Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகத்தத்துவம் | makat-tattuvam n. <>id.+. (Sāṅkhya.) Intellect, intellectual principle, as the great source of Ahamkāra; புத்திதத்துவம். (மணி. 27, 107, அடிக்குறிப்பு.) |
| மகத்திற்சனி | makattiṟ-caṇi n. <>மகம்2+. Saturn in the 10th nakṣatra indicating serious calamities; மகநட்சத்திரத்திற்புகுந்து மிக்க துன்பத்தைத் தருவதாகக் கருதப்படும் சனி. மகத்திற் சனியென்ன விளைக்குவம் (பாரத. பதினோராம். 40). |
| மகத்தீர்த்தம் | maka-t-tīrttam n. <>id.+. Bath on the full moon day in Māci; மாசிமாதப் பௌர்ணமியன்று நீராடுகை. (W.) |
| மகத்து | makattu n. <>mahat. 1. That which is great, large or huge; பெரியது. மகத்தாகி நின்றனை நீ (தாயு. பராபர. 226). 2. Greatness, intensity; 3. That which is magnificent, exalted, majestic; 4. Great person, in a religious or moral sense; saint; 5. Country; 6. An Upaniṣad, one of 108; |
| மகத்துவம் | makattuvam n. <>mahat-tva. Greatness, magnificence, majesty, excellence; பெருமை. மகத்துவமாப் பிரமாண்டமாகச் செய்யும் (தாயு. தந்தை தாய். 6). |
| மகத்துறை | maka-t-tuṟai n. <>மகம்1+. Place where sacrifice is performed; யாகஞ்செய்யுமிடம். மகத்துறை மைந்தனாய் (கம்பரா. மிதிலை. 129). |
| மகத்தூண் | maka-t-tūṇ n. <>id.+. Sacrificial post; யாகபசுவைக் கட்டிய தூண். (நாமதீப. 448.) |
| மகதத்துவம் | maka-tattuvam n. See மகத்தத்துவம். (W.) . |
| மகதந்திரம் | maka-tantiram n. prob. mahat+tantra. A treatise on architecture; ஒரு சிற்பநூல். (இருசமய. சிற்பசாத். 3.) |
| மகதம் | makatam n. <>magadha. 1. Country of South Bihar with Rājagrha as its capital, one of 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் இராசகிருகத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு தேசம். மகத வினைஞரும் (மணி. 19, 107). 2. Country about Tiru-k-kōvalūr in South Arcot; 3. The language of Magadha, one of patiṉeṇmoḻi, q.v.; |
| மகதவன் | makatavaṉ n. <>மகதம். Person belonging to the Magadha country; மகத தேசத்தவன். மட்டலர் பைந்தார் மகதவன் (பெருங். மகத. 19, 147). |
| மகதன் | makataṉ n. Family panegyrist. See மாகதன். (இலக். அக.) |
| மகதி 1 | makati n. <>mahatī. 1. Nārada's lute; நாரதர் வீணை. தும்புரு நாரதர் மகதி விபஞ்சி நரம்புளர (பிரமோத். 2, 62). 2. Pārvatī; |
| மகதி 2 | makati n. See மகதை. (மலை.) . |
| மகதேசன் | makatēcaṉ n. <>magadha+īša. 1. King of Magadha; மகததேசத்தரசன். (பாரத. இரா.17.) 2. King of a part of the country in Naṭu-nāṭu; |
| மகதை 1 | makatai n. <>māgadhī. Long pepper. See திப்பலி. (சங். அக.) |
| மகதை 2 | makatai n. See மகதம், 2. மகதைப் பெருமான் (I. M. P.). . |
| மகதைசுவரியம் | makat-aicuvariyam n. <>mahat+aišvarya. Great opulence; பெருஞ்செல்வம். |
| மகதைப்பெருமாள் | makatai-p-perumāḷ n. <>மகதை2+. A chief ruling over makatai; மகதைநாடாண்ட ஒரு தலைவன். (I. M. P. N. A. 462.) |
| மகந்தரம் | makantaram n. <>மகரந்தம். (சங். அக.) 1. Toddy; கள். 2. Sweet toddy; |
| மகந்து | makantu n. <>Hind. mahant <> mahāntah nom. pl. of mahat. Head of a religious establishment; superior of a monastery, who is succeeded on his death by the chief of his disciples (R. F.); துறவிகளின் மடத்திற்கு அதிபதியாயிருக்குங் குரு. |
| மகப்பால் | maka-p-pāl n. <>மக1+. See மகப்பால்வார்த்தல். (திவா.) . |
| மகப்பால்வார்த்தல் | maka-p-pāl-vārttal n. <>மகப்பால்+. Giving milk to infants, an act of charity, one of muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் அநாதப்பிள்ளைக்குப் பால் வார்த்தலாகிய தருமம். (பிங்.) |
| மகப்பெறுவித்தல் | maka-p-peṟuvittal n. <>மக1+. Rendering assistance in child-birth, an act of charity, one of muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் மகவைப்பெறுவித்தலாகிய தருமம். (திவா). |
