Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொன்னுலகம் | poṉ-ṉ-ulakam n. <> id.+. 1. Svarga; தேவலோகம். பொன்னுலகத்துள்ள துப்புரவு (சீவக. 527). 2. (Jaina.) See பொன்னெயில்வட்டம். |
| பொன்னுலகாளி | poṉ-ṉ-ulakāḷi n. <> பொன்னுலகு+. Indra; இந்திரன். (பிங்.) |
| பொன்னுலகு | poṉ-ṉ-ulaku n. <> பொன்+. See பொன்னுலகம். பொன்னுலகாள (தேவா. 293, 16). |
| பொன்னுறுமாலை | poṉ-ṉ-uṟumālai n. <> id.+. A handkerchief interwoven with gold; பொற்சரிகை கலந்துநெய்த கைத்துண்டுவகை. (W.) |
| பொன்னூசல் | poṉ-ṉ-ūcal n. <> id.+. Golden swing; பொன்னாலாகிய ஊஞ்சல். பொன்னூசலாடாமோ (திருவாச. 16, 1). |
| பொன்னூமத்தை | poṉ-ṉ-ūmattai n. <> id.+. 1. Purple stramony s.tr., Datura fastuosa; செடிவகை. (பிங்.) 2. A species of Zanthium orientale; |
| பொன்னூல் | poṉṉūl n. <> id.+நூல். 1. Gold wire; பொற்கம்பி. (S. I. I. ii, 156, 42.) 2. Gold necklace of several strands; 3. Golden sacred thread; |
| பொன்னெயில் | poṉ-ṉ-eyil n. <> id.+. See பொன்னெயில்வட்டம். குபேரன் செய்த விருப்புறு பொன்னெயிற்குள் . . . ஆதிமூர்த்தி (சூடா. 4, 1). |
| பொன்னெயில்வட்டம் | poṉ-ṉ-eyil-vaṭ-ṭam n. <> பொன்னெயில்+. (Jaina.) Heavenly pavilion. See சமவசரணம். பொன்னெயில் வட்டத்திற் செலுத்தும் ஊழ்வினை (சீவக. 380, உரை). |
| பொன்னெயிற்கோன் | poṉ-ṉ-eyiṟ-kōṉ n. <> id.+. See பொன்னெயினாதன் (சூடா.) . |
| பொன்னெயினாதன் | poṉ-ṉ-eyiṉātaṉ n. <> id.+ நாதன். (Jaina.) Arhat, as Lord of the camavacaraṇam; அருகக்கடவுள். (திவா.) |
| பொன்னெழுத்து | poṉ-ṉ-eḻuttu n. perh. பொன்+. A kind of cloth; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) |
| பொன்னேர் | poṉ-ṉ-ēr n. <> id.+. 1. The plough used on an auspicious day for the first time in a season; பருவகாலத்தில் நல்ல நாளில் முதன்முறையாக உழுங் கலப்பை. பொன்னேர் பூட்டி நின்றோர் (சிலப். 10, 135, உரை). 2. See பொன்னேர்க்கட்டு. Loc. |
| பொன்னேர்க்கட்டு | poṉ-ṉ-ēr-k-kaṭṭu n. <> பொன்னேர்+. First ploughing of a season on an auspicious day with appropriate ceremonies; பருவ காலத்தில் நல்லநாளிற் செய்யும் முதலுழுவு. (W.) |
| பொன்னேர்ப்பூட்டு | poṉ-ṉ-ēr-p-pūṭṭu n. <> id.+. See பொன்னேர்க்கட்டு. (W.) . |
| பொன்னோர் | poṉṉōr n. <> பொன். Dēvas; தேவர்கள். (பெருங். இலாவாண. 7, 168, பாடபேதம்.) |
| பொன்னோலை | poṉ-ṉ-ōlai n. <> id.+. Gold ear-ring for a woman; மகளிர் காதணிவகை. பொன்னோலை வட்டம் பொழிந்து மின்னுகுப்ப (சீவக. 677). |
| பொனத்தி | poṉatti n. 1. A river-fish, bluish, attaining 6 ft. or more in length, Silundia gangetica; நீலநிற முள்ளதும் ஆறு அடி வளர்ச்சியுடையதுமான ஆற்றுமீன் வகை. 2. A river-fish with long maxillary barbels, bluish, Silundia Sykesii; |
| பொஸ்தகம் | postakam n. <> pustaka. Book. See புத்தகம். (W.) . |
| போ | pō. . The compound of ப் and ஓ. . |
| போ - தல் | pō- 4 & 5 v. intr. [ O. K. pōgu M. pō.] 1. To go, proceed; to go away, depart; செல்லுதல். மாமலர் கொய்ய . . . யானும் போவல் (மணி. 3, 83). 2. To reach a destination; 3. To belong; 4. To be born; 5. To lie, pass through, as a path; 6. To be proper, admissible, passable; 7. To become long; to be stretched out; 8. To become straight; 9. To extend, spread; 10. To be full; 11. To exceed transcend; 12. To shoot up; to be tall; 13. To become expert in; 14. To undergo, experience; to go through the process of; 15. To separate; 16. To cease; 17. To leave, abandon; 18. To go by, pass over; to lapse; 19. To vanish, disappear; 20. To be missing, to be lost; 21. To change, as from one state to another; 22. To be subtracted; 23. To be divided; 24. To perish, die; 25. To be conclusive; 26. To be hushed; 27. To cohabit; An aux. (a) expressing what is about to happen; (b) emphasising the meaning of the main verb; |
