Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகப்பேறு | maka-p-pēṟu n. <>மக1+. Giving birth to a child; பிள்ளைப் பேறு. மன்னன் மகப்பேற்றின் மனங்களித்து (பிரமோத். 8, 122). |
| மகபதி | maka-pati n. <>makha-pati. Indra, as lord of sacrifice; [யாகங்களுக்கு அதிபதி] இந்திரன். கயாசுர னோச்சினன் மகபதி மயங்க (கந்தபு. ததீசியுத்தர. 133). |
| மகபாதகம் | maka-pātakam n. <>mahāpātaka. The five heinous crimes. See பஞ்சமாபாதகம். அறைந்தா மகபாதகமும் (சிவதரு. பாவ. 25). |
| மகம் 1 | makam n. <>makha. 1. Sacrifice; யாகம். மகந்தான் செய்து வழிவந்தார் (திருவாச. 21, 3). 2. Sacrificial offering or food oblation; 3. Happiness; 4. Light, brilliance; 5. Festival; |
| மகம் 2 | makam n. <>maghā. The 10th nakṣatra; பத்தாவது நட்சத்திரம். மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய் (தேவா. 1111, 9). |
| மகம்பூ | makam-pū n. Common anise. See பெருஞ்சீரகம், 1. (சங். அக.) |
| மகம்மது | makammatu n. <>Arab. Muhammad, the Prophet; முகம்மதுநபி. (W.) |
| மகமதியர் | makamatiyar n. <>Muhammad. Mussalmans; முகம்மதியமதத்தார். (W.) |
| மகமது | makamatu n. <>id.+. See மகம்மது. . |
| மகமதுநபி | makamatu-napi n. <>id.+. See மகம்மது. . |
| மகமல் | makamal n. See மக்மல். (W.) . |
| மகமாயி | maka-māyi n. <>மகா+. 1. Pāṟvatī; பார்வதி. பூதநாயக ரிடத்துக் காமி மகமாயி (திருப்பு. 641.) 2. The Goddess of Small-pox; |
| மகமுறை | maka-muṟai n. <>மகம்1+. 1. Feast; விருந்து. (அக. நி.) 2. Method of performing sacrifices; |
| மகமேரு | maka-mēru n. <>mahat+. Mt. Mēru. See மகாமேரு. (திவா.) . |
| மகமை | makamai n. <>U. mahkama. 1. Contribution in grain for a temple or chattram, levied from cultivators now given optionally; tax or contribution levied for a religious or charitable purpose bearing a certain definite proportion to the rent payable (R. F.); கோயில் சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும் வரி. மானிய நிலம்பதி மகமையென்பதும் (செவ்வந்தி. பு. உறையூர். 31). 2. Donation for charity consisting of a fixed percentage on the profits of commercial transactions; 3. An ancient land tax; |
| மகயிரம் | makayiram n. <>mṟga-širas. [M. makayiram.] Mrgašīra, the fifth nakṣatra; மிருகசீருடநாள். சோதியொன்று . . . மகயிரமாயிலங்கிற்றம்மா (சேதுபு. காயத். 8). |
| மகர் | makar n. <> Arab. mahr. Muham. 1. Written contract making a settlement on a wife; ஒரு முகம்மதியன் தன் மனைவிக்குப் பொருள் கொடுப்பதாக எழுத்து முலமாகச் செய்யும் உடன்படிக்கை. 2. A marriage portion or gift, settled upon ones's bride; 3. Dowry, jointure, alimony; 4. Amount paid of promised to a bride by the bridegroom as security for his keeping the marriage tie; |
| மகரக்குழை | makara-k-kuḻai n. <>மகரம்1+. Fish-shaped ear-ring; மகரகுண்டலம் மகரக்குழைக் காதனைமைந்தனை (திவ். பெரியதி, 7, 3, 2). |
| மகரக்குறுக்கம் | makara-k-kuṟukkam n. <>ம+கரம்1+. (Gram.) Shortened ம், as in போன்ம், one of ten cārpeḻuttu, q.v.; தன்மாத்திரையிற் குறைந்த மகரமெய். (நன். 96.) |
| மகரக்கொடியோன் | makara-k-koṭiyōṉ n. <>மகரம்1+. Kāma, as having the emblem of fish on his banner; [மீனைக் கொடியிலுடையவன்] மன்மதன். (பிங்.) |
| மகரகண்டிகை | makara-kaṇṭikai n. <>id.+. 1. Fish-shaped necklace; கழுத்தணிவகை. Colloq. 2. See மகரதோரணம். (W.) |
| மகரகந்தம் 1 | makara-kantam n. See மகரந்தம். (சங். அக.) . |
| மகரகந்தம் 2 | makara-kantam n. <>mahā-kanda. Onion. See வெண்காயம். (சங். அக.) |
| மகரகாலம் | makara-kālam n. Mango; மா. (மலை.) |
| மகரகுண்டலம் | makara-kuṇdalam n. <>makara-kuṇṭalam. Ear-ring shaped like a makaram; சுறாமீனின் வடிவமமைந்த காதணி. செயிர் மகரகுண்டலமும் (சீவக. 168). |
