Word |
English & Tamil Meaning |
|---|---|
| மங்கலச்செய்கை | maṅkala-c-ceykai n. <>மங்கலம்+. See மங்கலகாரியம். (W.) . |
| மங்கலச்சொல் | maṅkala-c-col n. <>id.+. 1. Auspicious word; சுபத்தைக் குறிக்கும் மொழி. (W.) 2. Language of benediction; 3. Particular words or their synonyms considered auspicious to begin a poem with, as tiru, pū, ulakam, etc.; |
| மங்கலசூத்திரம் | maṅkala-cūttiram n. <>maṅgala+. Twisted thread in which the tāli is strung; திருமங்கலியச்சரடு. |
| மங்கலத்திருநாள் | maṅkala-t-tiru-nāḷ n. <>மங்கலம்+. Holy day of festival; புண்ணியதினம். மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள் (மணி.10, 83). |
| மங்கலத்துகில் | maṅkala-t-tukil n. <>id.+. White cloth, as auspicious; வெண்டுகில். மங்கலத்துகிலை வாங்கி (சீவக.1146). |
| மங்கலதினம் | maṅkala-tiṉam n. <>maṅgala+. See மங்கலநாள். (W.) . |
| மங்கலதூரியம் | maṅkala-tūriyam n. <>id.+. See மங்களவாத்தியம். (W.) . |
| மங்கல நதி | maṅkala-nati n. <>id.+. Sacred river; புண்ணிய நதி. (W.) |
| மங்கலநாண் | maṅkala-nāṇ n. <>மங்கலம்+. See மங்கலசூத்திரம். நிறைநெடு மங்கல நாணோ (கம்பரா. நகர.2). . |
| மங்கலநாள் | maṅkala-nāḷ n. <>id.+. Auspicious day; சுபதினம். மங்கலநாட் கணித்தறிந்தனன் (உபதேசகா. சிவபுண்ணிய. 60). |
| மங்கலநானம் | maṅkala-nāṉam n. <>id.+ See மங்களஸ்நானம். (W.) . |
| மங்கலப்பாட்டு | maṅkala-p-pāṭṭu n. <>id.+. See மங்களகீதம். (W.) . |
| மங்கலப்பாடகர் | maṅkala-p-pāṭakar n. <>id.+. See மங்கலபாடகர். (திவா.) . |
| மங்கலப்பிரதை | maṅkala-p-piratai n. <>maṅgala-pradā. Turmeric; மஞ்சள். (சங். அக.) |
| மங்கலப்பொருத்தம் | maṅkala-p-poruttam n. <>மங்கலம்+. (Poet.) Rule of propriety by which a maṅkala-c-col is used at the commencement of a poem, one of ten ceyyuṇmutaṉ-moḷi-p-poruttam, q.v.; செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனுள் முதன்மொழியிடத்து மங்கலச்சொல் நிற்பது. (வெண்பாப். முதன்மொழி. 2) |
| மங்கலபத்திரம் | maṅkala-pattiram n. <>maṅgala+. Document between master and servant embodying the terms of the contract of service, which began with tiru, etc.; திரு முதலிய மங்கலச்சொற்களால் தொடங்கப்படுவதும், தலைவனும் பணியாளனும் உடன்பட்டுச் செய்துகொள்ளுவதுமான ஓப்பந்தப் பத்திரம். (சுக்கிரநீதி, 95.) |
| மங்கலபத்திரிகை | maṅkala-pattirikai n. <>id.+. Lefter of marriage invitation; திருமணவழைப்புப் பத்திரம். (W.) |
| மங்கலபாடகர் | maṅkala-pāṭakar n. <>id.+. Bards, encomiasts, panegyrists; அரசர் முதலியவரைப் புகழ்வோர். (பிங்.) |
| மங்கலபுருஷன் | maṅkala-puruṣaṉ n. <>id.+. 1. The proper man to conduct a festival or to communicate good tidings, as a married man; சுபகாரியஞ் செய்யத் தகுதியுள்ளவன். 2. A man who is ever happy; |
| மங்கலபேரிகை | maṅkala-pērikai n. <>id.+. Drum beaten on auspicious occasions; சுபகாலங்களில் முழக்கும் முரசம். (W.) |
| மங்கலம் | maṅkalam n. <>maṅgala. 1. Luckiness, auspiciousness, propitiousness; சுபம். குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்தி (சீவக. 488). 2. Achievement, means of accomplishment; 3. Splendour; 4. Good deed according to the šāstras; 5. Goodness; 6. Marriage; 7. Marriage badge; 8. Virtue; 9. Excellence; 10. Praise, panegyric; blessing; 11. (Gram.) See மங்கலவழக்கு. (நன். 267.) 12. The eight auspicious objects. 13. Auspicious suffix in the names of certain towns, as in Cīvara-maṅkalam; 14. Gathering; 15. Funeral oblation; |
| மங்கலம்பதினாறு | maṅkalam-patiṉāṟu n. <>மங்கலம்+. The sixteen auspicious paraphernalia, including sword, umbrella fan, conch, seat, the head ornament tiṟu, royal discus, and pots containing fragrant drugs, along with aṭṭamaṅkalam; அட்டமங்கலத்தோடு வாள். குடை, ஆலவட்டம், சங்கம், தவிசு, திரு, அரசியலாழி, ஒமாலிகை யென்ற எட்டுஞ்சேர்ந்த பதினாறு வகையான எடுபிடிகள். (பெருங். இலாவாண. 5, 26, அரும்.) |
