Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகிழ்வு | makiḻvu n. <>id. Joy, mirth. See மகிழ்ச்சி, 1. 31). இன்பமு மகிழ்வு மெங்கும் (பெரியபு. நாட்டு. 31). |
| மகிழடிசேவை | makiḻ-aṭi-cēvai n. <>மகிழ்3+. A festival in the šiva shrine of Tiru-voṟṟiyūr; திருவொற்றியூர்ச் சிவாலயத்தில் நிகழும் ஒரு திருநாள். |
| மகிழம் | makiḻam n. See மகிழ்3. வேங்கை மராஅ மகிழம் (பரிபா. 22, 7). |
| மகிழம்பூ | makiḻam-pū n. <>மகிழ்3+. A kind of saree; புடைவைவகை. |
| மகிழம்பூப்பணிகாரம் | makiḻampū-p-paṇikāram n. <>மகிழம்பூ+. A kind of cake made in imitation of makiḻ flowers; பணியாரவகை. |
| மகிழமரம் | makiḻa-maram n. <>மகிழ்3+. See மகிழ்3. . |
| மகிழலகு | makiḻ-alaku n. <>id.+. Seed of the makiḻ tree, formerly used in astrological calculations; மகிழம்விதை. மகிழல கொன்றே போல் மாறும்பல் யாக்கை (திவ். இயற். 1, 49). |
| மகிழின்பரல் | makiḻiṉ-paral n. <>id.+. See மகிழலகு. (திவா.) . |
| மகிளம் | makiḷam n. Petal; பூவிதழ். (யாழ். அக.) |
| மகிளி - த்தல் | makiḷi- 11. v. intr. <>மக்களி-. See மகிடி-. (W.) . |
| மகிளி | makiḷi n. 1. See மகிளிக்கீரை. (W.) . 2. Mire; |
| மகிளிக்கீரை | makiḷi-k-kīrai n. <>மகிளி+. A species of greens; கீரைவகை. (W.) |
| மகிளிப்பருவம் | makiḷi-p-paruvam n. <>id.+. Condition of wet land prepared for cēṟṟukkāl cultivation; சேற்றுக்காலாக உழுது சாகு படிக்குத் தகுதியான நிலை. Nā. |
| மகினம் | makiṉam n. <>mahina. Kingdom; இராச்சியம். (யாழ். அக.) |
| மகிஷம் | makiṣam n. <>mahiṣa. He-buffalo; எருமைக்கடா. |
| மகிஷி | makiṣi n. <>mahiṣī. Queen; அரசி. |
| மகீ | makī n. See மகி. (யாழ். அக.) . |
| மகீசுதன் | makī-cutaṉ n. <>mahī-suta. Mars, as son of the Earth; செவ்வாய். (யாழ். அக.) |
| மகீத்திரம் | makīttiram n. <>mahī-dhra. Mountain; மலை. (யாழ். அக.) |
| மகீதரம் | makī-taram n. <>mahī-dhara. See மகீத்திரம். மகீதர வனசரர் (திருப்பு. 334). . |
| மகீப்பிராசீரம் | makī-p-pirācīram n. <>mahī-prācīra. Sea, as earth-girt; [பூமியை வேலியாக வுடையது] கடல். (யாழ். அக.) |
| மகீபதி | makī-pati n. <>mahī-pati. See மகிபாலன். (நெல்விடு. 95.) . |
| மகீபன் | makīpaṉ n. See மகிபாலன். நீண்முடிமகீபன் (பிரமோத். சனிப்பிர.17). |
| மகீருகம் | makīrukam n. <>mahī-ruha. Plant, tree, as growing on earth; [பூமியில் முளைப்பது] தாவரம். நால்வகை மகீருகங்களுநெடுவெற் பினங்களும் (பாரத. காண்டவ. 5). |
| மகீலதை | makīlatai n. <>mahī-latā. Earth-worm; நாங்கூழ். (யாழ். அக.) |
| மகுடஞ்சூழ் - தல் | makuṭa-cūḻ v. intr. <>மகுடம்+. (W.) 1. To become dim, as eyesight; கண்ணொளி மங்குதல். அவனுக்குக் கண் மகுடஞ்சூழ்ந்துபோயிற்று. 2. To become regardless of others, as one elevated to a high office; |
| மகுடம் | makuṭam n. <>makuṭa. 1. Crown; மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா. முதற்போ. 246). 2. Head-dress, crest, tiara; 3. Anything crest-like, as the ornamental top of a temple car; 4. Finishing part of stanzas in a poem, in the form of a refrain; 5. Title, caption; 6. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; 7. Ornamental button of an ola book; 8. An ear-ornament worn by women; 9. Edge of drums; 10. A kind of drum; 11. Dimness of vision, obscurity; |
| மகுடயோகம் | makuṭa-yōkam n. <>id.+. (Astrol.) A yōga, when Jupiter is situate in the fifth, Saturn in the tenth house and the lord of the fifth in the ninth house; ஐந்தாமிடத்திற் குருவும் பத்தாமிடத்திற் சனியும் ஒன்பதாமிடத்திற் பஞ்சமாதிபதியும் இருக்க வரும் யோகம். (சங்.அக.) |
| மகுடராகம் | makuṭa-rākam n. (Mus.) See மகுடராமக்கிரி.(W.) . |
| மகுடராமக்கிரி | makuṭa-rāmakkiri n. (Mus.) A musical mode; ஓரிராகம். (திவா.) |
