Word |
English & Tamil Meaning |
|---|---|
| மங்கலமகளிர் | maṅkala-makaḷir n. <>id.+. See மங்கலமங்கையர். மங்கலமகளிரொடு மாலைசூட்டி (புறநா. 332). . |
| மங்கலமங்கையர் | maṅkala-maṅkaiyar n. <>id.+. Women under coverture; சுமங்கலிகள். மங்கல மங்கையராய் மன்னவர் கன்னியராய் (பெருந்தொ. 969). |
| மங்கலமடந்தை | maṅkala-maṭantai n. <>id.+. 1. Married woman, as auspicious; சுமங்கலி. 2. See மங்கலாதேவி. மங்கலமடந்தை கோட்டத்து (சிலப். 30, 53). |
| மங்கலமரபு | maṅkala-marapu n. <>id.+. See மங்கலவழக்கு. (நன். 266, மயிலை.) . |
| மங்கலமாந்தர் | maṅkala-māntar n. <>id.+. Those who perform auspicious rites, as in a coronation; மங்கலகாரியங்களைச் செய்வோர் வந்துற்றெழு மங்கல மாந்தர்க டம்மை நோக்கி (பெரியபு. மூர்த்தி. 39). |
| மங்கலமுகூர்த்தம் | maṅkala-mukūrttam n. <>id.+. Auspicious hour; சுபவேலை. (W.) |
| மங்கலமுரசு | maṅkala-muracu n. <>id.+. See மங்கலபேரிகை. மங்கலமுரசின மழையினார்த்தன (கம்பரா. கடிமண. 41). . |
| மங்கலமுழவம் | maṅkala-muḷavam n. <>id.+. See மங்கலபேரிகை. மங்கலமுழவம் விம்ம (பாரத. திரௌபதிமாலை. 18). . |
| மங்கலமொழி | maṅkala-moḷi n. <>id.+. See மங்கலச்சொல். . |
| மங்கலவண்ணம் | maṅkala-vaṇṇam n. <>id.+. Whiteness, as the auspicious colour; மங்கலக்குறியான வெண்மைநிறம். மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து (தொல். பொ. 91, உரை). |
| மங்கலவணி | maṅkala-v-aṇi n. <>id.+. 1. Marriage badge; திருமங்கலியம் அகலுண் மங்கலவணி யெழுந்தது (சிலப், 1, 47, அரும்.). 2. Natural beauty; 3. White cloth of ornament, as worn at a wedding; |
| மங்கலவழக்கு | maṅkala-vaḷakku n. <>id.+ (Gram). Euphemism; employment of an auspicious word to denote an inauspicious thing, one of three takuti-vaḷakku, q.v.; தகுதிவழக்கு முன்றனுள் மங்கலமல்லாததை மங்கலமாகக்கூறும் வழக்கு. (நன். 267, உரை.) |
| மங்கலவள்ளை | maṅkala-vaḷḷai n. <>id.+ A poem about a lady of noble birth, in nine veṇpās; உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாவால் வகுப்புறப் பாடும் பிரபந்தம். (இலக். வி. 828.) |
| மங்கலவார்த்தை | maṅkala-vārttai n. <>id.+. (W.) 1. Auspicious language; சுபவசனம். 2. Good news; |
| மங்கலவாரம் | maṅkala-vāram n. <>id.+. 1. Auspicious day, as Monday or Wednesday, or a day when there is a favourable configuration of the planets; நல்லநாள். (W.) 2. See மங்களவாரம். |
| மங்கலவாழ்த்து | maṅkala-vaḷttu n. <>id.+ 1. Salutation, praise, especially in the opening or the conclusion of a poem; பிரபந்தத்தின் முதலில் அல்லது இறுதியிற் செய்யப்படும் துதி. (சி.சி.பாயி. 1, சிவஞா.) 2. Wedding benediction; |
| மங்கலவினை | maṅkala-viṉai n. <>id.+. See மங்கலகாரியம். (W.) . |
| மங்கலவினைஞன் | maṅkala-viṉaiaṉ n. <>id.+. 1. Barber, as doing auspicious work; நாவிதன். 2. See மங்கலபுருஷன், 1. (W.) |
| மங்கலவெள்ளை | maṅkala-veḷḷai n. <>id+. 1. Poem on a chaste lady of noble birth in nine mixed stanzas of veṇpā and vakuppu metre or one kali-veṇpā or nine stanzas either in veṇpā or vakuppu metre, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலேனும். கலிவெண்பா ஒன்றினாலேனும், ஒன்பது வெண்பாக்களாலேனும், ஒன்பது சந்தங்களாலேனும் உயர்குடிப்பிறந்த கற்புடை மடந்தையைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (பன்னிருபா. 300-302.) 2. Sandal paste, as used on auspicious occasions; |
| மங்கலவேளை | maṅkala-vēḷai n. <>id.+. See மங்கலமுகூர்த்ம். (W.) . |
| மங்கலன் | maṅkalaṉ n. <>maṅgala. 1. The planet Mars; செவ்வாய். (பிங்.) 2. See மங்கலியன். (W.) |
| மங்கலஸ்நானம் | maṅkala-snāṉam n. <>id.+. 1. Bath at the commencement of an auspicious ceremony; சுபகாரியந் தொடங்கும் போது செய்யும் நீராட்டம் (யாழ். அக.) 2. See மங்களஸ்நானம், 2. Colloq. |
