (சங். அக.) . |
| பொன்னுக்குவீங்கி | poṉṉukku-vīṅki n. <> id.+. Mumps, parotitis, believed to be cured by wearing a gold ornament; கூகைக்கட்டு. |
| பொன்னுடம்பு | poṉ-ṉ-uṭampu n. <> id.+. 1. Body of a divine being, as golden; தேவசரீரம். தவத்துடம்பு நீங்கினார் . . . பொன்னுடம்படைந்த தொப்பவே (சீவக. 325). 2. Pudendum muliebre; |
| பொன்னுருக்கு - தல் | poṉ-ṉ-urukku- v. intr. <> id.+. To perform the ceremony of melting gold for the tāli at an auspicious time; சுபகாலத்தில் தாலிசெய்யப் பொன்னை உருக்கிவிடுதல். |
| பொன்னுருட்டு | poṉ-ṉ-uruṭṭu n. <> id.+. Plain gold ring, hoop of gold; உருட்டாயமைத்த பொன்மோதிரம். |
| பொன்னுரை | poṉ-ṉ-urai n. <> id.+ [ K. ponnore.] 1. Streak of gold on a touchstone. உரைக்கல்லில் உரைத்த பொன்னின் தேய்மானம். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145). 2. A kind of paddy; |
