Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாபஞ்சமூலம் | makā-paca-mūlam n. <>மகா+. A compound medicine. See பெரும்பஞ்சமூலம். (பைஷஜ. 155.) . |
| மகாபட்சி | makā-paṭci n. <>mahā-pakṣin. Owl; ஆந்தை. (சங். அக.) |
| மகாபத்திரம் | makā-pattiram n. <>mahā-patra. Palmyra tree; பனைமரம். (சங். அக.) |
| மகாபதுமபெந்தம் | makā-patuma-pen-tam n. <>mahā-padma+. A kind of cittira-kavi of great complexity; சித்திர கவிவகை. (மாறனலங். 283, உரை.) |
| மகாபதுமம் | makā-patumam n. <>mahā-padma. 1. One of nine treasures of Kubēra; குபேரன் நவநிதிகளுள் ஒன்று. 2. A great number; 3. White lotus; 4. A temple of 176 towers and 22 storeys; 5. See மகாபதுமபெந்தம். |
| மகாபதுமன் | makā-patumaṉ n. <>mahā-padma. The divine serpent which supports the earth in the north, one of aṣṭamā-nākam, q.v.; அஷ்டமாநாகங்களுள் பூமியை வடபக்கத்தில் தாங்கும் நாகம். (பிங்.) |
| மகாபரணி | makā-paraṇi n. <>mahā-bharaṇī. The day of the second nakṣatra in makāḷaya-paṭcam, auspicious for worshipping the manes; பிதிரர்களுக்கு விசேடமானதும் மகாளய பட்சத்தில் வருவதுமான பரணிநட்சத்திரம். (பஞ்.) |
| மகாபரதம் | makā-paratam n. <>mahā-bharata. A treatise in Sanskrit on the art of dancing by Sāraṅgadēva; சாரங்கதேவமுனிவரால் வடமொழியிற் செய்யப்பட்ட பரதநூல். (அபி.சிந்.) |
| மகாபலம் | makā-palam n. <>mahā-phala. 1. Sylhet orange. See சொழிஞ்சி. (மலை.) 2. Climbing brinjal. 3. Coconut-palm. |
| மகாபலன் | makā-palaṉ n. <>mahā-bala. 1. Strong person; பலம் மிக்கவன். 2. Air, wind; |
| மகாபலி | makā-pali n. <>mahā-bali. An Asura sovereign. See பலிசக்கரவர்த்தி. |
| மகாபலை | makā-palai n. <>mahā-phala. Bael tree; வில்வம். (தைலவ. தைல.) |
| மகாபவன் | makā-pavaṉ n. <>maghā-bhava. Cukkiraṉ; சுக்கிரன். (யாழ். அக்.) |
| மகாபற்பம் | makā-paṟpam n. See மகாபதுமம், 2. (திவா.) . |
| மகாபற்பன் | makā-paṟpaṉ n. See மகாபதுமன். (திவர.) . |
| மகாபாகவதம் | makā-pākavatam n. <>மகா+. A Tamil version of the Sanskrit Bhāgavatam by Varadaraja Aiyangar of Nellinakar, 1543 A. D.; கி. பி. 1543ல் நெல்லிநகர் வரதராஜ ஐயங்கார் வடமொழியினின்று தமிழ் மொழியிற் செய்யுளாக இயற்றிய பாகவதநூல். |
| மகாபாகன் | makā-pākaṉ n. <>mahā-bhāga. Blessed persoṇ; பாக்கியமுள்ளவன். பண்டிதனும் மகாபாகனும் கிருதார்த்தனும் (சி. சி. 4, 34, சிவாக்.) |
| மகாபாசகன் | makā-pācakaṉ n. <>mahā-pāsaka. Bauddha mendicant; புத்த பிட்சுகன் (யாழ். அக.) |
| மகாபாதகம் | makā-pātakam n. <>mahā-pātaka. The five heinous crimes. See பஞ்சமாபாதகம். மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல். (திருவாலவா.) |
| மகாபாரதம் | makā-pāratam n. <>Mahā-bhārata. 1. The great Sanskrit epic, dealing with the story of the Pāṇdavas, by the sage Vyāsa; வடமொழியில் பாண்டவ சரிதத்தைக்கூறும் வியாசபாரதம். 2. The Tamil renderings of the Mahābhārata, by Peruntēvaṉār, Villiputtūrar and Nallāppiḷḷai; |
| மகாபாரதவிருத்தி | makā-pārata-virutti n. <>id.+. Allowance for expounding the Mahābhārata in a temple; கோயிலில் மகாபாரதம் படித்துப் பிரசங்கித்தற்கு விடப்படும் மானியம். (I. M. P. Tn. 91.) |
| மகாபிண்டம் | makā-piṇṭam n. <>மகா+. A big treatise consisting of several piṇṭam; இயல் இசை நாடகம்போலப் பலபிண்டங்களை உறுப்பாகக் கொண்ட பெருநூல். (மாறனலங். 20.) |
| மகாபித்தம் | makā-pittam n. See மகாகபித்தம். (சங். அக.) . |
| மகாபிரதானி | makā-piratāṉi n. <>மகா+. Prime minister; முதன்மந்திரி. |
| மகாபுடம் | makā-puṭam n. <>id.+. Calcination of metals by placing them in a heap of burning kāṭṭeru in a pit one cubit and a half square and two cubits deep; பூமியில் ஒன்றரை முழச் சதுரமும், இரண்டுமுழ ஆழமுமுள்ள பள்ளத்தில் காட்டெருவையிட்டுப் போடும் புடம். Colloq. |
| மகாபுராணம் | makā-purāṇam n. <>mahā-purāṇa. 1. The 18 chief Purāṇas; பிரதானமான பதினெண்புராணங்கள். (தக்கயாகப். 113, உரை.) 2. A Jaina Purāṇa; |
