Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகரம் 3 | makaram n. prob. mahas. The celestial world, heaven; தேவருலகு. (W.) |
| மகரம்பூ | makaram-pū n. See மகரந்தப்பூ. . |
| மகரம்போடு - தல் | makaram-pōṭu- v. tr. <>மகரம்2+. See மகரந்தோய்-. (W.) . |
| மகரமச்சம் | makara-maccam n. <>மகரம்1+. See மகரமீன். (W.) . |
| மகரமாதம் | makara-mātam n. <>id.+. See மகரம், 8. (யாழ். அக.) . |
| மகரமீன் | makara-mīṉ n. <>id.+. Shark; சுறா. (பிங்.) |
| மகரமுகம் | makara-mukam n. <>id.+. (Nāṭya.) A gesture with one hand in which the thumb and the forefinger are held upright while the other fingers are held together and apart from them; பெருவிரலும் சுட்டுவிரலும் நிமிர்ந்துகூட ஒழிந்த மூன்றுவிரலும் தம்முளொன்றி வேறாய் நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) |
| மகரமுயர்த்தோன் | makaram-uyarttōṉ n. <>id.+ உயர்3-. See மகரக்கொடியோன். (திவா.) . |
| மகரயாழ் | makara-yāḷ n. <>id.+. Fishshaped lute of 19 strings, one of four yāḷ, q.v.; யாழ் நான்கனுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புகளைக்கொண்டது. (பிங்.) (சீவக. 608, உரை.) |
| மகரயூகம் | makara-yūkam n. See மகரவியூகம். (W.) . |
| மகரயூபம் | makara-yūpam n. See மகரவியூகம். (யாழ். அக.) . |
| மகரராசி | makara-rāci n. <>makara+. Capricorn of the zodiac; பத்தாம் இராசி. |
| மகரரேகை | makara-rēkai n. <>id.+. A line on the palm of hand, believed to indicate wealth; தனவானென்பதைக் காட்டுங்குறியாக உள்ளங்கையில் அமையும் இரேகைவகை. (சங். அக.) |
| மகரவலயம் | makara-vaḷayam n. <>id.+. See மகரப்பகுவாய்.மகரவலய மணிதிகழ் நுதலியர் (பரிபா. 10, 77). . |
| மகரவாகனன் | makara-vākaṉaṉ n. <>id.+ vāhana. Varuṇa; வருணன். (சங். அக.) |
| மகரவாய் | makara-vāy n. <>id.+. See மகரப்பகுவாய், பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54). . |
| மகரவாய்மோதிரம் | makara-vāy-mōtiram n. <>id.+. Toe-ring in the shape of the mouth of a shark; மகரமீனின் வாய்வடிவாகச் செய்த கால்விரலணிவகை. (சிலப். 6, 83, உரை.) |
| மகரவாழை | makara-vāḷai n. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மூ. அ.) 2. A kind of plantain; |
| மகரவியூகம் | makara-viyūkam n. <>makara+. Array of army in the shape of a makaram; மகரமீனின் வடிவான படைவகுப்பு. வருபடை தன்னைநிறுத்தி விதம்பட மகரவியூகம் வகுத்து (பாரத. பதின்முன்றாம். 7). |
| மகரவீணை | makara-viṇai n. <>id.+. See மகரயாழ். தீந்தொடை மகரவீணைத் தெள்விளி (சீவக. 608). . |
| மகரவுச்சன் | makara-v-uccaṉ n. <>id.+ உச்சம். Mars; செவ்வாய். (நாமதீப. 98.) |
| மகரன் | makaraṉ n. <>id. Saturn; சனி. (நாமதீப. 102.) |
| மகராகரம் | makarākaram n. <>makarākara. Sea; கடல். (யாழ். அக.) |
| மகராங்கம் | makarāṅkam n. <>makarāṅka. Sea; கடல். (யாழ். அக.) |
| மகராங்கன் | makarāṅkaṉ n. <>makarāṇka. See மகரக்கொடியோன். (சங். அக.) . |
| மகராசமூலி | makarāca-mūli n. Spleen; மண்ணீரல். (சங். அக.) |
| மகராசன் | maka-rācaṉ n. <>mahā-rāja. See மகாராசன். வருராம தேவ மகராசன் (நம்பியுலா.) . |
| மகராசா | maka-rācā n. <>id. See மகாராசன் . |
| மகராசி | maka-rāci n. <>mahā-rājī. 1.Queen; இராணி. 2. Wealthy, blessed woman; |
| மகராசுவன் | makarācuvaṉ n. <>makarāšva. See மகரவாகனன். (யாழ். அக.) . |
| மகராட்டிரம் | makarāṭṭiram n. See மகாராட்டிரம். (யாழ். அக.) . |
| மகராயனம் | makarāyaṉam n. <>makarāyana. Winter solstice; சூரியன் வடக்கு நோக்கித் திரும்புங்காலம். (பஞ்.) |
| மகராலயம் | makarālayam n. <>maka-rālaya. Sea, as the abode of fish; கடல். (திவா). வானுமின்றி மகராலயமு மின்றி (தக்கயாகப். 408). |
| மகரி | makari n. <>makarin. Sea; கடல். (சங். அக.) |
| மகரிகை | makarikai n. <>makarika. 1.The figure of shark, as in ornaments; அணி முதலியவற்றிலமைந்த சுறாமீன்வடிவு. மகரிகைவயிர குண்டலமலம்புந் . . . தோள்புடை வயங்க (கம்பரா. நிந்தனை. 1). 2. See மகரம், 4 மாதின் மகரிகை வயங்கு பொற்பூண் குழுறு கவரனே (கந்தபு. மாயை. 56). 3. Ornamental hangings; 4. A shark-shaped box; |
