Word |
English & Tamil Meaning |
|---|---|
| போற்றிசெய் - தல் | pōṟṟi-cey- v. tr. <>போற்றி+. To praise, worship, adore; துதித்தல் பரமனை...போற்றிசெய்வேனை (திருமந்.3) . |
| போற்றிசை - த்தல் | pōṟṟicai- v. tr. <> போற்று+. See போற்றிசெய்-. புறந்தருவார் போற்றிசைப்ப (பெரியபு. மானக்கஞ்சாற. 12). |
| போற்றிசொல் - லுதல் | pōṟṟi-col- v. tr. <>போற்றி+. See போற்றிசெய்-. (W.) . |
| போற்றிப்பஃறொடை | pōṟṟi-p-paḵṟoṭai n. <>id.+. A text-book of the šaiva šiddhānta philosophy by Umāpati-civācāriyar, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v.; மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றும் உமாபதிசிவாசாரியர் இயற்றியதுமான சைவசித்தாந்த நூல் . |
| போற்றிபண்ணு - தல் | pōṟṟi-paṇṇu- v. tr. <>id.+. See போற்றிசெய்-. (W.) . |
| போற்றிமை | pōṟṟimai n. <>id. Honour, reverence; வணக்கம். (W.) |
| போற்றியாதல் | pōṟṟi-y-ātal n. prob. id.+. Grasping or securing closely; இடுக்குகை. (நாமதீப.757). |
| போற்றீடு | pōṟṟīṭu n. <>போற்று-+இடு-. A system of watching; பாதுகாவல்வகை. போற்றீடு முதலிய பாதுகாவலும் (தொல்.பொ.171, உரை) |
| போற்று - தல் | pōṟṟu- 5 v. tr. 1. To praise, applaud; துதித்தல். (பிங்.) போற்று மடியா ருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60). 2. To worship; 3. To protect, cherish, keep with great care; 4. To nourish; 5. To guard against; 6. To adhere, hold fast to; 7. To entertain; to treat with regard; 8. To desire; 9. To consider; 10. To understand; to pay attention to; 11. To gather together; |
| போற்று | pōṟṟu n. <> போற்று-. 1. Protection; காப்பு. (சங். அக.) 2. Praise, invocation; |
| போற்றுநர் | pōṟṟunar n. <>போற்று-. 1. Relatives, kinsmen; சுற்றத்தார். போற்றா ருயிரினும் போற்றுந ருயிரினும் (பரிபா. 4, 52). 2. Those who understand; |
| போறை | pōṟai n. cf. புரை. T. borre K. por.] 1. Hole; hollow in a tree; பொந்து. Colloq. 2. Cavity in the side of a well; cavern; |
| போன் | pōṉ n. (T. K. bōnu.) 1. Trap; பொறி. (ஈடு, 2, 8, 4, ஜீ.) 2. Cave running into the side of a hill; 3. Sloping cavity between the bellows and the oven in a pōṉ-aṭuppu; |
| போனகக்காரி | pōṉaka-k-kāri n. <>போனகம்+. See போனகத்தி. . |
| போனகக்குருத்து | pōṉaka-k-kuruttu n. <>id.+. Young plantain leaf with pointed end, used for serving food; நுனியுள்ள வாழையிலை. (S. I. I. ii, 128.) |
| போனகச்சட்டி | pōṉaka-c-caṭṭi n. <>id.+. Vessel for serving food; அன்னம் பரிமாறுஞ் சட்டி. Loc. |
| போனகத்தி | pōṉakatti n. <>id. (T. bōnakatte K. bōnagatti.) 1. Female cook; சமைப்பவள். 2. Servant-maid; 3. Feeding nurse; |
| போனகப்பெட்டி | pōṉaka-p-peṭṭi n. <>id.+. Palm-leaf basket used for keeping food; உணவுப் பண்டங்களை வைக்கும் ஒலைக்கூடைவகை. (ஈடு, 6, 1, 2, அரும்.) |
| போனகம் | pōṉakam n. prob. bhōjana. (T. bōnamu K. bōna.) 1. Food; உணவு. நால்வகைப் போனக மேந்தி (மணி. 28, 242). 2. Boiled rice; 3. A kind of cake; 4. Eating; |
| போனகாலம் | pōṉa-kālam n. <>போ-+. The past; past tense; சென்றகாலம். போனகாலத்தை மீட்க வொண்ணாது (ஈடு, 2, 1, 10). |
| போனடுப்பு | pōṉ-aṭuppu n. <>போன்+. Portable oven, shaped like a bowl with a sloping cavity connecting the bellows and the fire-chamber. நீண்டகன்ற வாயும் சாய்ந்த துளையுமுடையதாய்த் தூக்கிச்செல்லக்கூடிய அடுப்புவகை. Loc. |
