Word |
English & Tamil Meaning |
|---|---|
| மங்களாசாசனம் | maṅkaḷācācaṉam n. <>maṅgalāšāsana. 1. Invocation of blessings by great persons; நன்மையை வேண்டுகை. மங்களாசாசனத்தின் மற்றுள்ள வாழ்வார்கள், தங்களார் வத்தளவு (உபதேசரத். 18). 2. Benediction on a sacred place, as by Aḷvārs, etc.; 3. Worship by great men; |
| மங்களாசாரம் | maṅkaḷācāram n. <>maṅgalācāra. See மங்கல வாழ்த்து. மங்களாசாரமுரம்பெறு வேதமோதிலக்கணத்தில் (பிரபோத. 11, 4). . |
| மங்களாட்சதை | maṅkaḷāṭcatai n. <>maṅgalākṣata. unbroken grains of rice mixed with turmeric, used in benediction and auspicious rites. See அட்சதை, 1. . |
| மங்களாரத்தி | maṅkaḷāratti n. <>மங்களம் + ஆரத்தி. 1. Waving of camphor before a deity; கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கர்ப்பூரஆர்த்தி. 2. Ceremony of waving turmeric water in a dish on auspicious occasions; |
| மங்களாலத்தி | maṅkaḷālatti n. See மங்களாரத்தி. மங்களாலத்தி யானவடனே வட்டிலிலே திருப்படிக்கத்தை முகந்து (கோயிலொ. 59). . |
| மங்களாலயை | maṅkaḷālayai n. <>maṅgalālayā. The river Tāmiraparuṇi; தாமிரபருணி. (நாமதீப. 525.) |
| மங்களான் | maṅkaḷāṉ n. A breed of horse; குதிரைச்சாதிவகை. (அசுவசா. 151.) |
| மங்களாஷ்டசம் | maṅkaḷāṣṭakam n. <>maṅgalāṣṭaka. The eight lines of vēdic mantras of svasti-vācana pronounced by a priest in blessing a newly-wedded pair; விவாககாலங்களில் மணமக்களை ஆசீர்வதித்துப் புரோகிதர் கூறும் எட்டுவாக்கியங்கொண்ட சுவஸ்திவாசன மாகிய வேதமந்திரம். |
| மங்களூரோடு | maṅkaḷūr-ōṭu n. Calicuttiles, as from Mangalore; ஒருவகைத் தட்டோடு. |
| மங்களை | maṅkaḷai n. <>maṅgalā. 1. See மங்கலை1, 3. மலைமக ளிகுளை மங்களை மண்டபமிழைத்து (காஞ்சிப்பு. மாகாத். 35). . 2. A period of human life; 3. (Astrol.) A direction in yōkiṉi; |
| மங்கனிறம் | maṅkaṉiṟam n. <>மங்கல்+. Dim or dingy colour; மங்கின நிறம். |
| மங்காமைகாத்தான் | maṅkāmai-kāttāṉ n. <>மங்கு-+ஆneg.+. A kind of paddy; நெல்வகை. சீரிய லழகியவாணன் மங்காமைகாத்தான் (பறாளை. பள்ளு. 24). |
| மங்கிணி | maṅkiṇi n. <>மழுங்குணி. [T. maṅku.] 1. Extremely dull person; மிக்க மந்தபுத்தியுள்ளவ-ன்-ள். 2. Mean, worthless person; |
| மங்கிலம் | maṅkilam n. <>maṅkila. Forest fire; காட்டுத்தீ. (யாழ். அக.) |
| மங்கு - தல் | maṅku- 5 v. intr. [K. maggu.] 1. To grow less; to diminish; குறைதல். தாகமங்குத லின்மையால் (விநாயகபு. 80, 94). 2. To become dim, as light or eye-sight; 3. To grow pale; to loose lustre; 4. To be obscured, as splendour, glory, fame; to fade, as beauty; to decline in prosperity, as a religion; to be reduced in circumstances, power or authority; 5. To be deprived of freshness, as the countenance; to grow wan or sallow; 6. To decay; to be ruined; 7. To die, perish; |
| மங்கு 1 | maṅku n. <>மங்கு-. 1. Ruin, loss; கேடு. 2. [T. maṅgu, K. baṅku.] Black spots on the face; |
| மங்கு 2 | maṅku n. cf. maṅkura. Polished earthen jar; சாடி. Loc. |
| மங்குங்காலம் | maṅkuṅ-kālam n. <>மங்கு-+. Time of dearth or adversity; unpropitious season; தீமைக்காலம். மங்குங் காலத்தில் மா: பொங்குங் காலத்திற் புளி. |
| மங்குசனி | maṅku-caṉi n. <>id.+. (Astrol.) The first period of 7 1/2 years' when Saturn abides in the 12th, 1st and 2nd house from a person's cantira-rāci, indicating misfortunes; ஒருவனுடைய வாழ்நாளில் முதலில்வந்து தீமைசெய்யும் ஏழரையாண்டுச்சனி. |
| மங்குரம் | maṅkuram n. <>maṅkura. Crystal quartz; பளிஞ்கு. (யாழ். அக.) |
| மங்குல் | maṅkul n. <>மங்கு-. 1. Cloud; மேகம். (திவா.) மங்குறோய் மணி மாட... நெடு வீதி (தேவா. 41, 7). 2. Fog; 3. Sky; 4. Night; 5. Darkness; 6. Point of the compass; |
