Word |
English & Tamil Meaning |
|---|---|
| போதனம் | pōtaṉam n. <>bōdhana. (யாழ். அக.) 1. See போதனை. . 2. Waving incense; |
| போதனாசக்தி | pōtaṉā-cakti n. <>bōdhanāšakti. Ability to teach; கற்பிக்குந் திறமை. (W.) |
| போதனை | pōtaṉai n. <>bōdhanā. 1. Teaching, instruction, advice, inculcation; கற்பிக்கை. போதனை செய்ய வல்லார் (தாயு. கற்புறு. 3). 2. Knowledge, wisdom; 3. Instigation, counsel; tutoring, used ironically; |
| போதா 1 - தல் [போதருதல்] | pōtā- v. intr. <>போ-+. 1. To go, pass; செல்லுதல் புறங்கடைப் போதரவிட்ட நுமரும் (கலித். 56). 2. To return; 3. To come; 4. To be inferred; 1. To carry away; 2. To bring; 3. To welcome, receive with courtesy; |
| போதா 2 | pōtā n. Cyrus crane, Grus antigone; பெருநாரை. (சிலப். 10, 117, உரை.) |
| போதாக்காலம் | pōtā-k-kālam n. <>போது1- +ஆ neg.+. Time of misfortune, evil days; தீக்காலம். (W.) |
| போதாக்குறை | pōtā-k-kuṟai n. <>id.+ id.+. See போதாக்குறைச்சல். . |
| போதாக்குறைக்கு | pōtā-k-kuṟaikku adv. <>id.+ id.+. As though not sufficient; உள்ளவை போதாதென்று. போதாக்குறைக்குப் பிள்ளையும் பிறந்தது. |
| போதாக்குறைச்சல் | pōtā-k-kuṟaiccal n. <>id.+ id.+. Supplement; addition to make up any deficiency; அதிகப்படி. (W.) |
| போதாதகாலம் | pōtāta-kālam n. <>id.+ id.+. See போதாக்காலம். . |
| போதாதவேளை | pōtāta-vēḷai n. <>id.+ id.+ See போதாக்காலம் . |
| போதாந்தம் | pōtāntam n. <>bōdhānta. End or goal of knowledge; ஞானமுடிவு போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225). |
| போதாந்தன் | pōtāntam n. <>bōdhanta. God; கடவுள். (W.) |
| போதாமை | pōtāmai n. <>போது- + ஆ neg. 1. Insufficiency, incompetency, unfitness; குறைவு. 2. Estrangement between persons; |
| போதாயனர் | pōtāyaṉar n. <>Bōdhāyana. 1. A writer on Dharmasāstra and Kalpa; தருமநூலும் கற்பநூலு மியற்றிய ஒரு முனிவர். 2. Follower of the Kalpa or the manual of rites of Bōdhāyana; |
| போதாயனீயம் | pōtāyaṉīyam n. <>Bōdhāyanīya. A Kalpa or ceremonial guide containing short aphoristic rules for the performance of Vēdic sacrifices; வைதிகச் சடங்குகளைச் செய்யுமுறை கூறும் கற்பநூல்வகை. (தொல். பொ, 75, உரை.) |
| போதாலயம் | pōtālayam n. <>bōdhālaya. Temple of wisdom; ஞானத்துக்கிருப்பிடம். போதாலயத்துப்புலன் (திருமந்.1707). |
| போதி 1 - த்தல் | pōti- 11 v. tr. <>bōdha. 1. To teach, instruct, inculcate; கற்பித்தல். போதித்த நிலையையு மயக்குதே (தாயு. மௌன 3). 2. To instigate, give evil counsel; |
| போதி 2 | pōti n. <>bōdhi. 1. Widsom, knowledge; ஞானம். போதிச்செல்வம் பூண்டவர் (சீவக. 366). 2. Pipal, as the tree of wisdom; |
| போதி 3 | pōti n. prob. ஓதி3. Hill, mountain; மலை. (பிங்.) |
| போதி 4 | pōti n. See போதிகைக்கட்டை. இந்திரநீலத் கல்லுருத்தலைப் போதியது (திருவிளை. திருமண. 64). . |
| போதிக்கிறைவன் | pōtikkiṟaivaṉ n. <>போதி2+. Buddha. See போதிப்பகவன். (பிங்.) . |
| போதிகன் | pōtikaṉ n. <>bhautika. Soul; ஆன்மா. போதிகன் றன்னையும் (கந்தபு. மார்க்கண். 242). |
| போதிகை | pōtikai n. [T. bodhia K. bōdiga.] See போதிகைக்கட்டை. போதிகைத் தலத்து (கம்பரா. நகரப். 25). . |
| போதிகைக்கட்டை | pōtikai-k-kaṭṭai n. <>போதிகை+. 1. Capital of a pillar; cap of a wooden post; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை. 2. Stake; |
| போதிகைத்தூண் | pōtikai-t-tūṇ n. <>id.+. A short, stout pillar; குறுந்தூண். (யாழ். அக.) |
