Word |
English & Tamil Meaning |
|---|---|
| போக | pōka <> போ-. adv. 1. Besides, excepting; தவிர. போரிலிற்றவர்கள்போக மற்றவர் புறத்தி லோடியதும் (பிரபோத. 30, 59).---part. 2. An expletive of emphasis; |
| போகக்கலப்பை | pōka-k-kalappai n. <> போகம்+. Object of enjoyment; போகநுகர்ச்சிக்குரிய பல்வகைப் பண்டம். அரும்பெறன் மரபிற்போகக் கலப்பையும் பொறுத்தனர் மயக்கி (பெருங். உஞ்சைக். 38, 177). |
| போகக்கலவை | pōka-k-kalavai n. <> id.+ Perfumed paste; உயர்ந்த கலவைச் சாந்து. போகக்கலவை யாகத்தப்பி (பெருங். இலாவாண.18, 108). |
| போககாண்டம் | pōka-kāṇṭam n. <> bhōga+. (šaiva.) Categories which are pure as well as impure. See சுத்தாசுத்ததத்துவம். (சி. சி. 2, 70, மறைஞா.) . |
| போககாரகன் | pōka-kārakaṉ n. <> id.+. (Astrol.) The planet venus, as indicative of marital happiness, enjoyment of pleasures, etc.; ஜாதகனின் போகங்களைக் குறிக்கும் சுக்கிரன். |
| போககாரிகை | pōka-kārikai n. <> id.+. A treatise on šaiva Siddhānta philosophy; ஒரு சைவசித்தாந்த நூல். |
| போகசத்தி | pōka-catti n. <> id.+. The šakti of šiva in His Sadāšiva aspect; போகசிவனது சக்தி (சி. சி, 2, 75, மறைஞா.) |
| போகசயித்துருகாண்டம் | pōka-cayit-turu-kāṇṭam n. <> id.+ jayitr+. (šaiva.) See போக்கியகாண்டம் (சி. சி. 2, 70.) . |
| போகசிவன் | pōka-civaṉ n. <> id.+. (šaiva.) The Sadāšiva aspect of šiva; சதாசிவன் (சி. சி. 1, 64, சிவஞா.) |
| போகடி - த்தல் | pōkaṭi- v. tr. <> போ-+அடி-. See போக்கடி-. (W.) . |
| போகடி | pōkaṭi n. prob. போகடி-. Stray cattle; கொண்டிமாடு. (W.) |
| போகடிப்போக்கு | pōkaṭi-p-pōkku n. <> போகடி+. Accident, casualness, unexpectedness; தற்செயல். (J.) |
| போகடு - தல் | pōkaṭu- v. <> போகு-+ prob. விடு-. tr. 1. To set aside, cast away, throw; கழித்துவிடுதல். போகட்ட உடம்பையும் (சீவக. 951, உரை). 2. To let go; To leave, escape, disappear; |
| போகண்டன் | pōkaṇṭaṉ n. <> pōgaṇda. A male child between five and fifteen years; ஐந்து வயதுக்குமேல் பதினைந்து வயதுக்குட்பட்ட ஆண்மகவு. (யாழ். அக.) |
| போகணி | pōkaṇi n. [K. bōgaṇi.] See போகிணி. (சங். அக.) . |
| போகத்தானம் | pōka-t-tāṉam n. <> bhōga+. 1. Body; உடல். (சங். அக.) 2. The sheath of bliss. See ஆனந்தமயகோசம். (யாழ். அக.) 3. (Astrol.) The seventh house from the ascendant, as indicating marital happiness, etc.; |
| போகதத்துவம | pōka-tattuvam n. <> id.+. (šaiva.) The stage in which both knowledge and action are balanced. See சாதாக்கிய தத்துவம். (சி. போ. பா. பக்.140.) . |
| போகநஷ்டி | pōka-naṣṭi n. <> id.+. Remission on double-crop land when there is no water for a second crop; இருபோகநிலங்களுக்கு இரண்டாம்போகத்தில் நீரின்மைப்பற்றிச் செய்யும் வரிவஜா. Loc. |
| போகநாதர் | pōka-nātar n. A mystic, author of several works on medicine, one of patiṉeṇ-cittar, q.v.; மருந்துவநூல்கள் பலவற்றின் ஆசிரியரும் பதினெண்சித்தரி லொருவருமான முனிவர். |
| போகநீர் | pōka-nīr n. <> போகம்+. Seminal fluid, sperm; சுக்கிலம். போகநீர் பன்னீராற் போக்கியே (விறலிவிடு. 576). |
| போகப்போக | pōka-p-pōka adv. Redupl. of போ-. As time goes on; காலம் செல்லச்செல்ல. |
| போகபத்திரம் | pōka-pattiram n. <> bhōga+. Document granting the use of specific property; ஒரு பொருளை அனுபவிக்க எழுதிக்கொடுக்கும் பத்திரம் (சுக்கிரநீதி, 93.) |
| போகபதி | pōka-pati n. <> id.+ Lord; அதிபதி. (யாழ். அக.) |
| போகபந்தம் | pōka-pantram n. <> id.+. Worldly pleasures, as ensnaring the soul; ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் உலகவின்பம். (W.) |
| போகபுவனம் | pōka-puvaṉam n. <> id.+. Heavens and hells, as the regions where the fruits of one's actions in this world are experienced; வினைப்பயனை நுகருமிடமாகிய சுவர்க்க நரகங்கள். போகபுவன முண்டென (மணி. 27, 44). |
| போகபூமி | pōka-pūmi n. <> id.+. 1. Svarga, as a place of enjoyment; சுவர்க்கம். 2. Fruitful field; 3. Blissful regions where the fruits of good karma are enjoyed, six in number, viz., ātiyari-vacam, nallari-vacam, ēmata-vacam, ēma-vacam, tēva-kuruvam, uttara-kuruvam, dist. fr. karma-pūmi; 4. (šaiva.) Categories, 36 in number, as the regions for enjoyment of karma by souls; |
