Word |
English & Tamil Meaning |
|---|---|
| போத்துக்கால் | pōttu-k-kāl n. <>போத்து1+. Sugar-cane; காம்பு. (தொல். பொ. 579, உரை.) |
| போத்துராசா | pōttu-rācā n. <>id.+. Indolent person; சோம்பேறி. தடிப்போத்து ராசா. Colloq. |
| போத்துவெடி - த்தல் | pōttu-veṭi- v. intr. <>id.+. To sprout, as saplings; மரக்கிளை தோன்றுதல். (W.) |
| போத | pōta adv.<>போது1-. 1. Sufficiently; போதுமானபடி. போதக் கொடுத்தான். 2. Well, rightly; 3. Speedily; |
| போதக்கட்டை | pōta-k-kaṭṭai n. prob. போதி4+. See போதிகைக்கட்டை. (C. G.) . |
| போதகப்படை | pōtaka-p-paṭai n. <>போதகம்3+. Arrow that dispels the illusions caused by the enemy's arrows; பகைவனது அஸ்திரங்களாலுண்டாம் மாயைகளை விலக்கும் அஸ்திரவகை. போதகப் பெரும்படை செலுத்த (கந்தபு.சிங்கமு.108). |
| போதகம் 1 | pōtakam n. <>pōtaka. 1. Youthfulness, infancy, juvenility; இளமை. (பிங்.) 2. Elephant calf; 3. Elephant; 4. Young of animals; 5. See போத்து1, 4. (பிங்.) |
| போதகம் 2 | pōtakam n. <>pōtakī. Malabar nightshade. See பசளை, 3. (மலை.) . |
| போதகம் 3 | pōtakam n. <>bōdhaka. 1. Spiritual teaching, as by a guru to his disciple; உபதேசம். 2. Instruction; tutoring; |
| போதகம் 4 | pōtakam n. prob. mōdaka. A kind of sweetmeat; அப்பவருக்கம். (பிங்.) |
| போதகம் 5 | pōtakam n. Strychnine tree. See எட்டி. (மலை.) . |
| போதகன் | pōtakaṉ n. <>bōdhaka. 1. See போகாசிரியன். நியதிபுரிந் தருளுவான் போதகன் (சைவச. ஆசார. 30). 2. Pastor, ordained minister; 3. Spy; |
| போதகாசிரியன் | pōtakāciriyaṉ n. <>id.+ ācārya. 1. Teacher; கல்வி கற்றுக்கொடுப்போன். நூலுரை போதகாசிரியர் (இலக். கொத். பாயி.) 2. A religious preceptor, one who initiates into religious mysteries; |
| போதந்து | pōtantu part. <>போதா-. An expletive; ஒரு சொல் விழுக்காடு. அது விலக்குப் பட்டது: ஈண்டுப்போதந்து (தொல். சொல். 422, இளம்பூ.) |
| போதப்பிரகாரம் | pōta-p-pirakāram n. <>bōdha+. (Log.) Terms, in three divisions, viz., uttēcam, ilakkaṇam, parīkkai; உத்தேசம், இலக்கணம், பரீக்கை என்ற தருக்கவாதப் பிரிவு. (W.) |
| போதப்புறா | pōta-p-puṟā n. Imperial pigeon, Carpophaga aenea; புறாவகை. (M. M.) |
| போதம் 1 | pōtam n. <>bōdha. 1. Wisdom; ஞானம். (சூடா.) போத மொத்தனன் மாருதி (கம்பரா. முதற்போர். 222). 2. Knowledge, understanding, intelligence; |
| போதம் 2 | pōtam n. <>pōta. 1. Vessel, ship, boat; மரக்கலம் (திவா.) போதங்கொ ணெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா. பள்ளிபடை. 68). 2. The second nakṣatra; 3. See போதகம்1, 2. (அக. நி.) 4. House-site; |
| போதர | pōtara adv. <>போதா-. Abundantly, plentifully; அதிகமாக. போதரக் கனவிற்கண்டு (திவ். திருக்குறுந். 4). |
| போதரவு 1 | pōtaravu n. <>id. 1. Passing, going; போகை. புகுவ தாவதும் போதரவில்லதும் (திருவாச, 5, 36). 2. Sending, despatching; 3. Bringing; |
| போதரவு 2 | pōtaravu n. <>போது1-. (W.) 1. Respectfulness of language, affability, blandishment; நயச்சொல். போதரவான சொல். 2. Civility, urbanity; 3. Adulation, flattery; 4. Using anything with care; |
| போதலிப்பு | pōtalippu n. See போதரவு2. (J.) . |
| போதலிமை | pōtalimai n. See போதரவு2. (யாழ். அக.) . |
| போதவாகன் | pōta-vākaṉ n. <>pōta-vāha. Boatman; தோணியோட்டுபவன். (சங். அக.) |
| போதன் 1 | pōtaṉ n. <>bōdha. 1. One who has knowledge; அறிவாளி. 2. Wise man; |
| போதன் 2 | pōtaṉ n. <>போது3. 1. Brahmā; பிரமன். (பிங்.) பூவிருக்கை மேலுற்ற போதன் (கந்தபு. காமதக. 58). 2. Arhat; |
