Word |
English & Tamil Meaning |
|---|---|
| போக்கு 2 | pōkku n. <> போ-. Going, passing, departure; செல்லுகை. குறும்பி னூழையும் வாயிலும் போக்கறவளைஇ (பு. வெ, 1, 7, கொளு). |
| போக்குக்கழி - த்தல் | pōkku-k-kaḻi- v. intr. <> போக்கு2+. To dispel the effects of the evil eye. See திருஷ்டிகழி-. Madr. . |
| போக்குக்காட்டு - தல் | pōkku-k-kāṭṭu- v. intr. <> id.+. 1. To point out a way; வழி காட்டுதல். 2. To give excuse; 3. To give an outline or clue; to suggest; |
| போக்குச்சாக்கு | pōkku-c-cākku n. <> id.+. Excuse, pretence; சாக்கு. (W.) |
| போக்குச்சுற்றிப்போடு - தல் | pōkku-c-cuṟṟi-p-pōṭu- v. intr. <> id.+. See போக்குப்போடு-. (W.) . |
| போக்குச்சொல்(லு) - தல் | pōkku-c-col- v. intr. <> id.+. To make excuse; சாக்குக் காட்டுதல். |
| போக்குத்தெளிவு | pōkku-t-teḷivu n. <> id.+. Apparent abatement of disease just before death; மரணத்தறுவாயில் உண்டாகும் வியாதித் தெளிவு. Madr. |
| போக்குநீக்கு | pōkku-nīkku n. <> id.+. 1. Going and coming; போக்குவரத்து. 2. Thoroughfare; 3. Refuge; 4. Escape, opening; 5. Method, way; 6. Habit, practice, method; |
| போக்குப்போடு - தல் | pōkku-p-pōṭu- v. intr. <> id.+. To offer pali in an open or exposed place for dispelling demons or averting evil; பேய்நீங்க அல்லது திருஷ்டிகழிக்கப் பலியிடுதல். |
| போக்குவண்டி | pōkku-vaṇṭi n. <> போக்கு3+. Colloq. 1. Return bandy, cart returning empty after discharging its load and therefore available for a cheap fare; காலியாகத் திரும்பிச் செல்வதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி. 2. Carriage or cart going in the desired direction of its own accord and therefore available for a cheap fare; |
| போக்குவரத்து | pōkku-varattu n. <> id.+. 1. Going and returning; போதலும் வருதலும். புகுந்தே னென்கிற இது ஒரு போக்குவரத்து உண்டாயன்று (ஈடு, 6, 10, 10). 2. Familiar intercourse, frequent visiting; intercommunication; 3. Guests; 4. Income and expenditure; |
| போக்குவரத்துமணியம் | pōkku-varattu-maṇiyam n. <> போக்குவரத்து+. Clerk deputed to attend on guests; விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் காரியக்காரன். Loc. |
| போக்குவரவு | pōkku-varavu n. <>போக்கு+. 1. See போக்குவரத்து. . 2. Death and birth ; 3. Settlement, a revenue term; 4. Transfer of patta; |
| போக்குவாக்கு | Pōkkuvakku n. <>போக்கு2+. 1. Good personal appearance 1. பொலிந்த தோற்றம் 2. Good build of body, said of a person; |
| போக்குவிடு - தல் | pōkku-viṭu- v. <> id.+. intr. 1. To make a drain, an outlet; நீர் போகவிடுதல். 2. See போக்குவை-, 1. (W.) 3. To provide a way or means of outlet; To spend; |
| போக்குவீடு | pōkkuvītu n. <> போக்குவிடு-. 1. Sending away, causing to go; செல்லவிடுகை. 2. Outlet, as for one's feelings; giving vent; |
| போக்குவை - த்தல் | pōkku-vai- v. intr. <> போக்கு+. 1. To make underground cellar for hiding treasure; கீழ்ச்சுரங்கம் அமைத்தல். (W.) 2. To find out ways of expenditure; |
| போக்தவ்வியம் | pōktavviyam n. <> bhōk-tavya. That which is enjoyed; அனுபவிக்கப்படுவது. போக்தவ்வியங்களா யிருக்கிற சத்தாதிகளினாலும் (சி. சி. 4, 8, சிவாக்.). |
| போக்தா | pōktā n. <> bhōktā. nom. sing. of bhōktr. Enjoyer; புசிப்பவன். (சி. சி. 2, 2, சிவாக்.) |
| போக்யதை | pōkyatai n. <> bhōgya-tā. Enjoyableness; அனுபவித்தற்கினியதாந் தன்மை ஸௌகுமார்யத்தையும் போக்யதையையும் உடையவள் (ஈடு, 4, 5, 8). |
