Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகரிஷி | makariṣi n. <>maharṣi. Great sage; முனிசிரேட்டர். |
| மகருதம் | makarutam n. Ceylon leadwort. See கொடி வேலி. (மலை.) |
| மகரை | makarai n. <>makara. A sea-fish; கடல்மீன்வகை. Loc. |
| மகலிங்கம் | maka-liṅkam n. [T. mogalingam.] Weaver's beam, m. u., Schrebera swietenioides; மரவகை. (L.) |
| மகலோகம் | maka-lōkam n. <>maharlāka. An upper world, fourth of mēī-ēl-ulakam, q.v.; மேலேழுலகத் தொன்று. (திவா). கோவுலோக மகலோக மடையக் குமுறவே (தக்கயாகப். 704). |
| மகவளர்த்தல் | maka-vaḷarttal n. <>மக1+. See மகவுவளர்த்தல். (சூடா.) . |
| மகவன் | makavaṉ n. See மகவான்2. (யாழ். அக.) . |
| மகவாட்டி | makavāṭṭi n. <>மகவு+ஆட்டி. Woman blessed with children; புத்திரப்பேறுள்ளவள். (யாழ். அக.) |
| மகவான் 1 | makavāṉ n. <>மக1. One who has children; மகப்பேறுடையவன். தன்மசகனூறு மகவானாகச்செய்யும் (தேவை. 16). |
| மகவான் 2 | makavāṉ n. <>magha-vān nom. sing. of magha-vat. 1. Indra; இந்திரன். (திவா.) மகவான்மக ளிரங்கின னரற்ற (பாரத. பதின்மூன். 168). 2. šiva; |
| மகவான் 3 | makavāṉ n. <>makha-vān nom. sing. of makha-vat. Sacrificer; யாகஞ் செய்பவன்.வேதாவை மிக்க மகவானாகக் கூட்டி (தேவை. 15). |
| மகவின்கோள் | makaviṉ-kōḷ n. <>மகவு+. Jupiter; வியாழன். (நாமதீப. 100.) |
| மகவு | makavu n. <>மக1. [K. magavu.] 1. Infant; குழந்தை. (திவா.) மகவுமுலைவருட (கம்பரா. தைல. 13). 2. Son; 3. Young of animals living on trees, as of monkeys; |
| மகவுவளர்த்தல் | makavu-vaḷarttal n. <>மகவு+. Fostering children, an act of charity, one of muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகளை வளர்த்தலாகிய தருமம். (பிங்.) |
| மகவேள்வி | maka-vēḷvi n. <>மக1+. Sacrifice performed for obtaining sons; புத்திரகாமேட்டி. மிக்க மகவேள்விசெய் விருப்புடைய னாகி (திருவிளை. தடாதகை. 7). |
| மகவோட்டம் | maka-v-ōṭṭam n. <>maghā+. Transit of the moon in makam in the month of Māci, indicating fertility if on the south and scarcity if on the north; மாசிமாதத்து மகநக்ஷத்திரத்தின் தென்பாகத்திற் செல்லின் செழிப்பையும் வடபாகத்திற் செல்லின் பஞ்சத்தையும் குறிப்பதான சந்திரனது கதி. (சூடா. உள். 275.) |
| மகள் | makaḷ n. <>மக1. [ K. M. magaḷ.] 1. Daughter; புத்திரி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித். 56). 2. Woman, female, damsel; 3. Wife; |
| மகளிக்கீரை | makaḷi-k-kīrai n. Cockscomb greens, Celosia argentea; கீரைவகை. (யாழ். அக.) |
| மகளிர் | makaḷir n. Women; பெண்கள். வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தலல்லது (புறநா. 10). |
| மகளிர்சாதி | makaḷir-cāti n. <>மகளிர்+. Adult woman, of three classes, viz., aruṇi, vaṭavai, attiṉi; அருணி, வடவை, அத்தினி என்ற மூவகைப் பெண்கள். (கல்லா. 7, மயிலேறும். உரை.) |
| மகளிர்நாற்குணம் | makaḷir-nāṟ-kuṇam n. <>id.+. Feminine qualities, four in number. See மகடூஉக்குணம். (திவா.) . |
| மகளிர்பருவம் | makaḷir-paruvam n. <>id.+. 1. Stages of woman's life, of which there are seven, viz., pētai, petumpai, maṅkai, maṭantai, arivai, terivai, pēriḷampeṇ; பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண்பருவம். (திவா.) 2. Stages of woman's life, numbering four viz., vālai, taruṇi, piravuṭai, viruttai; |
| மகளிரான்மலர்மரம் | makaḷirāṉ-malarmaram n. <>id.+. Trees and plants believed to blossom by the touch, look, etc. of women of the highest class, numbering ten, viz., makiḻ, ēḻilaimpālai, pātiri, mullai, puṉṉai, kurā, acōku, kurukkatti, marā, caṇpakam; உத்தம சாதிப்பெண்களின் தொடுகை முதலிய செய்கைகளால் மலர்வனவாகக் கருதப்படும் மகிழ், ஏழிலைம்பாலை, பாதிரி, முல்லை, புன்னை, குரா, அசோகு, குருக்கத்தி, மரா, சண்பகம் என்ற பத்துவகை மரங்கள். (இரத்தினச். 41, தலைப்பு.) |
