Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகக்கமா | makakkamā n. <>Arab. mahakkamah. Court, tribunal; நியாயசபை. (W.) |
| மகக்குழை | maka-k-kuḻai n. prob. மா+. Mango leaf; மாவிலை. (தைலவ. தைல. அனுபந்த. 61.) |
| மகங்காரம் | makaṅkāram n. prob. ahamkāra. Egotism. See அகங்காரம். (யாழ். அக.) |
| மகச்சனி | maka-c-caṉi n. <>மகம்2+. See மகத்திற்சனி. . |
| மகச்சோறு | maka-c-cōṟu n. <>மக1+. Food for infants, one of muppattiraṇṭaṟam q.v.; முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகட்குச் சோறளிக்கும் அறம். (திவா.) |
| மகசர் | makacar n. <>Arab. mahazar. Petition, written representation, memorial; பலர் கையெழுத்திட்ட பொதுவிண்ணப்பம். (C. G.) |
| மகசர்நாமா | makacar-nāmā n. <>U. mahazar-nāma. See மகசர். . |
| மகசிரம் | makaciram n. <>mrga-širas. The 5th nakṣatra; மிருகசீருடநாள். மற்றை நான்கு மகசிரமாகும் (பன்னிருபா. 92). |
| மகசூல் | makacūl n. <>Arab. mahsūl. Produce or out-turn, as of a field; விவசாயவிளைவு. |
| மகசூல்தார் | makacūl-tār n. <>id.+. Watch man for the crops to whom iṉām was formerly allowed; பயிர்க்காவல் செய்வோன். (R. T.) |
| மகட்கருமம் | makaṭ-karumam n. <>மகள்+. Taking a girl in marriage, as a duty; பெண்ணை மணந்துகொள்கை. நின்மகற் கொரு மகட்கரும முன்னி (சூளா. தூது. 15). |
| மகட்கொடை | makaṭ-koṭai n. <>id.+. Gift of a daughter in marriage; தன்மகளை விவாகஞ்செய்து கொடுக்கை. நன்மகற் கல்லது மகட்கொடை நேரார் (பெருங். உஞ்சைக். 36, 93). |
| மகட்கோடல் | makaṭ-kōṭal n. <>id.+. Marriage, as the acceptance of a girl; பெண்ணை மணம்புரிகை. (இலக். வி. 485, உரை.) |
| மகட்பாற்காஞ்சி | makaṭ-pāṟ-kāci n. <>id.+. (Puṟap.) Theme describing the refusal of a person belonging to an ancient clan to give his daughter in marriage to a king who asks for her hand; முதுகுடித்தலைவனிடம் நின் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 79, உரை.) |
| மகட்பேசு - தல் | makaṭ-pēcu- v. tr. <>id.+. To settle as a bride; விவாகத்துக்குப் பெண் நிச்சயித்தல். வந்திருந்தென்னை மகட்பேசி (திவ். நாய்ச். 6, 3). |
| மகடி 1 | makaṭi n. See மகிடி. (W.) . |
| மகடி 2 | makaṭi n. <>Mhr. mahadi. Terraced house; storied building; மேற்கட்டுள்ள வீடு. (C. G.) |
| மகடு 1 | makaṭu n. See மகடுஉ. (அரு. நி.) . |
| மகடு 2 | makaṭu n. See மகிடி. 1. (அரு. நி.) . |
| மகடூஉ | makaṭūu n. <>மகள். 1. Female, woman; பெண். மகடூஉ வறிசொல் (தொல். சொல். 2). 2. Wife; |
| மகடூஉக்குணம் | makaṭūu-k-kuṇam n. <>மகடூஉ+. Feminine qualities, numbering four, viz., nāṇam, maṭam, accam, payirppu; பெண்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம் (இறை, 2, உரை, பக். 29) |
| மகடூஉமுன்னிலை | makaṭūu-muṉṉīlai n. <>id.+. Vocative, addressing a woman; பெண்ணை முன்னிலைப்படுத்திக் கூறுகை. (காரிகை. பாயி, 1, உரை.) |
| மகண்மறுத்தல் | makaṇ-maṟuttal n. <>மகள்+. See மகண்மறுத்துமொழிதல். (புறநா. 109, துறைக்குறிப்பு.) . |
| மகண்மறுத்துமொழிதல் | makan-maṟuttu-moḻital n. <>id.+. (Puṟap.) Theme describing the refusal of a chieftain to give his daughter in marriage to a hostile warrior when demanded; பகை வீரன் தம்மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 5, 9) |
| மகண்மா | makaṇ-mā n. <>id.+. 1. A fabulous animal having the form of a woman; பெண்வடிவங்கொண்ட ஒரு மிருகம். மைந்தரைப் பார்ப்பன மாமகண்மாக் குழாம் (சீவக. 1902). 2. Hermaphrodite; |
| மகண்மை 1 | makaṇmai n. <>id. 1. Womanhood; பெண்டன்மை. 2. Daughterhood; |
| மகண்மை 2 | makaṇmai n. perh. mahimā. See மகமை. அந்தராய மகண்மை கொளாதே மாகவும் (S. I. I. iii, 175, 28). . |
| மகத் | makat n. <>mahat. 1. See மகத்து1. (சங். அக.) . 2. Chidambaram, a shrine; 3. See மகத்தத்துவம். |
