Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகிணன் | makiṇaṉ n. <>மகிழ்-. 1. Husband; கணவன். நின்மகிணன் றனையும் (கந்தபு. திருமண. 29). 2. Chief of an agricultural tract; 3. Lord; |
| மகிதம் | makitam n. <>mahita. šiva's trident; சிவபிரானது திரிசூலம். (யாழ். அக.) |
| மகிதலம் | maki-talam n. <>mahī-tala. The earth; பூதலம். மகிதலமேல் வீழ்தலுற்று (பாரத. பதினெட். 175). |
| மகிந்தகம் | makintakam n. <>mahindhaka. (சங். அக.) 1. Rat; எலி. 2. Mongoose; |
| மகிபதி | maki-pati n. <>mahī-pati. See மகிபாலன். . |
| மகிபன் | makipaṉ n. <>mahī-pa. See மகிபாலன். (நாமதீப. 147.) . |
| மகிபாலன் | maki-pālaṉ n. <>mahī-pāla. King, monarch; அரசன். (பிங்.) |
| மகிமா | makimā n. <>mahimā. nom. sing. of mahiman. The supernatural power of increasing size at will, one of aṣṭamācitti, q.v.; அஷ்டமாசித்திகளுள் இஷ்டம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனு நிறையும் பெருமைதனை யன்றோ மகிமா வென்னும் (திருவிளை. அட்டாமா. 23). |
| மகிமை 1 | makimai n. <>id. 1. Greatness, grandeur, glory, majesty; பெருமை. மங்கல மகிமை மாநகர். (திருப்பு. 16). 2. Honour, dignity; respectability; |
| மகிமை 2 | makimai n. General fund. See மகிமை. (G. Tn. D. I, 104.) . |
| மகிமைத்தனம் | makimai-t-taṉam n. <>மகிமை1+. Making a false show; போலி நடிப்பு. (W.) |
| மகிமைப்படுத்து - தல் | makimai-p-paṭuttu- v. tr. <>id.+. 1. To magnify, glorify, dignify; கௌரவித்தல். 2. To extol, praise; |
| மகிமைப்பிரதாபம் | makimai-p-piratāpam n. <>id.+. Great glory; பெருங்கீர்த்தி. (W.) |
| மகிரன் | makiraṉ n. <>mahira. Sun; சூரியன். (யாழ். அக.) |
| மகிருகம் | makirukam n. <>mahī-ruha. See மகிருகம். (W.) . |
| மகிலப்பூ | makilappū n. Common anise. See பெருஞ்சீரகம், 1. நாசிக்கிடுந்தூளு கேளாய்: நல்ல கற்பூர மகிலப்பூ பச்சை. |
| மகிலம் | makilam n. See மயிலிறகு. (யாழ். அக.) . |
| மகிலை | makilai n. <>mahilā. (யாழ். அக.) 1. Woman; பெண். 2. Mad woman; |
| மகிழ் 1 - தல் | makiḻ- 4 v. [M. makiḻuka.] intr. 1. To joy, rejoice, exult; அகங்களித்தல். காணின் மகிழ்ந்துள்ளம் (குறள், 1057). 2. To forget oneself in joy; 3. To bubble up in boiling; 1. To wish, desire; 2. To take in, drink; |
| மகிழ் 2 | makiḻ n. <>மகிழ்-. 1. Joy, exhilaration; இன்பம். மகிழ்சிறந்து (புறநா. 20, 32). 2. Intoxication from liquor; 3. Toddy; |
| மகிழ் 3 | makiḻ n. <>makula. Pointed-leaved ape-flower, 1. tr., Mimusaps elangi; மரவகை. மகிழ்மாலைமார்பினன் (திவ். திருவாய். 4, 10, 11). |
| மகிழ்ச்சி | makiḻcci n. <>மகிழ்-. 1. Joy, pleasure, delight, gladness; உவமை. மன்னா மகிழ்ச்சி யறிவுடையாளர்க ணில் (நாலடி, 16). 2. (Rhet.) See மகிழ்ச்சியணி. (சூடா.) |
| மகிழ்ச்சிநிலை | makiḻcci-nilai n. <>மகிழ்ச்சி+. Elation of spirits; உள்ள மிகுதி. மார்பன் மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை (பு.வெ. 10, பொதுவி. முல்லைப். 1, கொளு). |
| மகிழ்ச்சியணி | makiḻcci-y-aṇi n. <>id.+. (Rhet.) Figure of speech in which joy is expressed; மகிழ்ந்து சொல்லுகையாகிய அலங்கார வகை. (வீரசோ. அலங். 12.) |
| மகிழ்ச்சிவினை | makiḻcci-viṉai n. <>id.+. Religious merit; புண்ணியம். மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர் (மணி. 30, 81). |
| மகிழ்த்தாரான் | makiḻ-t-tārāṉ n. <>மகிழ்3+. Kāma, the Indian Cupid; மன்மதன். (நாமதீப. 58, உரை.) |
| மகிழ்நன் | makiḻnaṉ n. <>மகிழ்-. See மகிணன், 1. மகிழ்நன் பரத்தமை நோவேன்றோழி (கலித். 75). See மகிணன், 2. |
