Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாசைவன் | makā-caivaṉ n. <>id. (Saiva.) Brahmin who has been initiated; சிவதீட்சைபெற்ற பிராமணன். (சைவச. பொது. 475.) |
| மகாசோபம் | makā-cōpam n. <>mahā-kṣōbhya. A great number, hundred-thousand trillions; நூறுகோடி கோடாகோடி. (த. நி. பேர். பக். 25.) |
| மகாண்டு | makāṇṭu n. <>மகா+ஆண்டு. Jupiter cycle of 60 years; அறுபதாண்டு கொண்ட வியாழ வட்டம். (W.) |
| மகாத்தியாகம் | makā-t-tiyākam n. <>mahā-tyāga. Complete renunciation of the world; பெருந்துறவு. |
| மகாத்துமா | makāttumā n. <>mahātmā. nom. sing of mahātman. Highly spiritual person; exceedingly wise man; lofty soul; பரமஞானி. |
| மகாத்மியம் | makātmiyam n. <>māhātmya. See மாகாத்மியம். (த. நி. போ. பக். 247.) . |
| மகாதசை | makā-tacai n. <>mahā + dašā. (Astrol.) Period of influence of a planet with reference to the natal house in a horoscope; ஜாதகனுக்கு ஒரு கிரகத்தின் நடப்புக்காலம். |
| மகாதண்பனை | makā-taṇpaṉai n. <>மகா+. A great number; ஒரு பேரேண். (நாமதீப. 801.) |
| மகாதந்தம் | makā-tantam n. <>mahādanta. (யாழ். அக.) 1. Elephant ; யானை. 2.Tusk of an elephant; |
| மகாதலம் 1 | makā-talam n. <>mahāsthalī. 1.The earth; பூமி. (பிங்). 2.Yellow orpiment; |
| மகாதலம் 2 | makātalam n. <>mahātala. A nether world, fifth of kīḷ-ēḷ-ulakam, q.v.; கீழேழுலகத் தொன்று. (சூடா.) |
| மகாதலம் 3 | makā-talam n. <>mahā-sthala. 1. Sacred place; புண்ணிய க்ஷேத்திரம. 2. Head quarters; chief place; court; |
| மகாதனம் | makā-taṉam n. <>mahā-dhana. (யாழ். அக.) 1. Gold; பொன். 2. Agriculture; 3. Incense; |
| மகாதாது | makā-tātu n. <>mahā-dhātu. Gold; பொன். (யாழ். அக.) |
| மகாதானம் 1 | makā-tāṉam n. <>mahā-dāna. A kind of gift made by kings; மன்னவராற் செய்யப்படுந் தானவகை. (த. நி. போ. பக். 25.) |
| மகாதானம் 2 | makā-tāṉam n. A tree; பெருங்கொட்டை என்னும் மரம். (சங். அக. |
| மகாதிசை 1 | makā-ticai n. <>மகா+. The four cardinal points; நாற்பெருந்திசை. |
| மகாதிசை 2 | makā-ticai n. Corr. . of மகாதசை. . |
| மகாதிம்பம் | makā-timpam n. See மகாநிம்பம் 2, 1. (சங். அக.) . |
| மகாதீவு | makā-tīvu n. <>மகா+. The Maldives; மால்தீவுகள். (W.) |
| மகாதுந்துமி | makā-tuntumi n. <>id.+. War-drum; போர்ப்பறை. (யாழ். அக.) |
| மகாதுருமம் | makā-turumam n. <>mahā-druma. Pipal; அரசு. (மலை.) |
| மகாதேசம் | makā-tēcam n. <>mahā-tējas. Mercury; பாதரசம். (மூ. அ. ) |
| மகாதேவன் | makā-tēvaṉ n. <>mahā-dēva. 1. God; கடவுள். 2. Siva, as the great God; 3. Varuṇa; |
| மகாதேவி | makā-tēvi n. <>mahā-dēvī. 1. Pārvatī, as the consort of šiva; பார்வதி. (தக்கயாகப். 80, உரை.) 2. Chief queen; |
| மகாதோரை | makā-tōrai n. <>மகா+. A great number; ஒரு பேரெண். (யாழ். அக.) |
| மகாதோஷம் | makā-tōṣam n. <>mahā-dōṣa. Great sin; பெரும்பாவம். Colloq. |
| மகாநட்சத்திரம் | makā-naṭcattiram n. <>மகா+. Lunar asterism occupied by the moon on a particular day; குறித்த நாளில் சந்திரனுடன் கூடியிருக்கும் நட்சத்திரம். Loc. |
| மகாநடன் | makā-naṭaṉ n. <>mahā-naṭa. šiva, as the great dancer; சிவபிரான். (யாழ். அக.) |
| மகாநடனன் | makā-naṭaṉaṉ n. <>mahā-naṭana. See மகாநடன். (சங். அக.) . |
| மகாநதி | makā-nati n. <>mahā-nadī. 1. Great river; பேராறு. 2. The Ganges; 3. The river Mahānad; |
| மகாநரகம் | makā-narakam n. <>mahā-naraka. A hell; நரகவகை (யாழ். அக.) |
| மகாநவமி | makā-navami n. <>mahā+. The last day of navarāttiri, as a day sacred for the worship of Sarasvatī; சரசுவதிபூசை நிகழும் நவராத்திரியின் இறுதிநாள். |
