Word |
English & Tamil Meaning |
|---|---|
| ம் | m. . The 10th consonant, being a labial nasal; நெடுங்கணக்கில் பத்தாவது மெய்யெழுத்தான மெல்லெழுத்து. |
| ம 1 | ma. . The compound of ம் and அ. . |
| ம 2 | ma n. (Mus.) The symbol of the fourth note of the gamut, madhyama; மத்திமமெனப்படும் இசையினெழுத்து. (சிலப். 3, 67, அரும்.) |
| ம 3 | ma n. <>ma. 1. Moon; சந்திரன். (இலக்.அக.) 2. šiva; 3. Yama; 4. Time; 5. Brahmā; 6. Viṣṇu; 7. Poison; |
| மஃகான் | maḵkāṉ n. The letter m; மகரவொற்று. (தொல். எழுத். 28.) |
| மக்கட்கதி | makkaṭ-kati n. <>மக்கள்+. Birth as a human being, one of nāṟ-kati, q.v.; நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு. (சீவக. 2790, தலைப்பு.) |
| மக்கட்கதியெழுத்து | makkaṭ-kati-y-eḻuttu n. <>மக்கட்கதி+. (Pros.) The four long vowels, ā, ī, ū, ē and the consonants ṅ, , ṇ, n, m; ஆ, ஈ, ஊ, ஏ என்ற நான்கு நெடிலும் ங, ஞ, ண ந, ம, என்ற ஜந்து மெய்யெழுத்துக்களும் (பன்னிருபா. 24.) |
| மக்கட்சேவகம் | makkaṭ-cēvakam n. <>மக்கள்+. Personal service; ஊழியம். மக்கட் சேவகப் பேற்றுக்குப் பரப்பு ஒருமாவுக்குக் குறுணியாக (S. I. I. vi, 33). |
| மக்கட்சேவகன் | makkaṭ-cēvakaṉ n. <>id.+. One who does personal service; ஊழியன். தண்டுகிற நெல்லு மக்கட் சேவகர்க்கொண்டு. (S. I. I. vi, 33). |
| மக்கட்டம்பிடி - த்தல் | makkaṭṭam-piṭi- v. intr. perh. மர்க்கடம்+. To be landed in difficulties; இழுபறிப்படுதல். (யாழ். அக.) |
| மக்கட்டாயம் | makkaṭṭāyam n. <>மக்கள்+தாயம். System of inheritance in which the property descends to the sons, succession in the line of sons, dist. fr. marumakkaṭṭāyam; மகன்முறையாய் வரும் தாய வுரிமை. |
| மக்கட்டு 1 | makkaṭṭu n. prob. மணிக்கட்டு. Writst; மணிக்கட்டு. (தக்கயாகப், 99, உரை.) |
| மக்கட்டு 2 | makkaṭṭu n. prob. மல்+கட்டு. Waistband; அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு. புத்தப்புது மக்கட்டலை மக்கட்டினரே (தக்கயாகப். 99). |
| மக்கட்டொகுதி | makkaṭṭokuti n. <>மக்கள்+. See மக்கட்பரப்பு. Mod. . |
| மக்கட்பரப்பு | makkaṭ-parappu n. <>id.+. 1. Humanity; human beings; மன்பதை. (திவா.) 2. Inhabitants of a state; the public; the commonwealth; |
| மக்கட்பருவம் | makkaṭ-paruvam n. <>id.+. Stages of human life, of which there are six, viz, vaṟcam, pāliyam, yauvaṉan, kaumdram, viruttam, vārttavvyan. மானுடப்பிறவிக்குரிய வம்சம், பாலியம், யௌவனம். கௌமாரம், விருத்தம், வார்த்தவ்வியம் என்னும் அறுவகைப் பருவங்கள். (W.) |
| மக்கட்பாடு | makkaṭ-pāṭu n. <>id.+. Human effort; மக்களுடைய முயற்சி, மக்கட்பாட்டினானும். வலியானும் . . . பெறலாவதன்று (இறை. 1, 10). |
| மக்கட்பேறு | makkaṭ-pēṟu n. <>id.+. Obtaining children; புத்திரரைப் பெறுகை. அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற (குறள், 61). |
| மக்கடபுத்தி | makkaṭa-putti n. <>markaṭa+. Mischievous tendency; குறும்புத்தனம். (W.) |
| மக்கடம் | makkaṭam n. <>markaṭa. See மர்க்கடம். (W.) . |
| மக்கடா | makkaṭā n. prob. மக்கு+கடா. Dullard, stupid fool; புத்தியீனன். (W.) |
| மக்கடி - த்தல் | makkaṭi- 11 v. tr. <>id.+அடி-. To deform, disfigure; உருவழித்தல். (W.) |
| மக்கண்முரி | makkaṇ-muri n. <>மக்கள்+. Dwarf; chit, slip of a person, used in contempt; வடிவிற்சிறியவ-ன்-ள். (கலித். 94.) |
| மக்கம் 1 | makkam n. cf. arka. Madar. See எருக்கு. (மலை.) |
| மக்கம் 2 | makkam n. (T. maggamu K. magga.) Loom; நெய்வோர் தறி. (W.) |
| மக்கம் 3 | makkam n. <>Arab. Makkāh. Mecca, one of the two chief cities of Arabia, celebrated as the birth-place of Muhammad; அரேபியாவிலுள்ளதும் முகம்மது பிறந்ததால் பேர்பெற்றதுமான இடம். வேரியம் பணைசூழ் மக்க மிக்கொக்கு (திருவிளை. நரிபரி. 105). |
| மக்கமல்லார் - தல் | makkamallār- v. intr. Redupl. of மல்லார்-. To lie on the back; மல்லாந்துகிடத்தல். (W.) |
