Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகோததி | makōtati n. <>mahōdadhi. 1. Ocean, great sea; கடல். (பிங்.) மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42). 2 The sea to the north of Dhanuṣkōṭi; |
| மகோததிசூத்தம் | makōtati-cūttam n. <>mahōdadhi-sūkta. A Sanskrit treatise on Mīmāmsā philosophy by Mahōdadhi, not extant; மகோததி யென்பவர் வடமொழியில் இயற்றியதும் இறந்துபட்டதுமான மீமாஞ்சை நூல். (பிரபோத. 11, 6.) |
| மகோதயம் | makōtayam n. <>mahōdaya. 1. Conjunction of the sun and the moon at sunrise on a Monday with šravaṇa nakṣatra and vyatīpāta yōga in the Solar month of Taj, considered sacred; தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாதயோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.) 2. Greatness; 3. Excellence; 4. Salvation; |
| மகோதரச்சூலை | makōtara-c-cūlai n. <>மகோதரம்+. See மகோதரம், 2. (இராசவைத். 165.) . |
| மகோதரம் | makōtaram n. <>mahōdara. 1. Goblin, as big-bellied; பூதம். (பிங்.) 2. Dropsy of the abdomen, ascitis; |
| மகோதரன் | makōtaraṉ n. <>mahōdara. A minister of Rāvaṇa; இராவணன் மந்திரி. மாயைகள் பலவும் வல்ல மகோதரன் (கம்பரா. கும்பகருண. 34) |
| மகோதை | makōtai n. Koṭuṅ-kōḷūr; கொடுங்கோளூர். கோதை யரசர் மகோதை யெனக்குலவு பெயரு முடைத்து (பெரியபு. சேரமான். 4). |
| மகோதையார்ப்பட்டணம் | makōtaiyār-p-paṭṭaṇam n. <>மகோதை+. See மகோதை. (செ. vii, 7.) . |
| மகோதையை | makōtaiyai n. prob. mahōdayā. The Tāmpiraparṇi; தாம்பிரபர்ணி நதி. (நாமதீப. 525.) |
| மகோபநிஷதம் | makōpaniṣatam n. <>mahōpaniṣad. See மகத்து, 6. (சங். அக.) . |
| மகோற்சவம் | makōṟcavam n. <>mahōtsava. Great festival; பெரிய திருநாள். |
| மகோற்பலம் | makōṟpalam n. <>mahōttala. Lotus; தாமரை. (மலை) |
| மகோன்மதம் | makōṉmatam n. <>mahōnmada. Extreme intoxication; மிகுவெறி. (யாழ். அக.) |
| மகோன்னதம் | mokōṉṉatam n. <>mahōnnata 1. Height, loftiness; மிக்க உயரம். 2. High rank, high position; 3. Palmyrapalm; |
| மகௌடதம் | makauṭatam n. <>mahauṣadha. (சங். அக.) 1. Dried ginger; See சுக்கு. . 2. Long pepper; See திப்பலி. 3. Sweet flag; 4. See மகௌடதி. |
| மகௌடதி | makauṭati n. <> mahauṣadhi. Valuable medicinal shrub; நன்மருந்து. (சங். அக.) |
| மங்கணசித்தர் | maṅkaṇa-cittar n. A Siddha; ஒரு சித்தர். (அபி. சிந்.) |
| மங்கல் | maṅkal n. <>மங்கு-. [K. maggu.] 1. Decaying, fading; கெடுகை. 2. Dimness, obscurity, growing dim; 3. Darkness; dusk; |
| மங்கல்யம் | maṅkalyam n. See மங்கலியம். சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா (கந்தரலங். 21). |
| மங்கல்லியம் | maṅkalliyam n. <>maṅgalya. 1. See மங்கலியம் 1. . 2. Sandal-wood. See சந்தனம். (சங். அக.) 3. Curd; 4. Gold; 5. Red lead; |
| மங்கலக்கருவி | maṅkala-k-karuvi n. <>மங்கலம்+. 1. Razor, as used for shaving on auspicious occasions like weddings; சவரக்கத்தி. மங்கலக் கருவி முன்னுறுத்தி வாழ்த்தி (சீவக.2411). 2. Musical instruments, as yāḷ, etc.; |
| மங்கலக்கிழமை | maṅkala-k-kiḷamai n. <>id.+. Tuesday, as the day of Mars; செவ்வாய்க்கிழமை. மங்கலக் கிழமை தன்னிற கைப்பலி கொடுத்து (யசோதர.2, 58). |
| மங்கலகாரியம் | maṅkala-kāriyam n. <>maṅgala+. Festive, auspicious or joyous ceremony; சுபச்சடங்கு. (W.) |
| மங்கலகீதம் | maṅkala-kītam n. <>id.+. Music on auspicious occasions; சுபகாலங்களிற் பாடும் பாடல். மங்கலகீதம்பாட (கம்பரா. விடை கொடுத்த .5). |
| மங்கலகௌசிகம் | maṅkala-kaucikam n. <>id.+. (Mus.) A musical mode; ஓரிராகம். (W.) |
| மங்கலகௌசிகை | maṅkala-kaucikai n. <>id.+. (Mus.) See மங்கலகௌசிகம். (W.) . |
